பதிவர் சந்திப்பு - சீசன் - 2

ஆகா ஆரம்பிச்சிட்டாங்கய்யா

இரண்டாவது பதிவர் சந்திப்பு..


மீண்டும் தலைநகரில் பதிவர் சந்திப்பாம்.
முதல் சந்திப்பில் நம்ம பதிவர், அறிவிப்பாளர் லோசன் அண்ணா சொன்ன மாதிரி குளு குளு ஏசியில் 2ம் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்தேன்.

முதல் தடவை பிளானிங் கொஞ்சம் பிசகினதால் பலரின் கைகள் கடித்ததாக அறியக்கிடைத்தது.

எனவே இந்த முறை ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கிறம் பேப்பர் நிறுவனத்தினர் என்பதால் பதிவர்களின் கைகள் கடிக்காது என நம்பலாம். ரொம்ப நல்லா பிளான் பண்ணியிருப்பாங்க..

இருப்பினும் இந்தத் தடவை என்னால் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால்.
இருப்பினும் ஓர் ஆர்வக் கோளாறால் கிளியரன்ஸ்க்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

பலரின் கருத்துப் படி குறைந்தது 1 மாதமாவது ஆகும் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு..

இருந்தாலும் ஓர் சப்பாசையில் முன் பதிவு செய்கிறேன்.

முக்கியமாக
இந்தச் சந்திப்பில்
யாழ் தேவிக்கு பெயர் மாற்றம்,
விசைப்பலகை வம்புகள்,
அ கர , உ கர , இ கர வம்புகள் இராது என நம்பலாம்.

நானும் ஓர் வேண்டுகோள் விடுக்கிறேன்
நிறைய பதிவர்கள் பாதுகாப்பில்லாமல் எழுதி வருவதால், அவர்களை பாதுகாக்க ஒரு "பதிவர் நல வாரியம்" அவசியப்படுகிறது.

இந்த பதிவர் சந்திப்பு-2 ஐ ஒழுங்க படுத்தியவர்கள் ஆராய்வார்கள் என நம்பலாம்.
இவ்வாறு ஒரு பதிவர் நல வாரியத்தை ஆரம்பித்தால்
பதிவர்கள் தங்கள்,
திருமணத்திற்கு,
பிரயாணத்திற்கு,
அவசியத் தேவைக்கு,
பிரசவத்திற்கு,
பதிவர் நல வாரியத்தை நாடலாம்.
அங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.

இது என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்து.

அத்தோடு நான் முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மடிக்கணணி வாயிலாக நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது இது எனக்கு அதிகப்படியான விடயமாக தோன்றியது. (இதற்கு செலவு செய்யும் பணத்தில் ஒருவருக்கு தலா 5, 6 வடை, பற்றீசை வழங்கியிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்)

ஆனால் தற்போது தூரத்தில் இருக்கும் போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே சத்தியமாய்ச் சொல்கிறேன். வடை, பற்றீஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளும் படி ஒழுங்கமைப்பாளர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது நடக்க நம்ம கௌ பாய் அண்ணனும் அருள் பாலிக்க வேண்டும்.

போனமுறை இவரின் கை தான் அதிகமாகக் கடித்தது என அறியக்கிடைத்தது.

பதிவர் சந்திப்பு - 1 விட பதிவர் சந்திப்பு - 2 சிறப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்தித்து கொள்கிறேன்.


5 comments:

ARV Loshan செவ்வாய், அக்டோபர் 27, 2009 11:07:00 முற்பகல்  

அதான் இம்முறை திறந்தவெளியரங்கில் எல்லோரையும் தாகசாந்தியால் குளிர்வித்து நடத்தப் போகிறார்களே.. ;)

எப்பவும் பெரிசாத் தான் நினைப்பீங்களோ? ;)

பதிவர் நல வாரியமா?
பொருளாளர் பதவி இருந்தால் சொல்லுங்கள்.. ;)

மது இம்முறை எங்கேயாவது தலைமறைவாகிவிடுவாரோ தெரியாது.. ;)

யோ வொய்ஸ் (யோகா) செவ்வாய், அக்டோபர் 27, 2009 11:43:00 முற்பகல்  

வர முயற்சி செய்யுங்கள் இலங்கன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu செவ்வாய், அக்டோபர் 27, 2009 12:30:00 பிற்பகல்  

நப்பாசை - சப்பாசை அல்ல

பதிவர் நல வாரியம் - பதிவர் நல வாரியம் அல்ல

நேரடி ஒளிபரப்பு - நேரடி உளிபரப்பு அல்ல

இலங்கன்...

நேரடி ஒளிபரப்புக்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன்... அதற்குரிய அறிவிப்புக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறியத்தரப்படும் :)

பிரியமுடன்,
கௌபாய்மது.

Subankan செவ்வாய், அக்டோபர் 27, 2009 1:33:00 பிற்பகல்  

ஆகா, முதல் சந்திப்பில் நான் யாழில், இப்போது நீங்களா? உங்களை சந்திக்கலாம் என்றல்லவா நினைத்தேன்.

Unknown வியாழன், அக்டோபர் 29, 2009 7:34:00 முற்பகல்  

//திருமணத்திற்கு,
பிரயாணத்திற்கு,
அவசியத் தேவைக்கு,
பிரசவத்திற்கு,
பதிவர் நல வாரியத்தை நாடலாம்.
அங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.//

எப்பிடி இலங்கன்... எப்பிடி?
எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி சங்கர் மட்டத்தில யோசிக்க முடியுது?


// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...

பதிவர் நல வாரியம் - பதிவர் நல வாரியம் அல்ல//

விளங்கவில்லை....

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.