ஓர் நாள் இரவு கள்ளனுடன்.... கற்றுத்தந்தது பாடம்......

காலம்:- 20 - 02 - 2010 .
இடம்:- வவுனியா

நேரம்:- சரியாகத் தெரியவில்லை....

மாடிப்படியில் யாரோ இடறியோடுகிற சப்தம், மர இலைகள் உலுக்கப் படுகிற சப்தம், நாய் குரைக்கும் சப்தம் இவை கணநேர தொடர் நிகழ்வுகள்....

திடுக்கிட்டுப் போனேன்...

உஸ்... அமைதி..

மீண்டும் யாரோ வீட்டை நோக்கி வருவது போல் தோன்றுகிறது...

கனவா ?... பிரம்மையா..... என எண்ணியவாறு உறுதிப்படுத்திக்கொள்ள என் உடம்பில் கிள்ளிப் பாரக்க முயற்சிக்கிறேன்...
பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது...
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்..
ம் ஹீம்.. முடியவில்லை... பின்னர் ஓர் கடுமையான விசையை பிரயோகித்து கிள்ளிப் பாரக்கிறேன்... ஆம் நிஜம் தான்...

இவற்றுக்கிடையில் மீண்டும் காலடிச் சப்தம்... கால், கைகள் உணர்விழந்து காணப்படுகின்நது..
படக்... படக்.. நெஞ்சு..

வழமையாக இரவில் பூட்டும் வெளிக்கதவை பூட்ட மறந்தது ஞாபகம் வருகிறது... ஆ... மீண்டும் பின்னுக்கு ஏதோ தடக்குப் படும் சப்தம்...

இதயம் "ஊறவைத்த அரிசியை கல்லுரலில் இடிப்பதைப் போல்" துடிக்கிறது.. திருடன் தான் என ஊகிக்கிறேன்...

ஒரு வேளை பேய்? ஆகா நேற்று முன்வீட்டு ஆசாரி சொன்ன பாதிரியார் கதையும் ஞாபகத்திற்கு வருகிறதே.... ச்சீ...
என்றாலும்.... ?..
இவற்றை விட வேற்றுக்கிரக வாசிகள் .. மேலதிக ஓர் ஊகிப்பு...

நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை... அருகிலுள்ள தம்பியை எழுப்ப முயல்கிறேன்...
எதற்கும் தூக்கத்திலே புரள்வது போல் (காட்டிக்கொள்ளாமல்) அவனருகிலே செல்கிறேன்...
மீண்டும் கடும்விசையை பிரயோகித்து பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இணைப்புக்கொடுத்து கிள்ளி எழுப்புகிறேன்... மெதுவாக...

" டேய் ஏதோ சப்தம் கேட்குது....." என்கிறேன்...
அவன் " என்னது .. நித்திரை வராட்டி ஏதாவது எடுத்துப்படி சும்மா சின்னப்பிள்ளையள் மாதிரி ..." என சினக்கிறான்...

காரணம் முன்னொருமுறை அந்த ஆங்கிலப் படத்தை பாரத்ததிலிருந்து ஒருவருமே கொஞ்ச நான் இரவில் வெளியில் வெளிக்கிடுவதில்லை... அப்ப நான் கொஞ்சம் துணிவாக எல்லோரையும் வெருட்டிப் பார்த்தேன்..
இப்படி 2, 3 தடவை வெருட்டிய ஞாபகம்.
எனவே இவன் அதைப் போல் தான் எண்ணுகிறான்....
இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சிக்கிறேன்... அவனிடமிருந்து அதிகாரம் பலக்க, இது வேலைக்காவாது என எண்ணியவாறு நான் மீண்டும் எனது பொய்சனுக்கு வருகிறேன்.....

தம்பி மீண்டும் வழமைக்கு திரும்புகிறான்(குறட்டை) .

கைப்பேசியில் நேரத்தை பாரப்போமா?..
நோ....... ஒரு வேளை கைப்பேசி வெளிச்சம் என்னை அடையாளம் காட்டிவிட்டால்...?
கைப்கேசியை தலையணைக்கருகில் வைத்துவிடுகிறேன்...

திடீரென..
டிங்.. டொய்.. டிங்.. ... கைப்பேசி...." attention... your battery is too low" என்கிறது...
" இதய அடிப்பு கணிதத்தில் வருகிற அத்தனை வரைபுகளையும் காட்டியது.."

ஊகிப்பு 2 பேய்.. எனக்கு விடும் "message" "ஆக இருக்குமோ..?
பயத்தின் உச்சத்தில் மாடியில் உறங்கும் சுதன் அண்ணனை உரத்து கூப்பிட முயல்கிறேன்.....

சு.....
இதற்கு மேல் நாவு இசைய மறுக்கிறது... வேறென்ன காத்துத்தான்.
..ஸ்.. ஸ்..

வேறு வழியின்றி வழமைபோல் மேலிடத்திற்கு பிரார்தனையில் இறங்குகின்றேன்.....

"மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக நம்புகின்றேன்.. இச்சக்தியை சிவன் என்றும் , அல்லா என்றும், கிறித்து என்றும் ஒவ்வொருவரும் அழைக்கின்றனர் அந்தச் சக்தியே என்னை காப்பாத்து"....
என புத்திசாலித்தனமான வேண்டிக்கொள்கிறேன்...

சற்று நேரம் மன பாரம் ,பயம் கொஞ்சம் குறைந்த உணர்வு...
இதய துடிப்பு ஓரளவு இழிவுப்புள்ளியை அடைந்து சீராகின்றது...
அப்போது ஆன்மீகத்தின் மகத்துத்தையும் உணர்கின்றேன்.

மனப்பாரத்தை கடவுளிடம் இறக்கிவிட்ட நிம்மதி ..

சட்டென
மீண்டும் யாரோ பின்பக்கம் சருகுகளிற்கிடையே அரையும் சப்தம்.. மனத்திரையில் "டக் டிக் பொய்சனில் .." அரைவதாக தோன்றுகிறது...

சுயமாக எந்த முடிவும் எட்ட முடியவில்லை....
ஈற்றில் தூக்கம் போலவே பாவனை செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறேன்... ( யாரென சரியாக முடிவெடுக்க முடியாதலால்.)

டேய் இலங்கன் உயிரா? பொருளா முக்கியம் என சமன் செய்து சீர்தூக்கின் உயிரே ... உயிரே.. என முடிவெடுத்து போர்வைக்குள் உயிரையும் வெளியே சப்தத்தையும் அவதானித்தவாறு படுத்துக்கொள்கிறேன்..

"மனித கேள்தகவெல்லையிலும் கூடிய குறைந்த ஒலிகள் யாவும் காதில் கேட்கின்றன.."

நீருக்குள் தம் புடித்து இருப்பது போல் ஓர் உணர்வு...
விடியட்டும் பாப்பம்...

கொஞ்சம் நிலம் வெளிக்க எழுப்பி வெளியில் வருகிறேன்....

எனக்கு முன் இருவர் பக்கத்து வீட்டு வேலியோரமாக கதைத்துக்கொள்கின்றனர்.. தீர விசாரிக்கையில் முன் ரோட்டு கடை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாம்......
வீதியில் யாரோ இதை அவதானித்து துரத்திக்கொண்டு வர , நாய்களும் இணைய வழி தெரியாமல் திருடர்கள் திக்கின்யி ஓடியிருக்கிறாரகள்..

அதில் ஓரிருவர் தான் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்திருக்கின்றனர்... என ஊகிக்க முடிந்தது...

ஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்......
இருப்பினும் இவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆன்மீகத்தில் பிரார்தனையின் மகத்துவம், பேயக்காட்டு விளையாட்டு பின்னர் ஆபத்தில் கைகொடுக்காது என்கிற பாலர் வகுப்பு படிப்பினை கதையையும் உறைக்கும் படி உணர்த்திற்று....

மு.கு:- வவுனியா தொழிநுட்ப நகரமாக்க அறிவித்ததிலிருந்து திருட்டுக்கள்,கொள்ளைகள் அதிகரித்துவிட்டன...

முக்கியமாக சைக்கிள் திருட்டுக்கள் தான் அதிகம் எங்கள் வீட்டிலிருந்தும் இரண்டு சைக்கிள்கள் திருடருக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது இலங்கை வங்கிக்கு முன்னால்..........

11 comments:

கன்கொன் || Kangon செவ்வாய், பிப்ரவரி 23, 2010 6:22:00 முற்பகல்  

//ஓர் நாள் இரவு கள்ளனுடன்....//

தலைப்பைப் பார்த்ததும் கோவா படமோ எண்டு நினச்சிற்றன்... :P

//பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது..//

இரசித்தேன் நண்பா...


//இவற்றை விட வேற்றுக்கிரக வாசிகள் .. மேலதிக ஓர் ஊகிப்பு...//

மீண்டும் ஒரு இரசிப்பு.


//தம்பி மீண்டும் வழமைக்கு திரும்புகிறான்(குறட்டை) //

ஹா ஹா ஹா....


//"மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக நம்புகின்றேன்.. இச்சக்தியை சிவன் என்றும் , அல்லா என்றும், கிறித்து என்றும் ஒவ்வொருவரும் அழைக்கின்றனர் அந்தச் சக்தியே என்னை காப்பாத்து".... என புத்திசாலித்தனமான வேண்டிக்கொள்கிறேன்... //

தெய்வமே.... !


நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இலங்கன்...
கலக்கலாக உள்ளது...
வாழ்த்துக்கள்...

இலங்கன் செவ்வாய், பிப்ரவரி 23, 2010 7:00:00 முற்பகல்  

//பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது..//

இரசித்தேன் நண்பா...
நான் பட்ட துன்ப துயரங்களை எழுதியிருக்கிறேன் இதை ரசித்தீர்களோ...? நல்லா இருக்கு...ம்... ஆனால் கோபி இலங்கன் ஓர் பயந்தாங்கொள்ளி என்று மட்டும் எண்ணிக்கொள்ளவேண்டாம் ... (இந்தப் பதிவை வீட்டுக்கருகில் இருப்பவர்கள் பாரத்தால் அதுக்காக சொன்னோன் இரகசியமாக...)

பெயரில்லா செவ்வாய், பிப்ரவரி 23, 2010 9:07:00 முற்பகல்  

summa porda madaya

புல்லட் செவ்வாய், பிப்ரவரி 23, 2010 12:26:00 பிற்பகல்  

ஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்...... //
ஹாஹாஹா!


நல்லாருந்திச்சு.. :)

Subankan செவ்வாய், பிப்ரவரி 23, 2010 12:49:00 பிற்பகல்  

ஆகா சூப்பர்

ஓகோ சூப்பர்

நல்லாருக்கு இலக்கா

இலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:00:00 முற்பகல்  

//பெயரில்லா கூறியது...//

ஹா.. ஹா...
ஓகே.. ஓகே....
நன்றி நன்றி..

இலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:02:00 முற்பகல்  

புல்லட் கூறியது...

//ஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்...... ஃஃ
ஹாஹாஹா!

நல்லாருந்திச்சு.. :)//

வாங்கோ அண்ணா.. வாங்கோ.. இப்பல்லாம் நம்ம சோககதை தான் மற்றவர்க்கு ரசிக்கும்படி ஆகுது பாருங்கோ.... ம்..
நன்றி நன்றி...

இலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:05:00 முற்பகல்  

Subankan கூறியது...

// ஆகா சூப்பர்

ஓகோ சூப்பர்//

ஆகா கட்சி சேர்ந்திட்டாங்களே....
"லங்கா இனித்தான் நீ அலாட்டாகணும்.."
. ம்... இரகசிய ஒப்பந்தங்கள் எல்லாம் கைச்சாத்திட்டிருக்காங்கோ....
சுபாங்கண்ணா நீங்களுமா?...

Bavan வியாழன், பிப்ரவரி 25, 2010 6:43:00 முற்பகல்  

//இருப்பினும் இவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆன்மீகத்தில் பிரார்தனையின் மகத்துவம், பேயக்காட்டு விளையாட்டு பின்னர் ஆபத்தில் கைகொடுக்காது என்கிற பாலர் வகுப்பு படிப்பினை கதையையும் உறைக்கும் படி உணர்த்திற்று....//

அதே உண்மைதான் பேய் என்று ஒன்று இருக்கு என்று அந்தக்காலத்தில உருவாக்கிய வதந்தியாலதான் இன்னும் இருட்டில் போக பயப்படுகிறோம்..

சம்பவம் கலக்கல் சில இடங்களில் பயமுறுத்திவிட்டீர்கள்(பவனும் பயந்தாங்கொள்ளி அல்ல..:p)

எழுதிய பாணி கலக்கல் அண்ணே..;)

ஆனா எனக்கு உங்கள மாதிரி சத்தம் கேட்டா முழிப்பு எல்லாம் வராது.. நித்திரை கொண்டால் கும்பகர்ணன் மாதிரித்தான்..ஹிஹி

இலங்கன் வெள்ளி, பிப்ரவரி 26, 2010 4:00:00 முற்பகல்  

Bavan கூறியது
//அதே உண்மைதான் பேய் என்று ஒன்று இருக்கு என்று அந்தக்காலத்தில உருவாக்கிய வதந்தியாலதான் இன்னும் இருட்டில் போக பயப்படுகிறோம்..//

உண்மை அது போக இந்த ஆங்கிலப்படங்கள் இன்னும் மிகைப்படுத்த ஆத்திரம் அவசரம் எல்லாம் இரவில் தடை தான்...

//சம்பவம் கலக்கல் சில இடங்களில் பயமுறுத்திவிட்டீர்கள்(பவனும் பயந்தாங்கொள்ளி அல்ல//

நீங்களும் என்னை மாதிரி வெளிப்'படையாக பேசுறீங்க போல...
பயப்படக்கூடாது எதுக்கு பயப்படணும்..?

//எழுதிய பாணி கலக்கல் அண்ணே..;)//

அப்பிடியா... லேனாவின் பயணக்கட்டுரை, மற்றும் அந்த ராணி புத்தக கதைகளின் அச்சு அசல் பாணி...ஹி.. ஹி..

//ஆனா எனக்கு உங்கள மாதிரி சத்தம் கேட்டா முழிப்பு எல்லாம் வராது.. நித்திரை கொண்டால் கும்பகர்ணன் மாதிரித்தான்..ஹிஹி//

அப்பியோ அப்பு கொஞ்சம் தங்கள் வீட்டு முகவரியைத் தரமுடியுமோ?... ஹஹி..ஹீ

www.bogy.in ஞாயிறு, மார்ச் 07, 2010 4:54:00 முற்பகல்  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.