வன்னி இடப்பெயர்வுகள் (சொல்லப்படாதவை)

சிங்கம் வவுனியாவிற்கான தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது,
வவுனியாவில் இருக்கிற சில சொந்தங்கள் பந்தங்கள் வீடுகளுக்கும் போகவேண்டியிருந்தது.

அங்கே ஒவ்வொரு வீட்டிலயும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்கள் இருந்தன.(அதாவது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்த சொந்தங்கள் உறவிணைப்பின் மூலமாக தற்போது வவுனியாவில் இருக்கிறார்கள்)
இவர்களையும் சந்திக்க வாயப்புக்கிடைத்தது.


ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட துன்பங்களையும், அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

பெரிதாக சொந்தங்கள் ஒன்றுக்கும் பாரிய இழப்புகள் இல்லாவிட்டாலும் இறுதிநேரம் வரை வன்னியிலிருந்தவர்கள் என்பதால் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு குண்டுகளின் பெயரையும், அவற்றின் தன்மை, விமானங்களின் பெயர்கள், அவற்றிலுள்ள குண்டுகளின் எண்ணிக்கை இவையனைத்தும் விமானம் ஓடுறவனுக்கு தெரியுமோ தெரியாது ஆனால் வன்னியிலிருந்து வந்த சிறுவர்களுக்குக் கூட தெரியும்.


இடம்பெயர்ந்த மக்களிடத்தில் ஒரு வித சலிப்புத் தன்மையும், விரக்கியும் அவர்கள் பேசுகின்ற பேச்சின் மூலமாக தெரிந்து கொள்ளமுடிந்தது.
ஏதோ ஒரு சன்னியாசி,துறவிகள் பேசுகின்ற மாதிரி அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.

மக்கள் இடம்பெர தொடங்க முன்னமே பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை காத்துக்கொள்ள இளவயதினர்க்கு திருமணம் வலுக்கட்டயாமாக செய்து வைத்திருக்கிறார்கள்.(இங்கிருந்து காப்பாற்றிக் கொள்ள)


பின்னர் இறுதிக்கட்ட இடப்பெயர்வின் போது யுத்த சூனியப்பிரதேசமாகன அறிவிக்கப்பட்ட இடங்கள், வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலுமே குண்டுகள் வந்து விழுந்ததாம்.(ஆங்கே இருந்து)
இங்கே ஆங்கே என்பவற்றின் விரிவை அவற்றின் முதல் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்)

காயம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களிள் வைத்தியசாலையில் குண்டு வீழ்ந்து பலர் இறந்ததாகவும் சொன்னார்கள்.(மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மதித்த கதை)

சாப்பாட்டுத் தட்டுப்பாட்டை பற்றி நான் கேட்க ஒருவர் சொன்னதுசெல் குண்டுகளால் பாதிக்கப்பட்டதை விட தான் சாப்பாட்டால் தான் அதிகம் பாதிக்கப்பட்டது என.

அதாவது முள்ளிவாய்க்காலில் தேங்காய் 1500 ருபாவுக்கு விலை போன நேரத்திலை சிலர் தங்கடை கழுத்திலை காதிலை இருந்ததை குடுத்து தேங்காய், சீனி வாங்கினதுகளாம்.(வங்கிகள் செயற்படாமல் இருந்த சமயம்)

வாகனம் வைச்சிருந்த சிலர் தங்களுடைய வாகனங்களை கொடுத்து வான் வைச்சிருந்தவர்கள் தங்களுடைய வானை கொடுத்து 5 தேங்காய் வாங்கியதாகவும், ஆட்டோவைக் கொடுத்து 1ஃ2 கிலோ சீனி வாங்கினதாகவும் சொன்னார்கள்இ

இப்படி பல வியப்பான சம்பவங்கள்.

எந்தப் பக்கத்திலிருந்து சனத்துக்கு அதிகம் பாதிப்பு என நான் ஒரு துணிவான கேள்வி கேட்க,"இங்கிருந்தும் சுட்டார்கள்ஆங்கிருந்தும் சுட்டார்கள்:என்றனர்.இங்கே ஆங்கே என்பவற்றின் விரிவை அவற்றின் முதல் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்

துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும் என்கிற சினிமாப்பட டயலொக்குகளின் உண்மைத்தன்மையை உணரமுடிந்தது.
கடைசி நேரத்திலை மனிதர்கள் மிருகங்களானதையும், மிருகங்கள் மனிதரானதையும் பார்த்தாக சொன்'னார்கள்.

அவர்கள் உருகச் சொல்லிக்கொண்ட விடயம் இனியொரு யுத்தம் வேண்டாம் என்பதை தான்.தாங்கள் அவ்வளவு பாதிக்ப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இனியும் நாங்கள் தன்மானம், வீரம் பேசுறதை நிறுத்தி இடம்பெயர்;த மக்களுக்கு ஆறுதல் சொல்லுவோம்.

அவர்கள் வழமை நிலைக்கு விரைவில் வர பிரார்திப்போமாக. இனிவரும் சந்ததியாவது துப்பாக்கி அறியாத சந்ததியாக உருவாகட்டும்.

9 comments:

Unknown திங்கள், டிசம்பர் 07, 2009 12:42:00 பிற்பகல்  

நண்பா....
உங்கள் தைரியத்தை முதலில் பாராட்டுகிறேன்....

உங்களுக்கு நான் பின்னூட்டமிடும்போதே ஒரு மறைவாக்கு வந்துவிட்டிருந்தது,...

நான் என்னத்த சொல்ல....

உண்மையைச் சொல்லப்போனால் ஏற்கிறார்கள் இல்லை....

உங்கள் வெளிப்படையான பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா....

பாதிக்கப்பட்ட உறவுகள் இனியாவது மகிழ்ச்சியாக வாழட்டும்.....

Subankan திங்கள், டிசம்பர் 07, 2009 12:51:00 பிற்பகல்  

சிலரை நானும் சந்தித்திருக்கிறேன் நண்பா, அவர்கள் சொன்னது வார்த்தைகளில் வடிக்கமுடியாதது

தர்ஷன் திங்கள், டிசம்பர் 07, 2009 2:10:00 பிற்பகல்  

சத்தியமான கருத்து
ஆனால் அதை ஏற்கும் பக்குவம்தான் நம்மவருக்கு இல்லை நம்மாட்களின் பதிவுகளையும் தலைப்புகளையும் பாருங்களேன். உங்கள் இந்த பதிவுக்கு யாழ்தேவியில் மைனஸ் ஓட்டுவேறு

என்ன கொடும சார் செவ்வாய், டிசம்பர் 08, 2009 2:08:00 முற்பகல்  

மக்களுக்கு நிம்மதியான வாழ்வு தேவை..

ilangan செவ்வாய், டிசம்பர் 08, 2009 6:45:00 முற்பகல்  

நன்றி கோபி உங்கள் கருத்துரைக்கு. பாதிக்கப்படாமல் வெளியில் இருந்து வீரம் பேசிக்கொண்டிருக்கிற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்ன செய்ய.
நான் ஒன்றும் புதிதாய் எழுதவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை அப்படியே தந்திருக்கிறேன்.

ilangan செவ்வாய், டிசம்பர் 08, 2009 6:49:00 முற்பகல்  

//சுபாங்கன் //
நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது எம்மால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது. நன்றி உங்கள் கருத்துரைக்கு

ilangan செவ்வாய், டிசம்பர் 08, 2009 6:57:00 முற்பகல்  

//சத்தியமான கருத்து
ஆனால் அதை ஏற்கும் பக்குவம்தான் நம்மவருக்கு இல்லை நம்மாட்களின் பதிவுகளையும் தலைப்புகளையும் பாருங்களேன். உங்கள் இந்த பதிவுக்கு யாழ்தேவியில் மைனஸ் ஓட்டுவேறு//

நன்றி தர்ஷன் உங்கள் கருத்துரைக்கு.
பாதிக்கப்படாமல் வெளியில் இருந்து வீரம் பேசிக்கொண்டிருக்கிற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்ன செய்ய.

ilangan செவ்வாய், டிசம்பர் 08, 2009 7:00:00 முற்பகல்  

//என்ன கொடும சார் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு தேவை..//

நிச்சயமாக. நன்றி உங்கள் கருத்துக்கு.

மயில்வாகனம் செந்தூரன். சனி, டிசம்பர் 12, 2009 6:07:00 பிற்பகல்  

///சிங்கம் இலங்கன் ஒரு சமூக நோக்குடன் “எப்படி இவ்வாறான உயர் பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்க கற்றுக்கொண்டார்கள்? ” என எனக்கு நானே கேள்வியை கேட்டபோது ஓர் அருமையான நகைச்சுவையான விடையும் பிறந்தது.///

இது நகைச் சுவையான விடையில்லப்பா... உண்மையான விடை... நிச்சயமாக இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் ஒரு ஊடகவியல் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது இவைபற்றி கொஞ்சம் சொல்லப்பட்டிருந்தன.. உங்கள் சிந்தனை உண்மையில் வரவேற்கத்தக்கது... வாழ்த்துக்கள்..

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.