நம்மகிட்ட தேவதையா? (தொடர் விளையாட்டு)

பதிவர், நண்பன் கோபி ஒரு தொடர் விளையாட்டில் என்னை அழைத்து வம்பில் மாட்டி விட்டதாலும், இனி அவர் இவ்வாறானதொரு தொடர் விளையாட்டுக்கு அழைக்கக் கூடாதென்பதற்காகவும் இந்தப்பதிவு.

10 வரங்களைத் தரக்கூடிய தேவதை என் முன்னால் தோன்றினால் நான் என்னென்ன வரம் கேட்பேன் என்பது தான் இந்த தொடர் விளையாட்டு.

முதலாவது வரம் நான் கேட்கும் ஒரே ஒரு சீரியஸ் வரம்

1. முகாம்களில் இருக்கும் சொந்தங்கள் வெளியே வரவேண்டும் என எல்லோர் கேட்பதும் எப்போது நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் முகாம்களில் இருக்கும் வரை அவர்கள் இருப்பிடத்திற்குள் மழையே வரக்கூடாது. அதிக வெயில் அடிக்கக்கூடாது. நல்ல சுவாத்தியமான காலநிலை இருக்க வேண்டும். இதுவே என் சீரியஸ் வரம் இனி என் பம்பல் வரங்கள்


2. "வோசிங் மெசின்" கேட்பேன். (இது தொடர்பாக முழு விளக்கம் தர வேண்டிய அலசியம் இல்லை இது பற்றி ஒரு பதிவே இட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் என் இரண்டு இடுகைகளுக்கு முன்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.)

3. கிரிக்கெற் வீரர்கள் முரளி, சச்சின், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை நேரில் பார்க்க வேண்டும். அதிலும் முரளி, சச்சின் ஆகியோரிடம் அன்பால் ஒரு சின்ன செல்லக் கடி கடிக்க வேண்டும். ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை கேவலமாக, ஆக்ரோசமாக, கோவமாக திட்டி நறுக்கென ஒரு கோவக்கடி கடிக்க வேண்டும்.

4. இனி நான் எடுக்க இருக்கும் எல்லா பரீட்சைகளிலும் சித்தியடைய வேண்டும்.

5. தற்போது நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் இங்கு பல கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதால் நான் விளையாடுகின்ற எல்லா போட்டிகளிலும் சராசரி ஓட்டமாக ஒரு 15 ஆவது பெற வேண்டும். குறைந்தது ஒரு விக்கெட் ஆவது வீழ்த்த வேண்டும்.

6. இதுவும் ஒரு சீரியஸ் வரம் யாழ்ப்பாண தனியார் பஸ் அதுவும் பண்டத்தரிப்பு- யாழ்ப்பாண பஸ்ஸில் நடத்துனர்கள் பிரயாணிகளை அளவாக பஸ்ஸில் ஏற்ற வேண்டும். (பண்டத்தரிப்பு-யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஒருவர் ஏறினால் யாழ்ப்பாணத்தில் இறங்கும் போது நிறம் மாறிய மனிதர்களாக தான் இறங்குவர். மண் வாசனையும் வீசும்)

7. ஒரு முறையாவது ஒரு சீரியஸ் பதிவு போடணும். நாளுக்கு என் பதிவை ஆயிரம் பேர் பாக்கணும். (என்ன தான் சீரஜயஸா எழுதினாலும் அது பம்பல் பதிவ ஆயிடுது)

8. ஒரு முறையாவது யாராவது கடன் கேட்கும் போது கடன் குடுக்கணும். அதே போல் நான் வாங்கிய கடன்கள் இனைத்தும் திருப்பி கொடுக்கணும்.

9. நான் பணத்தை செலவு செய்து பார்க்கும் சினிமா படங்கள் அனைத்தும் நல்ல படங்களாக இருக்க வேண்டும். (சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் நடிக்க வேண்டும் அதற்கு ஆர்.கே, ஜே.கே போன்றவர்கள் சினிமாவை விட்டு ஓடணும்)

10. நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரையாவது கையடக்க தொலைபேசிக்கு நல்ல கவரேஜ் கிடைக்கணும்.

இவையனைத்தும் வரம் என்பதற்கப்பால் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான்.


இதற்கு யாரும் வரம் தர தேவையில்லை. அவரவர் வேலையை அவரவர் செவ்வனே செய்தால் எல்லாம் நடக்கும். இதை நான் யாரும் தொடர விரும்பவில்லை காரணம் யாம் பட்ட துன்பம் வேறொருவரும் பட விரும்பவில்லை.


6 comments:

யோ வொய்ஸ் (யோகா) வெள்ளி, செப்டம்பர் 18, 2009 7:32:00 முற்பகல்  

//வோசிங் மெசின்" கேட்பேன்.//

என் பிரச்சினை தானா உங்களுக்கும்

//ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை கேவலமாக, ஆக்ரோசமாக, கோவமாக திட்டி நறுக்கென ஒரு கோவக்கடி கடிக்க வேண்டும்.//

நல்லா கடிச்சி ஒரு துண்ட எடுத்துருங்க. அப்படி மாட்டுனா சொல்லுங்க நானும் வாரேன் கடிக்க

//ஒரு முறையாவது ஒரு சீரியஸ் பதிவு போடணும்.//

சீரியஸ் பதிவு போட்டா ஹிட் கிடைக்காது. அனுபவத்தில சொல்லுறேன். பம்மல் பதிவுக்குதான் இங்க ஹிட் பின்னூட்டம் எல்லாம் அதிகம்...

Unknown வெள்ளி, செப்டம்பர் 18, 2009 1:25:00 பிற்பகல்  

//யுவராஜ் ஆகியோரை கேவலமாக, ஆக்ரோசமாக, கோவமாக திட்டி நறுக்கென ஒரு கோவக்கடி கடிக்க வேண்டும். //

தன்மானச் சிங்கம் இலங்கன் வாழ்க...

அது சரி...
எங்க விளையாடுறனீங்க?

உங்கள் முதலாவது வரம் அருமை தலைவா...

வால்பையன் செவ்வாய், செப்டம்பர் 22, 2009 4:44:00 பிற்பகல்  

உங்கள் வரங்களுக்காகவே உண்மையிலேயே தேவதை வரமாட்டாளா என தோன்றுகிறது நண்பரே!

ilangan புதன், செப்டம்பர் 23, 2009 7:13:00 முற்பகல்  

நல்லா சொன்னீங்க யோ வாய்ஸ் ரொம்ப நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்.

ilangan புதன், செப்டம்பர் 23, 2009 7:37:00 முற்பகல்  

gopi//

கண்ணா உங்கள மாதிரி துணிவாக என்னால் எதுவும் எழுத தைரியம் இல்லை. இருந்தாலும் சில விடயங்களை என்னால் முடிந்தளவு எழுதுறேன் நன்றி உங்கள் கருத்துக்கு

ilangan புதன், செப்டம்பர் 23, 2009 7:40:00 முற்பகல்  

வால்ப்பையன்
//உங்கள் வரங்களுக்காகவே உண்மையிலேயே தேவதை வரமாட்டாளா என தோன்றுகிறது நண்பரே!//

முடிந்தால் கொஞ்சம் வரச் சொல்லுங்க வால்ப்பையன் சார்

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.