தமிழில் பிழை. (யான் பட்ட துன்பம்.)

தமிழ் எழுத்துக்களில் மாற்றம் தேவை. பல தடவை இது தொடர்பாக பலர் தமது கருத்துக்களை தெரிவித்திருத்தும் இதற்கான ரியான முடிவு எட்டப்படவில்லை. அதாவது தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் சில மாற்றங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன.

உதாரணமாக “farvisஎன்ற பெயரை தமிழில் எழுதினால்பர்விஸ்என்று தான் உச்சரிக்க முடிகிறது. அதாவதுfaஎன்ற தொனியை தரும் எழுத்து தமிழில் இல்லை.

“bus” தமிழில் எழுதி உச்சரித்தால்பஸ்என்று தான் உச்சரிக்க முடிகிறது. சரியான தொனியில் தமிழில் உச்சரிக்க முடிவதில்லை.
எனவே இவ்வாறான பிறமொழி எழுத்துக்களின் ஒலியை தரக்கூடிய சரியான எழுத்து தமிழில் இல்லை. புதிய சொற்களின் அறிமுகம் கிடைக்கும் போது, தமிழில் அவற்றிற்கான சரியான எழுத்துக்ள் அவசியமாகின்றன.

எனவே இவ்வாறான எழுத்துக்களுக்கு தமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. “faஎன்பதற்கு தமிழில்f ” என்றோ அல்லதுfaஎன்ற உச்சரிப்பை சரியாக மேற்கொள்ளக்கூடிய எழுத்து தேவை.

இதே போல “bandara” என்ற பெயரை தமிழில்பண்டாரஎன்று எழுதும் போது சரியான உச்சரிப்பு கிடைப்பதில்லை. எனவே இதற்கும் ‘ba” என்பதற்கு தகுந்த தமிழ் எழுத்து அவசியமாகின்றது.

தமிழில், முஸ்லீம் உணவகங்கங்களில்faஎன்பதற்குfஎன்ற எழுத்து அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற போதும் (உலகளாவிய ரீதியில்) பொதுவாக இந்த எழுத்துக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் சகோதர மொழியில் (சிங்கள மொழியில்) “faஎன்ற எழுத்துகாணப்படுகின்றது.
இதே போன்று சிங்களத்தில் உள்ள " ga


ஒலியை தரும் எழுத்துக்களும் தமிழில் இல்லை.

எனவே தமிழிலும், புதிய சொற்கள் அதிகம் பயன்படும் அந்நிய சொற்களை சரியாக உச்சரிக்கத்தக்கவாறான சரியான தமிழ் எழுத்துக்களும் தேவைப்படுகின்றன.

இவ்வாறான மாற்றங்கள் தமிழில் ஏற்படுத்தப்படுமாயின் பிற சொற்களுக்கும் அந்நிய மொழிகளுக்கும் ஏற்றவாறான சரியான உச்சரிப்பை தமிழில் கொடுக்க முடியும்.

இவ்வாறான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டும்
காரணம்
1. சில விளையாட்டு வீரர்களின் பெயர்களை தமிழ் பத்திரிகைகளில் வாசிக்கும் போது கன்றாவியாகவிருக்கிறது.

2. என்னைப் போன்ற சிங்கங்கள் பரீட்சைகளில்பிட்அடிக்கும் போதும் உச்சரிப்புப் பிழையால் பாதிக்கப்படுகின்றனர்.

3. முக்கியமாக நான் இதை எழுத காரணம் spoken தமிழ் - சிங்கள புத்தகங்களில் சிங்கள சொற்களை தமிழில் எழுதும் போது அவற்றிற்கான உச்சரிப்பு தமிழில் வேறு படுகின்றது. இது தெரியாமல் சிங்கள சொல்லொன்றை தமிழில் வாசித்து அதன் பிரகாரம் (ஆங்கில) வகுப்பில் சிங்கள நண்பியொருவருடன் உரையாட, உச்சரிப்பு பிழையால் சிங்களத்தில் அது கெட்டவார்த்தையாக மாறி பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.
(என்ன சொல் என்பதை வெளியிட முடியாத காரணத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது) எனவே வலு கவனம்.

ஆங்கில பல சொற்களுக்கு தமிழில் சரியான எழுத்துக்கள் இல்லாமையால் அவை கெட்டவார்த்தைகளாக உச்சரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.

தமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ் ஆய்வாளர்களே, தமிழ் ஆசான்களே, தமிழ் பெரியார்களே இது உங்களின் கடமையல்லவா?

இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் எனது கழுகு கண்களால் பார்த்துக்கொண்டே இருப்பேன். (news first)
தெரிவிப்பது இலங்()ன் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்.
27 comments:

யோ வொய்ஸ் (யோகா) திங்கள், ஆகஸ்ட் 31, 2009 8:44:00 முற்பகல்  

நானும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் தோழா, ப ச க இவை மூன்றும் சரியான உச்சரிப்பை வழங்குவதில்லை. உதாரணமாக Fa, Ba, Pa இவை மூன்றும் ப என்றே உச்சரிக்க வேண்டும் அது Pa என்றே ஒலியை தரும். நான் இதை கதைக்க சற்று பயம் ஏனென்றால் இதை கூறினால் என்னை தமிழ் எதிரி என கூறுவார்கள் என, ஏனெனில் பாடசாலை காலத்தில் இந்த பிரச்சினையை நான் விவாதிக்க ”என்னை நீ தமிழுக்கு எதிரி” என ஒதுக்கியமை நினைவுககு வருகிறது.

நல்ல ஆராய்வு, வாழ்த்துக்கள்

புல்லட் திங்கள், ஆகஸ்ட் 31, 2009 9:07:00 முற்பகல்  

அருமையான பதிவு இலங்கன்.. எம் குகிள் குழுமத்தில்ஒரு முறை பிரசுரியுங்கள்.. 90ம் ஆண்ட ளவில் லை , ளை போன்ற எழுத்துக்களை முன்னர் இருந்த முறையிலிருந்து மாற்றினார்கள்.. ஆகுவே புதிய மெய்யேழுத்துக்களின் அறிமுகம் சாத்தியமானதே.. உதைப்பறிற நானும் சிந்தித்திருக்கிறேன்..

ilangan திங்கள், ஆகஸ்ட் 31, 2009 9:21:00 முற்பகல்  

நன்றி அண்ணா தங்கள் வருகைக்கும். கருத்துக்கும்.

முக்கியமாக நான் இதை எழுத காரணம் spoken தமிழ் - சிங்கள புத்தகங்களில் சிங்கள சொற்களை தமிழில் எழுதும் போது அவற்றிற்கான உச்சரிப்பு தமிழில் வேறு படுகின்றது. இது தெரியாமல் சிங்கள சொல்லொன்றை தமிழில் வாசித்து அதன் பிரகாரம் (ஆங்கில) வகுப்பில் சிங்கள நண்பியொருவருடன் உரையாட, உச்சரிப்பு பிழையால் சிங்களத்தில் அது கெட்டவார்த்தையாக மாறி பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.

ilangan திங்கள், ஆகஸ்ட் 31, 2009 9:23:00 முற்பகல்  

நன்றி யோ வாய்ஸ்தங்கள் வருகைக்கும். கருத்துக்கும்.

Unknown திங்கள், ஆகஸ்ட் 31, 2009 1:03:00 பிற்பகல்  

ஆனால் இன்னுமொரு அன்னிய மொழிக்காக எங்கள் மொழியில்மாற்றங்களை கோருவது எந்தளவில் சரியானது?
தூய தமிழில் எழுதினால் இவ்வகையான பிரச்சினைகள் வராதே?

ilangan திங்கள், ஆகஸ்ட் 31, 2009 1:14:00 பிற்பகல்  

தம்பி கோபி ஊர்களின் பெயரையோ, அல்லது ஒருவரின் பெயரையோ சரியாக உச்சரிக்கவாவது அவை உதவும். மாற்றங்கள் வேண்டப்பட்டது தானே......

பெயரில்லா திங்கள், ஆகஸ்ட் 31, 2009 2:57:00 பிற்பகல்  

//இது தெரியாமல் சிங்கள சொல்லொன்றை தமிழில் வாசித்து அதன் பிரகாரம் (ஆங்கில) வகுப்பில் சிங்கள நண்பியொருவருடன் உரையாட, உச்சரிப்பு பிழையால் சிங்களத்தில் அது கெட்டவார்த்தையாக மாறி பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது//
அடிவாங்காமல் தப்பிவிட்டீர்களா? மறக்காமல் அவரிடம் சாரி கேளுங்கள்.
(மன்னிப்பு கேளுங்கள்)

சப்ராஸ் அபூ பக்கர் திங்கள், ஆகஸ்ட் 31, 2009 8:07:00 பிற்பகல்  

மீண்டும் வருகிறேன்....

Unknown செவ்வாய், செப்டம்பர் 01, 2009 1:03:00 முற்பகல்  

//கனககோபி கூறியது...
ஆனால் இன்னுமொரு அன்னிய மொழிக்காக எங்கள் மொழியில்மாற்றங்களை கோருவது எந்தளவில் சரியானது?
தூய தமிழில் எழுதினால் இவ்வகையான பிரச்சினைகள் வராதே?//


bus என்று ஏன் ஆங்கிலத்தில் எழுத நல்ல தமிழ் சொற்கள் இருக்கின்றன பயன் படுத்தலாமே. நபர்களின் பெயர்கள் ஊர்களின் பெயர் உச்சரிப்பைப் பொறுத்தவரை தமிழ் பெயர்களுக்கு இந்தப் பிரட்சனை அதிகம் வரப்போவதில்லை.

ilangan செவ்வாய், செப்டம்பர் 01, 2009 8:25:00 முற்பகல்  

சந்ரு...//
ஏதோ எனக்கு வந்த சங்கடம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக சொன்னேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ilangan செவ்வாய், செப்டம்பர் 01, 2009 8:28:00 முற்பகல்  

நொண்டிசாமியார்//
அந்த நண்பி ரொம்ப நல்லவங்க சாமி...
நன்றி தங்கள் வருகைக்கும். கருத்துக்கும்.

Unknown செவ்வாய், செப்டம்பர் 01, 2009 8:51:00 முற்பகல்  

ஆங்கிலத்தில் தமிழ் "ழ" உச்சரிப்புக்கும் "ற" உச்சரிப்புக்கும் சரியான மாற்று இல்லை.
அவற்றுக்கென ஆங்கிலம் தனியான எழுத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே ல், ள் வேறுபாடு ன்,ண் வேறுபாட்டை எல்லாம் ஆங்கிலத்தில் காட்ட முடியாதுள்ளது.

எடுத்துக்காட்டாக "பாணினி" என்ற பெயரை சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்தில் எழுதவே முடியாதுள்ளது.
உலகில் அதிகமான வெளி மொழிக்காரர்களால் பயன்படுத்தப்படும், வெளி மொழிப்பெயர்களை எழுதப்பயன்படும் ஆங்கில மொழி இந்த மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
உடனடித்தேவை ஆங்கில எழுத்துச் சீர்திருத்தம்.

Unknown செவ்வாய், செப்டம்பர் 01, 2009 9:01:00 முற்பகல்  

உலகின் ஒவ்வொரு மிழிக்கும் அதற்கேயுரிய தனிப்பட்ட உச்சரிப்புக்கள் இருக்கின்றன. எல்லா மொழிகளின் உச்சரிப்புக்களையும் எல்லா மொழிகளிலும் பயன்படுத்தக்கூடியவாறு எல்லா மொழிகளிலும் எழுத்துச் சீர்திருத்தம் கேட்டுக்கொண்டிருப்பது நடைமுறைச் சாத்தியமற்ற செயல். அது வீணான வேலையும் கூட.

மற்றது எல்லா மொழிகளது உச்சரிப்புக்களையும் எழுதத்தக்கவாறு தனது மொழியில் எழுத்துக்களை சேர்த்துக்கொண்டிருப்பது அந்த மொழியைப்பயன்படுத்தும் மக்களின் வேலையும் இல்லை.

அங்கிலம் பெரும்பாலும் வேற்றுமொழி உச்சரிப்புக்களை தன்னிடம் எழுத்துக்கள் இல்லாதபோது "ஆங்கிலப் படுத்தி" உள்வாங்குகிறது.

எடுத்துக்காட்டாக, "தமிழ்" என்பதை ஆங்கிலம் "டமில்" என்று தன் உச்சரிப்புக்கு மாற்றி எடுத்துக்கொள்கிறது.

"எழில்" என்ற பெயரை ஆங்கிலத்தில் நாம் எந்த உறுத்தலும் அற்று "எலில்" என்று எழுதுகிறோம்.

வேற்றுமொழிப் பெயர்களை ஒரு மொழியில் எழுதும் போது அந்த அந்தந்த மொழிகளின் உச்சரிப்புடனேயே வாசிக்கபப்டும் அது இயல்பானது. அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

ஆங்கிலப்பெயரை சரியான உச்சரிப்பு வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும். அரபு பெயரை மிகத்துல்லியமான உச்சரிப்பைப்பெற அரபியில் தான் எழுதவேண்டும்.

இது மிக வெளிப்படையான ஒரு விசயம்.

"மறவன்" என்பதையோ "தமிழன்" என்பதையோ சிங்களத்தில் சரியாக எழுதவே முடியாது. இப்படி இருக்க சிங்கள மொழி இப்படி மற்ற மொழி உச்சரிப்புகக்ளை உள்வாங்குவதாக சொல்வது தகவற்பிழை.

ilangan செவ்வாய், செப்டம்பர் 01, 2009 9:02:00 முற்பகல்  

நிச்சயமாக வெறுமனே தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் மாற்றங்கள் தேவை பிறமொழிகளின் பாவனை அதிகமாக இருக்குமிடத்து.. நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Mathuvathanan Mounasamy / cowboymathu செவ்வாய், செப்டம்பர் 01, 2009 9:37:00 முற்பகல்  

தமிழ்மொழியில் மாற்றங்கள் செய்வோம்... புதிய புதிய எழுத்துக்களை உருவாக்குவோம்... உலகின் ஆயிரமாயிரம் மொழிகளிலும் உள்ள ஒலிக்குறிப்புகளை குறிக்கக்கூடியவாறு எழுத்துக்களை உருவாக்குவோம்.... ஆனால் இறுதியில் அம்மொழிக்கு வேறொரு பெயர் வைப்போம்...

எவன் அதைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான் என்றும் பார்ப்போம்.

உலகின் மிக கேவலமான, சிக்கலான, கொடுமையான மொழி அதுவாகத்தான் இருக்கமுடியும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

Unknown செவ்வாய், செப்டம்பர் 01, 2009 11:48:00 முற்பகல்  

//ilangan கூறியது...
சந்ரு...//
ஏதோ எனக்கு வந்த சங்கடம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக சொன்னேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.//அது உங்கள் கருத்து இது என் கருத்து. எதுவும் தப்பாக நான் சொல்லவில்லை உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்.

Thivak செவ்வாய், செப்டம்பர் 01, 2009 3:13:00 பிற்பகல்  

உங்களுடைய இந்த அனுபவம் கட்டுரை வடிவில் வந்தது வரவேற்க்கத்தக்கது.மாற்றங்கள் பற்றிய சிந்தனைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
http://thivak.blogspot.com/

Thivak செவ்வாய், செப்டம்பர் 01, 2009 3:25:00 பிற்பகல்  

அந்நிய என்பதுதான் சரியானது.கோபி தவறாக எழுதியுள்ளார்.அத படித்த இன்னொரு சிங்கமும் தவறை கண்டுகொள்ளவேஇல்லை.http://thivak.blogspot.com/

பெயரில்லா செவ்வாய், செப்டம்பர் 01, 2009 4:49:00 பிற்பகல்  

//அந்த நண்பி ரொம்ப நல்லவங்க சாமி...//
நல்லா இருந்தா சரிதான்.
உன் வயதுக்கார பையன் என் சிஷ்யனாகி விட்டான். அவன் முகவரி:
http://newtamil4u.blogspot.com
சென்று பார்.
இணையதள நட்புக்கு rshanmugam.salem@gmail.com ற்கு ஈமெயில் அனுப்பலாமே..

ilangan புதன், செப்டம்பர் 02, 2009 6:01:00 முற்பகல்  

//நொண்டிசாமியார் //
சாமிகளின் வருகையால் என் பதிவு புனித மடையும் என நம்புகிறேன்.

Unknown புதன், செப்டம்பர் 02, 2009 7:40:00 முற்பகல்  

// Thivak கூறியது...
அந்நிய என்பதுதான் சரியானது.கோபி தவறாக எழுதியுள்ளார்.அத படித்த இன்னொரு சிங்கமும் தவறை கண்டுகொள்ளவேஇல்லை. //

நண்பா தவறுக்கு மன்னிக்கவும்.
'ந' இற்குரிய 'e' எழுத்திற்கு கீழே தான் 'ன' ற்கு உரிய 'd' எழுத்து இருக்கிறது. அவசரத்தில் கவனிக்க மறந்துவிட்டேன்.
எனினும் தவறுகள் தவறுகள் தான்.
தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்.

Unknown செவ்வாய், செப்டம்பர் 08, 2009 12:01:00 பிற்பகல்  

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

மதுவர்மன் ஞாயிறு, செப்டம்பர் 13, 2009 6:50:00 பிற்பகல்  

மு.மயூரன்,
உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் சில பல தவறுகள் விட்டிருக்கின்றீர்கள் :)

//ஆங்கிலத்தில் தமிழ் "ழ" உச்சரிப்புக்கும் "ற" உச்சரிப்புக்கும் சரியான மாற்று இல்லை.
அவற்றுக்கென ஆங்கிலம் தனியான எழுத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே ல், ள் வேறுபாடு ன்,ண் வேறுபாட்டை எல்லாம் ஆங்கிலத்தில் காட்ட முடியாதுள்ளது.//

தமிழ் 'ழ்' உச்சரிப்பை எத்தனை தமிழ் பேசுபவர்கள் சரியாகப்பாவிக்கின்றார்கள் என்றால், மிகச்சிலரே. இந்த 'ழ்' வை பலர், 'ள' உச்சரிப்பது போன்றே உச்சரிக்கின்றார்கள், ஆகவே அவாறு உச்சரிப்பதால் பிரச்சினையொன்றும் ஆகப்போவதுமில்லை.

தமிழ் 'ற' ஒலியை குறிப்பதற்கு தான் 'ra' என்று பயன்படுத்தலாமே. உ+ம் அறை என்பது 'arai' என்றும், அரை என்பது 'atai' என்றும் சரியாக எழுதப்படலாம் தானே.

//கூடவே ல், ள் வேறுபாடு ன்,ண் வேறுபாட்டை எல்லாம் ஆங்கிலத்தில் காட்ட முடியாதுள்ளது.//

ல், ள் வேறுபாடுகள் 'l' எழுத்தின் மூலமும், ன், ண் வேறூபாடுகள் 'n' எழுத்தின் மூலமும் இலகுவாக காட்டலாமே. எப்படி நீங்கள் முடியாது என்று சொல்வீர்கள்.
உ+ம் - cinnamon என்பதில் ன் ஒலியும் sunny எப்ன்பதில் ண் ஒலியும் வருகின்றன..
lilly, என்பதில் ல் ஒலியும் pulley என்பதில் ள் ஒலியும் வருகின்றன..

ஆங்கிலத்தில் இந்த ஒலிகளை எழுத முடியாது என்பது தவறு.

தமிழில் எவ்வாறு க எழுத்து கடவுள் என்பதிலும், கல் என்பதிலும் வேறுபட்டு ஒலிக்கின்றதோ, ஆங்கிலத்திலும் l, n என்பன சொற்களுக்கேற்றற்போல், மாறுபட்டு ஒலிக்கும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி படிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.அதாவது உச்சரிப்பு விதிகள் என்று பார்க்கப்போனால் குழப்பமடைந்து விடுவோம்.

//எடுத்துக்காட்டாக "பாணினி" என்ற பெயரை சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்தில் எழுதவே முடியாதுள்ளது//

பாணினி யில் உள்ள 'பா' வின் ஒலியையும் 'ணி' யின் ஒலியையும், 'னி' யின் ஒலியையும் ஆங்கிலத்தில் 'pa', 'ni', 'ni', என்று குறிப்பிட முடியும், ஆனால் ஆங்கிலச்சொல் 'Bill Ford' இல் உள்ள 'b' 'f' என்பவற்றை தமிழில் குறிப்பிட முடியுமா?

தமிழ்ல் என்ற ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கு சமனான உச்சரிப்புள்ள எழுத்துக்களுக்கான தேவை, அசசியமாக இருக்கும் பட்சத்தில் புதிய எழுத்துக்களை அறிமுகம் செய்வது மிக நன்மையேயன்றி தீமையன்று.

மதுவர்மன் ஞாயிறு, செப்டம்பர் 13, 2009 7:03:00 பிற்பகல்  

//எடுத்துக்காட்டாக, "தமிழ்" என்பதை ஆங்கிலம் "டமில்" என்று தன் உச்சரிப்புக்கு மாற்றி எடுத்துக்கொள்கிறது. //

'தமிழ்' என்பது ஆங்கிலத்தில் 'ரமிள்(tamil)' என்று எழுதப்படுகின்றதேயொழிய 'டமில்' என்றல்ல. சரியான ஆங்கில உச்சரிப்பை அறிந்தவர்களுக்கு இது விளங்கும்..

//"எழில்" என்ற பெயரை ஆங்கிலத்தில் நாம் எந்த உறுத்தலும் அற்று "எலில்" என்று எழுதுகிறோம். //

'எழில்' என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் 'elil' என்று எழுதப்பட்டு அதை எளில் என்ற உச்சரிப்போடே வாசிக்கமுடியும். ஆங்கில l அவ்வாறு மாறு பட்டு ஒலிக்கும் நிரைய சந்தர்ப்பங்கள் உண்டு..

//வேற்றுமொழிப் பெயர்களை ஒரு மொழியில் எழுதும் போது அந்த அந்தந்த மொழிகளின் உச்சரிப்புடனேயே வாசிக்கபப்டும் அது இயல்பானது. அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

ஆங்கிலப்பெயரை சரியான உச்சரிப்பு வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும். அரபு பெயரை மிகத்துல்லியமான உச்சரிப்பைப்பெற அரபியில் தான் எழுதவேண்டும்.//

ஒலிகளை வேற்றுமொழிகளில் இருந்து வருகின்ரன என்ற கண்ணோட்டத்தை விட்டுத்தள்ளவேண்டும் முதலில்.

வேற்று மொழி என்பதை மறந்துவிட்டு, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே, தமிழ் மொழிக்கேயுரிய ஒலிகளைத்தவிரம் வேறு என்ன என்ன புதிய ஒலிகள் தற்போது பாவனையிலுள்ளன என்பதை கண்டறியவேண்டும், அவற்றை, பாரிய வேறுபாடுகளின்றி தமிழிலே குறிப்பிட முடியாதாயின், அவ்வொலிகளுக்கான எழுத்துக்களின் தேவையை தமிழ் மொழி வேண்டி நிற்கின்றது என்பது வெளிப்படை

'fa' என்பதை 'ப' என்று குறீப்பிடுவதும் 'ba' என்பதை 'ப' என்று குறிப்பிடுவது, மிகப்பாரிய ஒலி வேறுபாடு தானே.

Unknown திங்கள், செப்டம்பர் 14, 2009 11:10:00 முற்பகல்  

மதுவர்மன்,

//தமிழ் 'ழ்' உச்சரிப்பை எத்தனை தமிழ் பேசுபவர்கள் சரியாகப்பாவிக்கின்றார்கள் என்றால், மிகச்சிலரே. இந்த 'ழ்' வை பலர், 'ள' உச்சரிப்பது போன்றே உச்சரிக்கின்றார்கள், ஆகவே அவாறு உச்சரிப்பதால் பிரச்சினையொன்றும் ஆகப்போவதுமில்லை.//

இப்படிச்சொல்லிவிட முடியாதல்லவா?

இலங்கைத்தமிழர்கள்தான் பெரும்பாலும் ழ வை சரியாக உச்சரிப்பதில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் மிகத்திருத்தமாக ழ வை உச்சரிக்கிறார்கள். சென்னைத்தமிழ் என்று திரைப்படங்களில் வரும் உச்சரிப்பில் கூட ழ திருத்தமாக இருக்கிறது.


//தமிழ் 'ற' ஒலியை குறிப்பதற்கு தான் 'ra' என்று பயன்படுத்தலாமே. உ+ம் அறை என்பது 'arai' என்றும், அரை என்பது 'atai' என்றும் சரியாக எழுதப்படலாம் தானே.//

இதுவும் சிக்கலானது.

ஈழத்தமிழர்களிலும் ஒரு சிறுபான்மையினரைத்தவிர மற்றெல்லா தமிழர்களும் "ர" வை "ra" என்றே உச்சரிக்கிறார்கள். "ta" என்று உச்சரிக்கும் வழக்கம் பெரும்பாலும் யாழ்பாணத்தவருடையது. ஏனைய இடங்களிலும் இவ்வழக்கம் சிறுபான்மையாக உண்டு. ஆனால் ஈழத்தில் மட்டுமே.

//ஆங்கிலத்தில் 'ரமிள்(tamil)' என்று எழுதப்படுகின்றதேயொழிய//

ramil என்றல்ல Tamil என்றே எழுதப்படுகிறது. "ட்டமில்" அல்லது "ட்டமிள்"தமிழில் புதிய எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்பதிலோ, தமிழ் மாற்றமடைய வேண்டும் என்பதிலோ எனக்கு முரண்பட எதுவுமில்லை. தமிழ் இப்போதிருப்பதைப்போன்று காலகாலமாக இருந்ததும் இல்லை.

ஆனால் இங்கே இருக்கும் அதிகார உறவுகளைத்தான் நான் கடுமையாக எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகில் பெரும்பாலான மொழிக்காரர்கள் தங்கள் பெயர்களை உச்சரிப்புக்களை எழுத ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்திலோ அப்படி பிற மொழி உச்சரிப்புக்களை உள்வாங்குவதற்கென புதிய எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை. நாம் எமது மொழியின் பெயரையே தவறான உச்சரிப்போடுதான் அங்கிலத்தில் எழுதவேண்டி இருக்கிறது.

"alaku" என்று எழுதினால் அது அழகா, அலகா, அளகா என்பதை அறியமுடியாதிருப்பது பாரதூரமானதல்ல என்று நீங்கள் சொல்ல முயல்கிறீர்கள். ஆனால் பில் ஃபோர்ட் என்று எழுதினால் அது Pill ford ஆ Bill fort ஆ என்ற வித்தியாசம் பாரதூரமானதென்கிறீர்கள்.

1. எந்த மொழி உச்சரிப்பையும் இன்னொரு மொழியில் தெளிவாக எழுதிவிட முடியாது. இதற்காக எல்லா மொழிகளையும் திருத்திக்கொண்டிருக்க முடியாது.

2. ஆங்கிலம் பிற மொழிச்சொற்களை ஆங்கிலப்படுத்தியே உள்வாங்குகிறது. மற்றவர்களும் அப்படியே செய்துகொள்ளலாம்.

3. அன்றாடம் தமிழர் பயன்படுத்தும் வேற்றுமொழிச்சொற்களுக்கெல்லாம் எழுத்துத்தேடப்போனால், ஆங்கிலம், சிங்களம், இந்தி, தெலுங்கு தொடக்கம், டானிஷ், ஃப்ரெங்ச் என்று நூற்று மொழிகளின் உச்சரிப்புக்களுக்காவது எழுத்துக்கள் தேட வேண்டி வரும்.

4. ஆங்கிலத்தில் elil என்று எழுதுவதை நான் எழில் என்று வாசித்துக்கொள்ள முடியுமென்றால் தமிழில் பஸ் என்று எழுதுவதை Bus என்று வாசித்துக்கொள்ள முடியும். பிரச்சினை இல்லை.

Unknown திங்கள், செப்டம்பர் 14, 2009 8:51:00 பிற்பகல்  

என்னுடைய கருத்துக்களுக்குக் கிட்டவாக இவரும் எழுதியிருக்கிறார் பாருங்கள்

http://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_2822.html

ilangan வியாழன், செப்டம்பர் 17, 2009 6:08:00 முற்பகல்  

மயுரன் அண்ணா தங்களுடைய கேள்விகளுக்கு சரியான விளக்கம் கடந்த மாத தாயகம் சஞ்சிகையிலே வெளியாகியிருக்கிறதாம். நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அது இன்னும் என் கைகளில் கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் பதிவிடகிறேன்.முடிந்தால் பாருங்கள்...

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.