பதிவர் சந்திப்பு சீசன் 02 / 02

பதிவர் சந்திப்பு சீசன் 02 பற்றிய பதிவு 01 ஐ ஏற்கஉவே வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக அமைகிறது பாகம் 02

பதிவர் மது (தமிழ் புங்கா)
பதிவர் மது அண்ணனை பததிவுலகுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் பதிவர் சந்திப்பு 01 ன் பின்னரே அவரும் ஒரு பதிவர் என அறிந்து கொண்டேன். விளம்பரம் இல்லாமல் பதிவிடும் ஒருவர்.

என்னிடம் ஒரு அன்பான விமர்சனத்தையும் சொன்னார். ஏன் நீங்கள் உங்கள் பதிவில் அடிக்கடி சிங்கம் என்பதை பயன்படுத்துகிறீர்கள்? அதை எடுத்துவிடுங்கள் என.

ஒரு வேளை அரசியல் பக்கம் சிந்திக்கிறாலோ என எண்ணிக்கொண்டேன். மற்ற மாதிரி போட்டா இன்னும் டேஞ்சர் ஆயிடுமே?
இருந்தாலும் தமிழரின் தன்மானத்தை சொல்லி தப்பிக்கொண்டேன்.

இருப்பினும் அவரின் கருத்துக்கு மதிப்பளித்துது இன்றிலிருந்து சிங்கம் தூக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க சந்திப்பில் பரிமாறிய வடையின் தயாரிப்பாளரும்,இயக்குனரும் மது அண்ணா தான் என்கிற பிந்தியசெய்தி ஒன்றும் கிடைத்தது.

சாப்பிடும் போதே நல்லாயிருந்த வடையைஇந்த செய்தி கேட்டவுடன் மீண்டுடும் ஒரு முறை இரைமீட்டிக்கொள்ளமுயற்சித்தேன்.அவர் வடை சுட்ட அனுபவத்தை ஒருரு தனிப்பதிவில் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

பதிவர் சுபாங்கன்.
சந்திப்பின் இறுதியில் ஆறுதலாக பேசிக்கொண்டோம்.


ஐந்தறைப் பெட்டிக்காரன் என்பதால் அடிக்கடி சமயலறைப் பக்கம் சென்றுவந்தார்.
தன்னை முதலாவதாக பின்தொடரந்தவர் நான் எனவும் தற்போது தன்னை பின் தொடர்பவர்கள்100ற்கும் அதிகமானோர் எனவும் சொல்லிக்கொண்டார்.

அதாவது எனது ராசி நல்ல ராசி என்பதே அதன் உள் சித்தாந்தம்.
என்னில் எனக்கே ஒரு சந்தேகத்தை இவ்விடயம் ஏற்படுத்தியிருந்தாலும் கிருத்தியம் முகுந்தன் அண்ணாவிடம் சொல்லி சரிபாரக்க வேண்டும்.

பதிவர் யோ வோய்ஸ்
மொக்கை, சீரியஸ் எந்தப் பதிவாக இருந்தாலும் பின்னூட்டுவதில் இலங்கையிலிருந்து வெளிநாடுகள் வரை பிரபல்யமானவர் . சிறந்த பதிவர்.சந்தித்ததில் மகிழ்ச்சி. அவசரத்தில் வந்து அவசரத்தில் கிளம்ப முயற்சித்தார்.


பதிவர் ஊரோடி
பெயருக்கேற்றாற் போல் ஊரோடி இவர். முதல் சந்திப்புக்கு யாழிலிருந்து வந்தார். இம்முறை நெதர்லாண்டிலிருந்து வந்தார்

சந்திப்பு மேல் அவர் வைத்திருந்த பற்றும் , மரியாதையும் என்னை அவருடன் பேசத் தூண்டினாலும் பண்டிக் காய்ச்சல் பீதியால் சிரிப்புடன் மட்டுறுத்தி விட்டேன்.

பதிவர்சந்ரு.

பல பின்னூட்டங்களள் வாயிலாக சந்தித்துக்கொண்ட சந்ரு அண்ணனை நேரில் சந்தித்த மகிழ்ச்சி. ஒரு சீரியஸ் பதிவரை சந்தித்தது அதை விட மகிழ்ச்சி.


பதிவர் பங்குச் சந்தை.
எனக்கு அடிக்கடி மெயிலில் பங்குச்சந்தை,பங்குச் சந்தை என மெயில் வர நானும் யாரோ மாறிஅனுப்புறாங்கள் எனஎண்ணியிருந்தேன். பின்பு தான் பங்குச் சந்தை பதிவர் என அறிந்து கொண்டேன். பாப்பம் ஏறுதா?இறங்குதா எண்டு? ( பங்குச் சந்தை நிலவரம்)


பெண்கள் பக்கம்

பெண்கள்பக்கமாக ஒரு சிலரே வருகை தந்திருந்தனர்.

பல பெயரறியாதவர்கள் ,முத்தபதிவர்கள், விடுபட்டவர்கள் அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி.
அடுத்த சந்திப்பு எங்கே?எப்போ?அங்கே நேரில் சந்திப்பம்.

13 comments:

யோ வொய்ஸ் (யோகா) வியாழன், டிசம்பர் 17, 2009 12:19:00 பிற்பகல்  

உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான், அவசரத்தில் வரவில்லை, பஸ் ஓட்டுனர் கழுத்தறுத்துவிட்டான், நிகழ்ச்சி காலையில் நடந்திருந்தால் முடிய எல்லாரோடும் நிறைய கதைத்திருக்கலாம்...

ஆனால் சந்திப்பு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சிதான் இலங்கன்...

Subankan வியாழன், டிசம்பர் 17, 2009 2:11:00 பிற்பகல்  

//ஐந்தறைப் பெட்டிக்காரன் என்பதால் அடிக்கடி சமயலறைப் பக்கம் சென்றுவந்தார்.//

ஆகா, நல்லாத்தாய்யா கவனிக்கிறாய்ங்க

Unknown வியாழன், டிசம்பர் 17, 2009 3:22:00 பிற்பகல்  

எல்லாம் சரி...

//முத்தபதிவர்கள்//

இது விளங்கேல...
யாரிவங்க?

Atchuthan Srirangan சனி, டிசம்பர் 19, 2009 4:47:00 முற்பகல்  

//பாப்பம் ஏறுதா?இறங்குதா எண்டு?//

கண்டுபிடிங்க, பார்ப்போம்?

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 4:49:00 முற்பகல்  

// யோ வொய்ஸ் (யோகா)
நிகழ்ச்சி காலையில் நடந்திருந்தால் முடிய எல்லாரோடும் நிறைய கதைத்திருக்கலாம்...

உண்மை தான் எல்லோருக்கும் நேரம் ஒத்துவராததால் மற்றும் தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்காகவுமே 2 மணியை தெரிவு செய்ததாதக ஒழுங்கமைப்பாளர்கள் சொன்னார்கள். இருப்பினும் நேரில் கண்டது மகிழ்ச்சி. நன்றி உங்கள் கருத்துரைக்கு.

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 4:51:00 முற்பகல்  

//Subankan
ஆகா, நல்லாத்தாய்யா கவனிக்கிறாய்ங்க//

நாங்க எங்கள் கழுகுக் கண்ணை எல்லாப்பக்கமுமில்ல திருப்பியிருந்தோம். நன்றி சுபாங்கன் உங்கள் கருத்துரைக்கு.

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 4:55:00 முற்பகல்  

//கனககோபி

எல்லாம் சரி...

//முத்தபதிவர்கள்//

இது விளங்கேல...
யாரிவங்க?//

நீங்கள் சுட்டிக்காட்டிய ''முத்தபதிவர்கள்'' எனும் சொல்லில் எழுத்துப்பிழை இருக்கிறது. அது மூத்தபதிவர்கள். நன்றி பிழையை அழகாக சுட்டிக்காட்டியதற்கு. இனி உங்கள் பதிவிலும் எழுத்துப்பிழைகள் கண்காணிக்கப்படும் என்பதை அன்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி கோபி உங்கள் கருத்துரைக்கு. உங்கள் நாழ் வளமுற வாழத்துக்கள்.

அஸ்பர் சனி, டிசம்பர் 19, 2009 6:37:00 முற்பகல்  

பன்றிக்காய்ச்சலா????????

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 12:13:00 பிற்பகல்  

// அஸ்பர்
பன்றிக்காய்ச்சலா????????//

சும்மா.... கலகலப்புக்கு...

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 12:14:00 பிற்பகல்  

// Atchu கூறியது...
பாப்பம் ஏறுதா?இறங்குதா எண்டு

கண்டுபிடிங்க, பார்ப்போம்?//

பாப்பம் இனி தொடர்ந்து பாப்பமில்ல...

Unknown சனி, டிசம்பர் 19, 2009 12:16:00 பிற்பகல்  

// இலங்கன் கூறியது...
//கனககோபி

எல்லாம் சரி...

//முத்தபதிவர்கள்//

இது விளங்கேல...
யாரிவங்க?//

நீங்கள் சுட்டிக்காட்டிய ''முத்தபதிவர்கள்'' எனும் சொல்லில் எழுத்துப்பிழை இருக்கிறது. அது மூத்தபதிவர்கள். நன்றி பிழையை அழகாக சுட்டிக்காட்டியதற்கு. இனி உங்கள் பதிவிலும் எழுத்துப்பிழைகள் கண்காணிக்கப்படும் என்பதை அன்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி கோபி உங்கள் கருத்துரைக்கு. உங்கள் நாழ் வளமுற வாழத்துக்கள். //

ஐயயோ.... தம்பி... நான் எழுத்துப் பிழையச் சொல்லேல...
யாரோ முத்தமிடுற பதிவர்கள் எண்டீங்க... அதுதான் யாரெண்டு அறிஞ்சு கொள்ளலாம் எண்டு...

மற்றும்படி எழுத்துப் பழையெல்லாம் சகஜம் தானே எங்களப் போல சிறியவர்களின் எழுத்தில?

இலங்கன் சனி, டிசம்பர் 19, 2009 12:29:00 பிற்பகல்  

//கனககோபி

யாரோ முத்தமிடுற பதிவர்கள் எண்டீங்க... அதுதான் யாரெண்டு அறிஞ்சு கொள்ளலாம் எண்டு//

ஆகா இப்பிடியா யோசிச்சீங்க...
இருந்தாலும் ஓவர் . சீ.. பால்குடியள் கூட இப்பிடி யோசிக்குதுகள்.

அடுத்த சந்திப்பில பாப்பம் நீங்க சொன்னமாதிரி ஏதாவது நடக்குதோ எண்டு.

மன்னிக்கவும்.
முக்கியமான சில எழுத்துக்களில் பிழை விடும் போது இவ்வாறான பாரதூரமான நிலமைக்கு வந்துவிடுகிறது.

சில பிழைகள் கட்டாயம் திருத்தப்படவேண்டிவை. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

மயில்வாகனம் செந்தூரன். சனி, டிசம்பர் 19, 2009 5:54:00 பிற்பகல்  

கருத்துப்பகிர்வு நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்..

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.