என்னிடம் வந்த அழகு, காதல், பணம், கடவுள்...

மீண்டும் பதிவர் கோபி என்னை வம்புக்கு அழைத்திருக்கிறார். அதாவது ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்.
அழகு, காதல், பணம், கடவுள்


அழகு
என்னிடம் இல்லாத விடயங்களில் இதுவும் ஒன்று.
தற்போதைக்கு அழகு என்றால் அது பக்கத்து வீட்டு சகானா தான்.
அதாவது பக்கத்து வீட்டில் இருக்கும் வெறும் நான்கு வயது நிரம்பிய சகானா என்கிற குழந்தை.

பொதுவாக எல்லா குழந்தைகளும் அழகு தான். சூது, வாது தெரியாத பொய், களவு அறியாத பருவம் குழந்தை பருவம்.

எல்லா மனிதனும குழந்தையாக இருக்கும் போது ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள்.
அவர்களிடம் எந்த வஞ்சகமும் இருக்காது.
எனவே என்னை பொறுத்தவரை தறந்போதைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சகானா என்கிற குழந்தையின் செல்லச்சிரிப்பிலும், செல்ல குறும்பிலும் மட்டுமே அழகை காணமுடிகிறது.

காதல்
சிங்கத்திற்கு பாடசாலை காலத்திலிருந்து இன்று வரை எந்தவொரு காதல் என்கிற அசம்பாவிதமும் நடந்ததே இல்லை.
காரணம்
பாடசாலை காலத்தில் நானும் எனது சகாக்களும் இணைந்து செய்யும் குறும்பு வேலைகளிலேயே எனது பாடசாலை காலத்தை வீணடித்து விட்டதால்,
அதாவது
எங்கே களவாக இளநீர் குடிக்கலாம், எங்கே பெண்களின் சாப்பாட்டுப் பெட்டியை திருடி தின்னலாம், யாருடைய சைக்கிளில் வால்கட்டை புடுங்கலாம்,
போன்ற சமூக சேவைகளில் நானும் எனது சகாக்களும் ஈடுபட்டு வந்ததால் இந்த காதல் கத்தரிக்காயில் ஈடுபட ரைம் கிடைக்கவில்லை.
அத்தோடு எங்கடை கிளாசில படிச்ச எல்லா பெண்களிடமும் நிறைய காசு கடன் வாங்கியிருக்கிறேன் இற்றை வரை திருப்பி கொடுக்கவில்லை.
எனவே அவளவையின் கண்களுக்குள் நான் மாட்டுப்படவும் சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் நான் அவர்களின் கண்களுக்கு கடன்காரனாக மட்டுமே தான் தெரிவேன்.
ஆக மொத்தத்தில் காதல் என்னோடு சம்பத்தப்படாத விடயம்.பின்னர் ஏலெவலுக்கு வந்தாப்பிறகு கூடப்படிக்கிற பொடியன்கள் தங்களுடைய காதல் கதைகளை சொல்லி உசுப்பேத்த பாப்பினம் அப்பவும் சிங்கம் அசந்ததே இல்லை.
என்னைப் பொறுத்தவரை காதல் என்'பது பல பிரச்சனைகளை கொண்ட சிக்கலான கட்டமைப்பு.
ஒரு ஆண், பெண் ஆகிய மூலக்கூறுகள் இணைந்து காதல் என்கிற சிக்கலான கட்டமைப்பை உருவாக்குவது கடினம்.
ஆக மொத்தத்தில் எனக்கு இயலாத, கடினமான, வேண்டாத வேலலைதான் காதல்.
இந்தத் தொழிலில் ஈடுபட துணிவு மிக அவசியம். அது நம்மிடம் நிச்சயமக இல்லை என்பது உலகறிந்ததே.

பணம்.
பணம் இல்லாதவர் பிணத்திற்கு சமம்.
பணம் பத்தும் செய்யும் என பல பழமொழிகள் உண்டு.
என்னைப் பொறுத்தவரை பணம் அதிக பிரச்சனை தருவது நடுத்தர வர்க்கத்திற்கே.
ஏழை மனிதனொருவர் தனது ஒரு நாள் தேவைக்கே பணம் தேடுகின்றான். அவன் அதற்கு மேல் தேட நினைப்பதுமில்லை தேடவும் முடியாது.
ஆனால் நடுத்தர வர்க்கத்தினரையே பணம் பந்தாடுகிறது.
கிரடிட் காட்
வங்கி லோன்
இன்கூரன்ஸ் போன்ற ஆபத்தை விளைவிக்க வல்ல அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவே உருவாக்கப்பட்டது.
சடுத்தர வர்க்கத்தினரை அலை பாய வைத்து அவர்களை சிப்பிலியாட்டுவது பணம் தான்.
கடவுள்
கடவுள் என்பது எங்கட வீட்டில் இருக்கின்ற ரோல் பிளக்கை போன்றது. அதாவது எங்கள் வீட்டு ரோல் பிளக்கில் கரண்ட் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை அதைப் போல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை என்னால் இற்றை வரை உணர முடிவதில்லை.
அண்மையில் கடவுளிடம் மனமுருக இரண்டு விடயத்துக்'காக வேண்டிக் கொண்டேன்.
அதில் ஒன்று நடந்து விட்டது. மற்றையது நடக்கவில்லை.
ஆக மொத்தத்தில் கடவுள் என்பது பத்தாம் வகுப்பு கணிதப்புத்தகத்தில் உள்ள நிகழ்தகவு பாடம் தான்.
சுருங்கச் சொல்லின் உலகம் என்கிற கணிதப் புத்தகத்தில் கடவுள் என்'பது ஒரு நிகழ்தகவு பாடம்.
இதை தொடர பதிவர் தங்க முகுந்தனை அன்போடு அழைக்கின்றேன். நாள், நட்சத்திரம் பார்த்து அவர் பதிவிடுவார் என நம்புகிறேன்.


3 comments:

யோ வொய்ஸ் (யோகா) செவ்வாய், அக்டோபர் 06, 2009 8:11:00 முற்பகல்  

உங்களுக்கு காதல் வரவில்லை என்பதை நாங்கள் நம்பிவிட்டம்.

நல்லா எழுதியிருக்கீங்க

தங்க முகுந்தன் செவ்வாய், அக்டோபர் 06, 2009 4:33:00 பிற்பகல்  

இலங்கன்!

நீங்கள் சொன்னது போல நாள் நட்சத்திரம் பார்த்து கடந்த 20.09.2009 அன்று பதிவர் மருதமூரனின் கோரிக்கையின்படி - காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் அந்தத் தொடர் விளையாட்டை எழுதி ஒருவழியாக
முடித்துவிட்டேன்!

திரும்ப எழுத வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்!

நன்றிகள்!

Unknown வியாழன், அக்டோபர் 08, 2009 7:20:00 முற்பகல்  

//கடவுள் என்பது எங்கட வீட்டில் இருக்கின்ற ரோல் பிளக்கை போன்றது. அதாவது எங்கள் வீட்டு ரோல் பிளக்கில் கரண்ட் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை அதைப் போல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை என்னால் இற்றை வரை உணர முடிவதில்லை.//

தெய்வமே... நீங்க எங்கயோ போய்ற்றீங்க...
எப்பிடி உங்களால மட்டும்...?

காதல் பற்றின விசயம் தான் நம்ப ஏலாமக் கிடக்கு...
'பதிவர் இலங்கனின் காதல் லீலைகள்' எண்டு' பதிவொண்டு போடட்டே?

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.