நம்மகிட்ட தேவதையா? (தொடர் விளையாட்டு)

பதிவர், நண்பன் கோபி ஒரு தொடர் விளையாட்டில் என்னை அழைத்து வம்பில் மாட்டி விட்டதாலும், இனி அவர் இவ்வாறானதொரு தொடர் விளையாட்டுக்கு அழைக்கக் கூடாதென்பதற்காகவும் இந்தப்பதிவு.

10 வரங்களைத் தரக்கூடிய தேவதை என் முன்னால் தோன்றினால் நான் என்னென்ன வரம் கேட்பேன் என்பது தான் இந்த தொடர் விளையாட்டு.

முதலாவது வரம் நான் கேட்கும் ஒரே ஒரு சீரியஸ் வரம்

1. முகாம்களில் இருக்கும் சொந்தங்கள் வெளியே வரவேண்டும் என எல்லோர் கேட்பதும் எப்போது நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் முகாம்களில் இருக்கும் வரை அவர்கள் இருப்பிடத்திற்குள் மழையே வரக்கூடாது. அதிக வெயில் அடிக்கக்கூடாது. நல்ல சுவாத்தியமான காலநிலை இருக்க வேண்டும். இதுவே என் சீரியஸ் வரம் இனி என் பம்பல் வரங்கள்


2. "வோசிங் மெசின்" கேட்பேன். (இது தொடர்பாக முழு விளக்கம் தர வேண்டிய அலசியம் இல்லை இது பற்றி ஒரு பதிவே இட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் என் இரண்டு இடுகைகளுக்கு முன்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.)

3. கிரிக்கெற் வீரர்கள் முரளி, சச்சின், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை நேரில் பார்க்க வேண்டும். அதிலும் முரளி, சச்சின் ஆகியோரிடம் அன்பால் ஒரு சின்ன செல்லக் கடி கடிக்க வேண்டும். ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை கேவலமாக, ஆக்ரோசமாக, கோவமாக திட்டி நறுக்கென ஒரு கோவக்கடி கடிக்க வேண்டும்.

4. இனி நான் எடுக்க இருக்கும் எல்லா பரீட்சைகளிலும் சித்தியடைய வேண்டும்.

5. தற்போது நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் இங்கு பல கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதால் நான் விளையாடுகின்ற எல்லா போட்டிகளிலும் சராசரி ஓட்டமாக ஒரு 15 ஆவது பெற வேண்டும். குறைந்தது ஒரு விக்கெட் ஆவது வீழ்த்த வேண்டும்.

6. இதுவும் ஒரு சீரியஸ் வரம் யாழ்ப்பாண தனியார் பஸ் அதுவும் பண்டத்தரிப்பு- யாழ்ப்பாண பஸ்ஸில் நடத்துனர்கள் பிரயாணிகளை அளவாக பஸ்ஸில் ஏற்ற வேண்டும். (பண்டத்தரிப்பு-யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஒருவர் ஏறினால் யாழ்ப்பாணத்தில் இறங்கும் போது நிறம் மாறிய மனிதர்களாக தான் இறங்குவர். மண் வாசனையும் வீசும்)

7. ஒரு முறையாவது ஒரு சீரியஸ் பதிவு போடணும். நாளுக்கு என் பதிவை ஆயிரம் பேர் பாக்கணும். (என்ன தான் சீரஜயஸா எழுதினாலும் அது பம்பல் பதிவ ஆயிடுது)

8. ஒரு முறையாவது யாராவது கடன் கேட்கும் போது கடன் குடுக்கணும். அதே போல் நான் வாங்கிய கடன்கள் இனைத்தும் திருப்பி கொடுக்கணும்.

9. நான் பணத்தை செலவு செய்து பார்க்கும் சினிமா படங்கள் அனைத்தும் நல்ல படங்களாக இருக்க வேண்டும். (சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் நடிக்க வேண்டும் அதற்கு ஆர்.கே, ஜே.கே போன்றவர்கள் சினிமாவை விட்டு ஓடணும்)

10. நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரையாவது கையடக்க தொலைபேசிக்கு நல்ல கவரேஜ் கிடைக்கணும்.

இவையனைத்தும் வரம் என்பதற்கப்பால் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான்.


இதற்கு யாரும் வரம் தர தேவையில்லை. அவரவர் வேலையை அவரவர் செவ்வனே செய்தால் எல்லாம் நடக்கும். இதை நான் யாரும் தொடர விரும்பவில்லை காரணம் யாம் பட்ட துன்பம் வேறொருவரும் பட விரும்பவில்லை.


தும்மல் காதல்

யான் எனது வழமைக்கு மாறான எனது செயற்பாடாக புத்தகம் ஒன்றை வாசித்த போது (நறுந்தமிழ்) நறுந்தமிழ் என்பதை கவனமாக உச்சரிக்கவும். அப்புத்தகத்தில்தும்மலும் காதலும்என, திருக்குறளில் இடம்பெற்ற குறள்களுக்கான விளக்கத்தை ஒரு சிறு கதையாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

திருக்குறளில் இவ்வாறான சுவையான அம்சங்கள் இருப்பதை இப்புத்தகத்தை வாசித்ததன் பின்னரே அறியக்கிடைத்தது.

திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம், 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன். சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால், காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.

தற்போது என் மனதில் நிற்கும் குறள்கள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப்படும்

ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பாக்கு அறிந்து

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

அதாவது (விளக்கம்) இந்நான்கு குறள்களுக்குமான விளக்கம் ஒரு சிறு கதையாக.

இரண்டு காதலர்கள் (சிறு பிரச்சனையால் ) (ஊடலில்) ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் நீண்ட நேரம் இருக்கிறார்கள். (அருகருகில்) இருவருக்கும் சிறு சங்கடம் நீண்ட கதைக்காமல் இருப்பதால், எனவே இதை நீள விடாமடல் யாராவது ஒருவர் முதலில் கதைப்போம்என இருவரும் மனதளவில் நினைத்திருந்தும் இருவருக்கும் இன்னோர் பிரச்சனை. அதாவது

காதலனுக்கு தான் முதலில் கதைப்பதா? ஏன்கிற(“குஷிபிரச்சனை. அகம்புடிச்ச கழுதை ஈகோ)

காதலியின் பிரச்சனை வேறு, அதாவது காதலி தமிழிலக்கியம் படித்தவள்.

தமிழிலக்கியங்களிலே காதலர்கள் தொடர்பான ஒரு விடயம் இருக்கிறதாம். அதாவது எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர் ஆனால் காதலில் அதுவும் ஊடலில் தோல்லி அடைபவர் தான் வெற்றியாளர். எனவே இதன் படி தான் முதலில் கதைத்து ஊடலில் தோற்று தான் வெற்றிபெற்றால் காதலன் தோற்றுவிடுவான். காதலன் தோல்வியடைவது காதலியால் தாங்க முடியாது. எனவே அவளும் முதலில் கதைக்க தயங்குகிறாள். (இப்படியான நல்லெண்ணம் கொண்டகாதலிகள்என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)

எனவே யார் முதலில் கதைப்பது

காதலனுக்கு ஒரு யோசனை பிறந்தது தான் முதலில் தும்மினால் காதலி நூறு நூறு எனச் சொல்லுவாள் எனவே காதலி முதலில் கதைத்தவளாகுவாளென

(அதாவது அக்காலத்தில் ஒருவர் தும்மினால் அருகிலிருப்பவர் நூறு நூறு எனச் சொல்லும் வழக்கம் அப்படிச் சொன்னால் ஆயுள் கூடும் என்கிற மூட நம்பிக்கை.)

இதன் படி காதலன் தும்மியாயிற்று காதலி முதலில் கதைத்தவளாகிறாள். சட்டென காதலி அழத்தொடங்கிவிட்டாள். காரணம் யாதென காதலனுக்கு புரியவில்லை.

நீங்கள் நினைக்கலாம் காதலனை தோற்கடித்து விட்டேனே என்கிற நல்லெண்ணத்தில் அழுகிறாள் என நிச்சயமாக அப்பிடியில்லை

காதலன் தும்மியது, வேறொருத்தி காதலனை நினைத்ததால் தான் என எண்ணி அழுகிறாள்.
(எல்லா காதலிகளும் அறிமுகமாவது நல்லாத்தான் பிறகு தான் வில்லியாவது வழமையான தமிழ் சினிமா)

எனவே யார் அவள் என்றெண்ணி எல்லா பெண்களுக்கும் உரிய உயரிய பண்பானசந்தேகபுத்தியால் அழுகிறாள்.

பார்த்தீர்களா ! சிங்கங்களே உங்களுக்கு தும்முவதால் எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகும் என பார்த்தீர்களா!

ஏதோ அக்காலப் பெண் நீங்கள் தும்மியதால் யாரை நினைத்து தும்மினாய் என கேட்பாள்.

இக்காலப் பெண் நீங்கள் தும்மினால் உங்களக்குஎயிட்ஸ்என ஓடிவிடுவாள்.

ஆதற்காக தும்மல் வரும் போது தும்மாமல் மறைத்து விடாதீர் (காதலி அருகில் இருக்கும் போது)
அப்படி செய்தாலும் இன்னோர் பிரச்சனை

இதோ குறள்

தும்மச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
ஏம்மை மறைத்தீரோ என்று

அதாவது
நீங்கள் தும்மாமல் மறைத்தால் உங்கள் காதலி கேட்பாள் உங்கள் மேலே அன்பு கொண்டவள் உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்று தானே தும்மலை மறைத்தீர் என…..

எப்புடி….

உண்மையாக காதலன்கள் பாவமய்யா
உங்கள் துன்ப துயரங்களை இப்படியான குறள்களை படிக்கும் போது தான் உணரமுடிகிறது.

எனவே தும்மாதீர்தும்மாதீர்
வலு கவனம் தும்மல் வரும் இடங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தும்மல் வரும் இடங்கள்
தெகிவளை மிருக்காட்சிசாலை
வெள்ளவத்தை பீச் (புகையிரத புகை)
…………………………….
…………………………………….(தும்மல் வரும் இடங்கள் தெரிந்தவர்கள் வெற்றிடங்களை நிரப்பவும்.)

எனவே சிங்கங்கள் இடங்களை தெரிவு செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்)

நீ தும்மினால் உன்காதலி உன்னை கைவிடுவாள்
ஆன்றே வேறொருவர் கைபிடிப்பாள்
இது யான் யாத்த குறள்.


Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.