பதிவர் சந்திப்பும் பற்றீசும்.

பதிவர் சந்திப்பு சிறு விமர்சனம்.
வடையும், பற்றீசும், ரீயும் நன்றாக இருந்தது. ( கேக்கை சுவைபார்க்கவில்லை). பதிவர் சந்திப்பு பதிவர் ஒன்றுகூடல் என அனைத்து தளங்களினதும் விளம்பரத்தோடு பரபரப்பாக தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் பதிவர்களை ஒன்றாக காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

ஆனால் பலத்த எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு எதிர்பார்த்ததைத் போன்று அதிகம் கிடைக்காதது பலத்த ஏமாற்றம். அண்மையில் எதிர்பார்ப்போடு போன சேரனின் “பொக்கிசம்” போல.

ஆவலுடன் பார்க்கவேண்டும் என்றிருந்த சில பதிவர்களை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எனது அபிமான புல்லட், வந்தியத்தேவன், தமிழ் பூங்கா, சர்வேஸ்வரன், ஆதிரை போன்ற பலரை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
இடையிடையே புல்லட்டின் காமெடி கலகலப்பு.

புல்லட்டின் ஆலோசனைக்கு அமைய இனி என்னுடைய பதிவுக்கு ஹிட்ஸ் மற்றும் வருகை தந்தோரின் எண்ணிக்கை ஆகியன அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை.

இரண்டு தடவை பற்றீஸ் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. மொத்தத்தில் பதிவர் சந்திப்பில் வடை, பற்றீஸ், ரீ, பதிவர் புல்லட், வந்தி இவையெல்லாம் ப்ளஸ். மற்றெல்லாம் ………..

மதிப்பெண் நூற்றுக்கு ஐம்பது போடலாம்.
இது முதல் தடவையென்பதால் இனி வரும் ஒன்றுகூடல்கள் சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்படுத்தியதே பெரிய விடயம்.
பெட்டியில் ஏதாவது போடணும்னு மனதார நினைத்திருந்தாலும் என் கையால் எதுவும் போட முடியாமை சிறு வருத்தம். (உண்மையா சொல்லுறேன்)

யார் யார் பெட்டியில் போடுகிறார்கள் என்பதை வாசலில் இருந்து படம் பிடித்து கொண்டிருந்த “கமராவின்” கண்களுக்குள் அகப்படாமல் வெளியே வர போதும் போதும் என்றாகிவிட்டது.


14 comments:

Unknown ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2009 10:17:00 பிற்பகல்  

நிறைய பற்றீசுகளைக் காணவில்லை என்று சொன்னார்கள் எனக்கு உங்கள்மீதுதான் சந்தேகமாக இருக்கிறது.

Unknown திங்கள், ஆகஸ்ட் 24, 2009 11:29:00 முற்பகல்  

பதிவர் சந்திப்புக்குப் போய் ஓசியில் இரண்டு பற்றீஸ் சாப்பிட்டதை ஒப்புவித்தீர்களே!

wow

Unknown திங்கள், ஆகஸ்ட் 24, 2009 11:47:00 முற்பகல்  

அடேயப்பா... தந்தது கோப்பி.. ரீ இல்ல...
என்னடாப்பா செய்தனீ அங்க வந்து? ஆ?
அது சரி பிரபல பதிவர் கனககோபி வந்தாராமே? உண்மையே?
Word verification ஐ தூக்கி விடு நண்பா... ரோதனையாக இருக்கிறது.

Unknown திங்கள், ஆகஸ்ட் 24, 2009 7:57:00 பிற்பகல்  

எப்பவும் சாப்பாட்டிலேதான் கண்ணாக இருப்பிங்க போல....

ஊர்சுற்றி செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 6:49:00 முற்பகல்  

நீங்கதான் 50 மதிப்பெண்கள் போட்டிருக்கிறீர்கள். முதல் தடவைதானே!

கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

Unknown செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 7:15:00 முற்பகல்  

பதிவர்கள் சந்திப்பு மூலமாக உங்கள் வலைப்பதிவை அறிய முடிந்தது.

தொடருங்கள்

ilangan செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 9:08:00 முற்பகல்  

சந்தேகமே வரக்கூடாது. அதான் நானே கௌரவமா சொல்லிட்டேனே. ரொம்ப நன்றி உங்கள் பதிவையும் காணக்கிடைத்தது. பதிவர் சந்திப்பில் உங்களை காணமுடியவில்லை. முதன் முதலில் சினிமாவை விமர்சித்த ஒருவர் படத்தை பார்த்துவிட்டு மரங்களும் ஆட்டுக்குட்டியும் நல்லா நடித்திருக்கு என்றாராம். ஆனால் இப்ப சினிமாவின் வளர்ச்சி பிரமாண்டமானது அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு. ஓகே

ilangan செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 9:25:00 முற்பகல்  

to gopi
நல்லவர், வல்லவர் கோபி அண்ணா வந்திருந்தாக போதுமா. கண்ணா நீரும் என்னருகில் இருந்து இரண்டு வடைக்கு உலை வைக்கவில்லையென நெஞ்சைத்தொட்டு சொல்லும் பார்ப்போம்.

Unknown செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 9:27:00 முற்பகல்  

//யார் யார் பெட்டியில் போடுகிறார்கள் என்பதை வாசலில் இருந்து படம் பிடித்து கொண்டிருந்த “கமராவின்” கண்களுக்குள் அகப்படாமல் வெளியே வர போதும் போதும் என்றாகிவிட்டது. //


இதுக்கு இப்பிடி வேற அர்த்தமிருக்கா... :-)

Unknown செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 12:12:00 பிற்பகல்  

// ilangan கூறியது...
to gopi
நல்லவர், வல்லவர் கோபி அண்ணா வந்திருந்தாக போதுமா. கண்ணா நீரும் என்னருகில் இருந்து இரண்டு வடைக்கு உலை வைக்கவில்லையென நெஞ்சைத்தொட்டு சொல்லும் பார்ப்போம்.//
யாரின்ர நெஞ்ச...???

ஊர்சுற்றி செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009 6:29:00 பிற்பகல்  

நான் இருப்பது தமிழ்நாட்டில், அங்கு எப்படி வருவது...!

//அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு.//

உண்மைதான். இன்னும் வளர்ச்சியடைய இதுபோன்று சிந்திப்பதும் நல்லதுதான்.

வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். புதன், ஆகஸ்ட் 26, 2009 5:31:00 முற்பகல்  

உங்கள் பதிவில் உங்கள் பற்றீஸ் ஆசை தெரிகிறது. கருத்த்டுப்பகிர்விர்க்கு நன்றிகள்.

ARV Loshan செவ்வாய், செப்டம்பர் 01, 2009 9:49:00 முற்பகல்  

புல்லட்டின் வாரிசோ நீங்கள்?

பட்டிசைக் கவனிச்ச அளவுக்கு பதிவர்களின் பேச்சைப் பற்றி எதுவும் கவனிக்கலியோ?

முக்கியமான விஷயமாக பட்டிஸ் இருக்கு.. அடுத்த சந்திப்புக்கு பட்டிஸ் பரிமாறப்படாது..

ilangan புதன், செப்டம்பர் 02, 2009 5:51:00 முற்பகல்  

தயவு செய்து அந்த பற்றீசை மட்டும் நிப்பாட்டி விடாதையுங்கோ. உறைப்பான விசயம் கதைக்க்கும் பேகாது உறைப்பும் சேர்த்து சாப்பிட்டா உடம்புக்கு நல்லதாம் டொக்டர் சொன்னது. எனவே அடுத்த சந்திப்பு எப்படியோ காரசாரமாத் தான் இருக்கும். சந்திப்பில் இல்லாவிட்டாலும் பற்றீசில் இருக்க வேண்டும் என்பது தான் என் அவா..

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.