ஒருவர் லஞ்சம் வாங்க எப்படி கற்றுக்கொள்கிறார்? (நகைச்சுவை)

புதன் காலை லோசன் அண்ணாவின் விடியல் நிகழச்சி கேட்டுக்கொண்டிருந்த போது,
நிகழ்ச்சியில் யருமையான், அவசியமான ஒரு கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்.
அதாவதுஇலங்கையில் அதிகமாக லஞ்சம் வாங்குபவர் எந்தத் துறையினர்? ”; என.
புலர் தொடர்புகளை மேற்கொண்டு பல துறைகளை சுட்டிக்காட்டினர்.
ஆக மொத்தத்தில் எல்லாத்துறையினருமே லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற பொது முடிவுக்கும் வரமுடிந்தது.

நுpகழ்ச்சியை கேட்டாப்பிறகு சிங்கம் இலங்கன் ஒரு சமூக நோக்குடன்எப்படி இவ்வாறான உயர் பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்க கற்றுக்கொண்டார்கள்? ” என எனக்கு நானே கேள்வியை கேட்டபோது ஓர் அருமையான நகைச்சுவையான விடையும் பிறந்தது.
(நகைச்சுவைக்காக மட்டும்)

அதாவது சின்னவயசில பிள்ளையள் குழப்படி செய்தால் தாய் தந்தையர் டொபி வேண்டித்தாறன் குழப்படி செய்யாதே?

நீ நான் சொல்லுகிற படி நடந்தால் பிஸ்கட் வாங்கித் தருவன். ஏண்டு பிள்ளைகளுக்கு சின்னனிலேயே லஞ்சம் குடுத்துப் பழக்கினதால் தான் அதுகள் பெரிசா வளர்ந்து பெரிய பதவிக்கு வந்தாப்பிறகும் லஞ்சம் கேட்குதுகள்.

சுpன்னப்பிள்ளையளுக்கு சின்னனிலேயே அமைதியாக ஒரு விசயத்தை விளங்கப்படுத்தி அப்பிடி செய்யாதே இப்பிடிச் செய்யதால் இது நடக்கும் என்று விளங்கப்படுத்திறதை விட்டுட்டு பெற்றார் பஞ்சி அலுப்பைப் பாத்து அழுகிற பிள்ளையை அழாமல் செய்ய சொக்லேட் குடுத்தால் சிரிப்பான் என லஞ்சம் குடுத்துப் பழக்கறது.

புpன்னர் அந்தப்பிள்ளை வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு முன்னேறினால் பிறகு (லஞ்சம் தொடர்பான போதிய அறிவு இல்லாத அந்தப்பிள்ளை)
அந்தப்பிள்ளை பள்ளிக்கூடம் போகும் போது படிப்பிக்கிற ரீச்சர், பிள்ளை பாத்து நல்லாப்படிச்சால், கூட மாக்ஸ் எடுக்கிற பிள்ளைக்கு பெரிய பரிசு தருவன் என்றுஊக்கப்படுத்துகிறேன்என்கிற பேரில் பிள்ளைக்கு லஞ்சம் கொடுப்பார்.

(பின்னர் அந்தப்பிள்ளை லஞ்சத்தின் அருமை பெருமைகளை புரிந்துகொண்டு லஞ்சம் தொடர்பான போதிய அறிவை பெற்ற பின்னர்)
பிறிபக்ற்மாணவ தலைவன் ஆகிய பின்பு பள்ளியில் தெரிந்தவர்களை மன்னித்து தெரியாதவர்களுக்கு தண்டனை வழங்குதல், தெரிந்தவருக்கு முன்னுரிமை (தன்னுடன் நட்பானவர்களுக்கு) , அதிகாரம், அடிமைப்படுத்தும் தன்மை போன்ற அரசியல் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்கிறான்.

ஆத்தோடு ஏதாவதொன்றை பெற்றுக்கொண்டு (லஞ்சம் சார்ந்த) என்னைப் போன்ற மாணவர்களை பாடசாலை சுவரேறி பாய அனுமதிக்கிறான்.

புpன்னர் அந்த மாணவன் இவ்வாறாக பாடசாலை கல்லியை முடித்து வேலை தேடி உயர்மட்ட அதிகாரிகளுக்கு மேலாலையும் கீழாலையும் கொடுத்து பட்ட பிறகு,
ஓர் அரசாங்க அல்லது உயர் பதவியொன்றுக்கு வந்ததன் பின்னர் தான் குடுத்ததை பெற்றுக்கொள்ளவும், மேலும் பெற்றுக்கொள்ளவும் மிகத்திருத்தமாக தான் கற்றுக்கொண்ட விடயங்களை மக்களிடம் பிரயோகிக்கின்றான்.

இது தான் லஞ்சம் வாங்குபவன் எப்படி லஞ்சம் வாங்க பழகிக்கொண்டார் என்கிற ரகசியம்.

இலங்கையிலும் இந்தியன் தாத்தாவைப் போல் ஒரு இலங்கன் தாத்தா அவசியப்படுகிறது.

(என்னை சுவரேறி பாய அனுமதி தந்த எந்தவொரு மாணவ தலைவனையும் புண்படுத்துவதற்கான பதிவு இல்லை இது)

………………………………………………………………………..
ஞாபகத்திற்கு வரும் 13ம் திகதி பதிவர் சந்திப்பு சீசன்-2 அனைவரும் வருக. நானும் வாறேன்.

7 comments:

Unknown வியாழன், டிசம்பர் 10, 2009 4:32:00 முற்பகல்  

அடடா……… உங்கயிருந்த இலஞ்சம் கொடுக்கும் பழக்கம் வந்திருக்கு. இது, நகைச்சுவைப் பதிவு மட்டுமல்ல நல்ல விடயத்தையும் சொல்லிச் சென்றுள்ளது இலங்கன்.

ilangan வியாழன், டிசம்பர் 10, 2009 4:47:00 முற்பகல்  

நன்றி நன்றி மருதமூரான் அண்ணாவிற்கு. எதையும் சமூக நோக்குடன் பாரக்கும் போது இப்படியான பல விடயங்கள் வெளிப்படும்.

Unknown வியாழன், டிசம்பர் 10, 2009 6:11:00 முற்பகல்  

உண்மையாகவே நாங்கள் சிந்தித்துப் பார்க்க மறுக்கும் விடயம் இலங்கன்.
சிறுவயதில் பெற்றோர்கள் உண்மையாக கவனமாக இருக்க வேண்டும்.

இதை நகைச்சுவை என்று போடாமல் இன்னும் கொங்சம் சீரியஸாக எழுதியிருக்கலாம் நண்பா.....

நல்ல பதிவு இலங்கன்...

தர்ஷன் வியாழன், டிசம்பர் 10, 2009 7:32:00 முற்பகல்  

நல்ல ஆய்வு
தொடரட்டும் உங்கள் பணி

ilangan வியாழன், டிசம்பர் 10, 2009 7:52:00 முற்பகல்  

கனககோபி
//இதை நகைச்சுவை என்று போடாமல் இன்னும் கொங்சம் சீரியஸாக எழுதியிருக்கலாம் நண்பா.....//


நன்றி நண்பா உங்கள் கருத்துரைக்கு.
நான் சீரியஸ் பதிவு எண்டு போட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்காகத் தான் நகைச்சுவை பதிவு எண்டு போட்டனான்.

ilangan வியாழன், டிசம்பர் 10, 2009 7:55:00 முற்பகல்  

தர்ஷன்
//நல்ல ஆய்வு
தொடரட்டும் உங்கள் பணி//

யப்பா உங்கட தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் ஆய்வை விடபெரிய ஆய்வா இது. அருமையான பதிவிட்டிருந்தீர்கள் பின்னூட்டமுயற்சித்தேன் முடியவில்லை.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ம.வேணுதன் செவ்வாய், ஜனவரி 05, 2010 10:19:00 முற்பகல்  

வணக்கம் இலங்கன்..,
நான் இங்க புதுசு.., உங்கள் பதிவுகள் யாவும் அருமை.,வாழ்த்துக்கள்.
// மாணவ தலைவன் ஆகிய பின்பு பள்ளியில் தெரிந்தவர்களை மன்னித்து தெரியாதவர்களுக்கு தண்டனை வழங்குதல், தெரிந்தவருக்கு முன்னுரிமை (தன்னுடன் நட்பானவர்களுக்கு) , அதிகாரம், அடிமைப்படுத்தும் தன்மை போன்ற அரசியல் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்கிறான்//
இதுதான் எங்கயோ உதைக்குது. உம்மை சுவரேறி பாய அனுமதி தந்த அந்த மாண்புமிகு மாணவ தலைவன் ஆர் எண்டு அடியேன் தெரிஞ்சுகொள்ளலாமா?

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.