இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 02

இலங்கைப் பதிவர் சந்திப்பு -02 இம்முறை வெகு சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. ஒரு உறைப்பு, இரண்டு இனிப்பு எனும் விகித அடிப்படையில் உணவு பரிமாறப்பட்டது.

ஏற்பாட்டுக்குழுவினர் 13ம் திகதி, கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் இடம்பெறும் என அறிவித்திருந்தினர்.

13ம் திகதி என அறிவிக்கப்பட்டதுமே அதற்கு விளக்கம் தேடிய இலங்கன், பலரின் நம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் திகதி தெரிவு செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டேன்.(அண்மையிர் 13 பி பார்த்தின் தாக்கம்)இருந்தாலும் கிருத்தியத்தாரின் கண்களுக்கு இந்த விடயம் அகப்படாதது புதுமையே.

13ம் திகதி வீட்டிலிருந்து சந்திப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போதே நண்பன் கோபி கைப்பேசியில் தொடர்பு கொண்டு, வரும் போது இரண்டு கத்தரிக்கோலை கொண்டுவரும்படி பணித்திருந்தார்.

ஏற்கனவே 13ன் பயத்திலிருந்த எனக்கு கத்தரியையும் தொடர்புபடுத்திய போது கபாளத்திலிருந்து அனைத்தும் கலங்கியது. ஒழுங்கமைப்புக் குழுவில் கெளபாய் அண்ணனும் இருப்பதால் ஒருவேளை அவர் ஏதாவது நறுக்கு விளையாட்டுக்களை ஏற்பாடு செய்தாரோ....? என்கிற மேலுமொரு சந்தேகத்தை உண்டுபண்ணியது.

சீ..சீ. பொது நிகழ்வு அப்படியிருக்காது என்றவாறு எதுக்கும் பாதுகாப்பாக மொட்டைக் கத்தரிக்கோல் இரண்டை எடுத்துக்கொண்டு தேசிய கலை இலக்கிய பேரவை மண்டபத்துள் நுழைந்தேன்.

மண்டப வாயிலிலே பதிவர் கோபி தனது இன்முகத்துடன் வரவேற்றார்.
கனககோபி, சுபாங்கன் ஒழுங்கமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபடியால் செயற்கையாக வரவழைக்கப்பட்ட ஒரு புன்சிரிப்பை முயற்சி செய்து கொண்டு அவர்களுக்்கு மேலும் இடைஞ்சல் கொடாமல் ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன்.

(இனி பதிவர் சந்திப்பு தொடர்பாக பலர் பலவிதமாக எழுதுவார்கள் என்பதால் பதிவர்களுடனான எனது சந்திப்பு, மற்றும் பார்வை)

புல்லட்
புல்லட் அண்ணனை பாரத்தவுடனேயே "கணவன் மனைவி மீது கொள்ளும் கோவத்தையொத்த செல்லக் கோவம்" எனக்கு உண்டாயிற்று.

காரணம் பதிவர் சந்திப்பு -01 ல் புல்லட் வழங்கிய அறிவுரையின் பிரகாரம் உங்கள் பதிவு பிரபல்யமாக காண்போர் எல்லோருக்கும் "ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்" என பின்னூட்ட சொன்னார்.
நானும் வம்புக்கு அவரிலேயே அதை ரெஸ்ற் பண்ணிப் பார்த்ததால் அவர் எனக்கு வைத்த ஆப்பையும், என்னுடைய தமிழில் பிழை பதிவை சரச்சைப் பதிவாக பிரகடனப்படுத்தியதையும், வில்லங்கமான பின்னூட்ட அடிகளையும் எண்ணியே இந்த கோபம்.

கனககோபி
ஏற்கனவே பள்ளியிலிருந்து அறிமுகமானவர் என்பதால், எமது கருத்துக்களும் கலந்துரையாடலும் மிகவும் நெருக்கமாவே இருந்தது.

இருப்பினும் தனது ஒவ்வோர் வேர்வைத்துளியையும் பதிவர் சந்திப்பு - 02 ஒழுங்கமைப்புக்காக சிந்தியிருந்ததை அவரது சேட் சொல்லிக் கொண்டது.
"நனைந்த சேட்டும், சிரித்த முகமும்...." ஆகா என்னுள் கவிதைப் பிரவாகமே ஊற்றெடுத்தாலும் ஒரு ஆணுக்காக எனது கவிதையை செலவிட நான் விரும்பவில்லை.

பதிவர் வந்தியத்தேவன்.
வந்தியண்ணாவைப் பற்றி கோபி மூலம் அறியப்பெற்றிருந்த நான் பதிவர் சந்திப்பு -01 லிலும் சந்தித்தனான்.


இருப்பினும் நேரில் அதிகம் பழகவில்லை. இருப்பினும் சந்திப்பில் "பெண்களும் பதிவுலகமும்" கலந்துரையாடலில் வந்தியண்ணா " பெண்களை அதிகம் கவிதை எழுத வேண்டாம்" என கூறிய போது நான் மனதிற்குள் அடக்கி வைத்திருந்ததை அப்படியே அவர் சொன்ன சந்தோசத்தில் ஒரு பலத்த சிரிபுடன் நானும் ஆதரித்தேன்.

ஏற்கனவே நண்பர் உருவர் கவிதையைப் பாத்து தூங்காமல் இருந்ததாகவும் சொல்லும் போது அதே நண்பர் அதை என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டு என் தூக்கத்தையும் கெடுத்ததை எண்ணிக்கொண்டேன்.

பதிவர் லோசன்.
லோசன் அண்ணாவை பதிவர் சந்திப்பு -01ல் சந்தித்திருக்கிறேன். அவருடன் பேச ஒரு மேலதிக சக்தி தேவைப்பட்டதால், நான் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட கனககோபியின் சிரிப்பையொத்த ஒரு புன்சிரீப்பை அவரை கண்டவுடன் பிரயோகித்துக் கொண்டேன்.

பயனுற பதிவெழுதல் பகுதியில் லோசன் அண்ணா "திவர்களை அவர்கள் இஸ்டப்படி எழுதவிடுங்கள்" என்று கூறியது எம்மை மேலும் பலப்படுத்தியது. காரணம் நான் பம்பல் பதிவை சார்ந்தவன் என்பதால் எங்கே பம்பல் பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் எனக்கு இருந்தது.

சந்திப்பு இறுதியில் லோசன் அண்ணாவும், அசோக்பரனும் உரையாடிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தேன். கவிதைப் பிரவாகம் பெருக்கெடுத்தாலும் கோபி முன்னுரிமையை பெற்றுக்கொண்டதால் அவருக்கு அதை டைவேற் பண்ணுகிறேன்.

மருதமூரான்.
மருதமூரான் அண்ணாவை முதல் சந்திப்பில் பாரத்ததிலிருந்துமுற்றிலலும் வேறுபட்டவராக காணப்பட்டார். போனமுறை கொஞ்சம் சீரியஸாக இருந்த மனுஷன் இந்த முறை வாயே திறக்கவில்லை.
காரணம் போனமுறை பட்ட அனுபவம்.

இருந்தாலும்இம்முறை தப்பிக்கொண்டார். காரணம் இம்முறை சப்ஜெக்டுக்கு வெளியே பேசப்பட்ட விடயம் இருக்கிறம் பத்திரிகை சர்ச்சை என்பதால் யாழ்தேவி தப்பிக்கொண்டது.

கெளபாய் .
கெளபாய் நீட்டலும் வழித்தலும் கூடாது" என்பதற்கு மாறாக போனமுறை சந்திப்பூ01ல் நீண்ட முடியுடன் காணப்பட்ட அண்ணன் இம்முறை பெக்கம் மாக மாறியிருந்தார்.

இவரா அது? இவரின்ர பதிவா அது? என்கிற பல கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.

லைவ் ஸ்றீம் சிங்கம் இம்முறையும் சிறப்பாக செய்தார் என வெளியில் இருந்து சொல்லிக் கொண்டார்கள்.

பதிவு நீண்டுவிட்ட படியால் பதிவர் சந்திப்பு -02 ன் கீழ் இரண்டு அடுத்த பதிவில்.

8 comments:

Subankan புதன், டிசம்பர் 16, 2009 8:17:00 முற்பகல்  

சந்திப்பில் உங்களைச் சந்தித்தது சந்தோசம் இலங்கன், பார்ட் 2 வை விரைவில் எழுதிவிடுங்கள்.

Unknown புதன், டிசம்பர் 16, 2009 9:48:00 முற்பகல்  

//நண்பன் கோபி கைப்பேசியில் தொடர்பு கொண்டு, வரும் போது இரண்டு கத்தரிக்கோலை கொண்டுவரும்படி பணித்திருந்தார்.//

அது பணித்ததல்ல... கத்தரிக்கோல் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டேன்.... :)


//ஒழுங்கமைப்புக் குழுவில் கெளபாய் அண்ணனும் இருப்பதால் ஒருவேளை அவர் ஏதாவது நறுக்கு விளையாட்டுக்களை ஏற்பாடு செய்தாரோ....? //

ஹா ஹா....
கெளபோய் அண்ணா விளக்கம் தரவும்.... ஹா ஹா....//சீ..சீ. பொது நிகழ்வு அப்படியிருக்காது என்றவாறு எதுக்கும் பாதுகாப்பாக மொட்டைக் கத்தரிக்கோல் இரண்டை எடுத்துக்கொண்டு //

ஆகா... எல்லாரும் ஒரு மார்க்கமாத் தான் இருக்கிறியள் என?


//புல்லட் அண்ணனை பாரத்தவுடனேயே "கணவன் மனைவி மீது கொள்ளும் கோவத்தையொத்த செல்லக் கோவம்" எனக்கு உண்டாயிற்று. //

ஹி ஹி...
என்னப்பன் நாட்டில நடக்குது?


//தனது ஒவ்வோர் வேர்வைத்துளியையும் பதிவர் சந்திப்பு - 02 ஒழுங்கமைப்புக்காக சிந்தியிருந்ததை அவரது சேட் சொல்லிக் கொண்டது.//

ஆகா...
பெரிய வேலை எதுவும் இல்லடாப்பா....
வியர்வைக்கும் வேலைக்கும் சம்பந்தமில்ல....// ஒரு ஆணுக்காக எனது கவிதையை செலவிட நான் விரும்பவில்லை.//

நல்ல விசயம்...
பெண்ணுக்காக எழுதும்போது யோசித்துவிட்டு எழுதவும்....
அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல..


//வந்தியண்ணாவைப் பற்றி கோபி மூலம் அறியப்பெற்றிருந்த நான் //

ஓ! உந்தப் பெருமையும் எனக்கா? நன்றி நன்றி...//பதிவர் லோசன்.//

அடப்பாவி.. பதிவர் லோஷனா?
ஏதோ புது ஆள் மாதிரிக் கதைக்கிறாய்?
வானொலியில் கேட்டுப் பழக்கமான லோஷன் அண்ணா தானே?//அவருடன் பேச ஒரு மேலதிக சக்தி தேவைப்பட்டதால்//

ஹி ஹி....
நீ நல்லவன்டா....
எனக்கும் ஒரு மரியாதை கலந்த பயம் தான்... ஹி ஹி....//கவிதைப் பிரவாகம் பெருக்கெடுத்தாலும் கோபி முன்னுரிமையை பெற்றுக்கொண்டதால் அவருக்கு அதை டைவேற் பண்ணுகிறேன்.//

மாட்டி விடப்படாது,....//போனமுறை கொஞ்சம் சீரியஸாக இருந்த மனுஷன் இந்த முறை வாயே திறக்கவில்லை. //

இந்த முறை தான் பதிவராத் தான் கலந்துகொள்ளுவன் எண்டு தலையில அடிச்சு சொல்லாத குறையா சொன்னார்....


//கெளபாய் நீட்டலும் வழித்தலும் கூடாது//

இரட்டை அர்த்தமோ?


நல்ல பதிவு இலங்கா....

யோ வொய்ஸ் (யோகா) புதன், டிசம்பர் 16, 2009 11:33:00 முற்பகல்  

expecting the second part...

nice post

maruthamooran புதன், டிசம்பர் 16, 2009 12:37:00 பிற்பகல்  

////மருதமூரான்.
மருதமூரான் அண்ணாவை முதல் சந்திப்பில் பாரத்ததிலிருந்துமுற்றிலலும் வேறுபட்டவராக காணப்பட்டார். போனமுறை கொஞ்சம் சீரியஸாக இருந்த மனுஷன் இந்த முறை வாயே திறக்கவில்லை.
காரணம் போனமுறை பட்ட அனுபவம்.

இருந்தாலும்இம்முறை தப்பிக்கொண்டார். காரணம் இம்முறை சப்ஜெக்டுக்கு வெளியே பேசப்பட்ட விடயம் இருக்கிறம் பத்திரிகை சர்ச்சை என்பதால் யாழ்தேவி தப்பிக்கொண்டது.////

இலங்கன்........

‘யாழ்தேவி திரட்டி’ தொடர்பில் கருத்துக்கூறுமாறே என்னை முதலாவது பதிவர் சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அழைத்தார். அதனாலேயே யாழ்தேவியின் நிர்வாக உறுப்பினராக நான் கருத்து தெரிவித்தேன். அந்த தருணத்தில் சிலரால் யாழ்தேவி குறித்து அதிகம் கேள்விகள் எழுப்பப்பட்டதால், அதற்கு நானும் பதில்களை வழங்கவேண்டியிருந்தது.

2வது பதிவர் சந்திப்பில் மருதமூரான் என்கிற சகபதிவர் கலந்து கொண்டார். சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் அதிக கருத்தாடல்களுக்கு அதாவது விவாதங்களுக்கு வழியேற்படவில்லையே. அதனால் நானும் சாதாரணமாகவே இருந்தேன்.

மற்றப்படி நான் சண்டைக்காரனும் அல்ல, பயந்தோடுபவனும் அல்ல.

இலங்கன் வியாழன், டிசம்பர் 17, 2009 11:58:00 முற்பகல்  

//Subankan
சந்திப்பில் உங்களைச் சந்தித்தது சந்தோசம் இலங்கன், பார்ட் 2 வை விரைவில் எழுதிவிடுங்கள்//

எனக்கும் உங்களைசந்தித்தில் மிக்க மகிழ்ச்சி பகுதி 02 பதிவிட்டுவிட்டேன்.

இலங்கன் வியாழன், டிசம்பர் 17, 2009 12:00:00 பிற்பகல்  

கனக கோபி
நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

தம்பி உம்மை எல்லோரும் கடித்திருப்பதால் பின்னூட்டத்திலும் நான் உம்மை கடிக்கவிரும்பவில்லை.

இலங்கன் வியாழன், டிசம்பர் 17, 2009 12:01:00 பிற்பகல்  

யோ வொய்ஸ் (யோகா

தற்போது 02ம் பதிவில் இட்டுவிட்டேன். நன்றி கருத்துரைக்கு.

இலங்கன் வியாழன், டிசம்பர் 17, 2009 12:05:00 பிற்பகல்  

மருதமூரான்.
‘//யாழ்தேவி திரட்டி’ தொடர்பில் கருத்துக்கூறுமாறே என்னை முதலாவது பதிவர் சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அழைத்தார். அதனாலேயே யாழ்தேவியின் நிர்வாக உறுப்பினராக நான் கருத்து தெரிவித்தேன். அந்த தருணத்தில் சிலரால் யாழ்தேவி குறித்து அதிகம் கேள்விகள் எழுப்பப்பட்டதால், அதற்கு நானும் பதில்களை வழங்கவேண்டியிருந்தது.

2வது பதிவர் சந்திப்பில் மருதமூரான் என்கிற சகபதிவர் கலந்து கொண்டார். சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் அதிக கருத்தாடல்களுக்கு அதாவது விவாதங்களுக்கு வழியேற்படவில்லையே. அதனால் நானும் சாதாரணமாகவே இருந்தேன்.

மற்றப்படி நான் சண்டைக்காரனும் அல்ல, பயந்தோடுபவனும் அல்ல.//

// சும்மா பதிவை கல கலப்பாக்குவதற்கே அப்படி எழுதினேன் .,அதுக்கு இவ்வளவு விளக்கமா?//
நன்றி அண்ணா உங்கள்வருகைக்கும் கருத்துரைக்கும்.

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.