தமிழில் பிழை. (யான் பட்ட துன்பம்.)

தமிழ் எழுத்துக்களில் மாற்றம் தேவை. பல தடவை இது தொடர்பாக பலர் தமது கருத்துக்களை தெரிவித்திருத்தும் இதற்கான ரியான முடிவு எட்டப்படவில்லை. அதாவது தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் சில மாற்றங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன.

உதாரணமாக “farvisஎன்ற பெயரை தமிழில் எழுதினால்பர்விஸ்என்று தான் உச்சரிக்க முடிகிறது. அதாவதுfaஎன்ற தொனியை தரும் எழுத்து தமிழில் இல்லை.

“bus” தமிழில் எழுதி உச்சரித்தால்பஸ்என்று தான் உச்சரிக்க முடிகிறது. சரியான தொனியில் தமிழில் உச்சரிக்க முடிவதில்லை.
எனவே இவ்வாறான பிறமொழி எழுத்துக்களின் ஒலியை தரக்கூடிய சரியான எழுத்து தமிழில் இல்லை. புதிய சொற்களின் அறிமுகம் கிடைக்கும் போது, தமிழில் அவற்றிற்கான சரியான எழுத்துக்ள் அவசியமாகின்றன.

எனவே இவ்வாறான எழுத்துக்களுக்கு தமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. “faஎன்பதற்கு தமிழில்f ” என்றோ அல்லதுfaஎன்ற உச்சரிப்பை சரியாக மேற்கொள்ளக்கூடிய எழுத்து தேவை.

இதே போல “bandara” என்ற பெயரை தமிழில்பண்டாரஎன்று எழுதும் போது சரியான உச்சரிப்பு கிடைப்பதில்லை. எனவே இதற்கும் ‘ba” என்பதற்கு தகுந்த தமிழ் எழுத்து அவசியமாகின்றது.

தமிழில், முஸ்லீம் உணவகங்கங்களில்faஎன்பதற்குfஎன்ற எழுத்து அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற போதும் (உலகளாவிய ரீதியில்) பொதுவாக இந்த எழுத்துக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் சகோதர மொழியில் (சிங்கள மொழியில்) “faஎன்ற எழுத்துகாணப்படுகின்றது.
இதே போன்று சிங்களத்தில் உள்ள " ga


ஒலியை தரும் எழுத்துக்களும் தமிழில் இல்லை.

எனவே தமிழிலும், புதிய சொற்கள் அதிகம் பயன்படும் அந்நிய சொற்களை சரியாக உச்சரிக்கத்தக்கவாறான சரியான தமிழ் எழுத்துக்களும் தேவைப்படுகின்றன.

இவ்வாறான மாற்றங்கள் தமிழில் ஏற்படுத்தப்படுமாயின் பிற சொற்களுக்கும் அந்நிய மொழிகளுக்கும் ஏற்றவாறான சரியான உச்சரிப்பை தமிழில் கொடுக்க முடியும்.

இவ்வாறான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டும்
காரணம்
1. சில விளையாட்டு வீரர்களின் பெயர்களை தமிழ் பத்திரிகைகளில் வாசிக்கும் போது கன்றாவியாகவிருக்கிறது.

2. என்னைப் போன்ற சிங்கங்கள் பரீட்சைகளில்பிட்அடிக்கும் போதும் உச்சரிப்புப் பிழையால் பாதிக்கப்படுகின்றனர்.

3. முக்கியமாக நான் இதை எழுத காரணம் spoken தமிழ் - சிங்கள புத்தகங்களில் சிங்கள சொற்களை தமிழில் எழுதும் போது அவற்றிற்கான உச்சரிப்பு தமிழில் வேறு படுகின்றது. இது தெரியாமல் சிங்கள சொல்லொன்றை தமிழில் வாசித்து அதன் பிரகாரம் (ஆங்கில) வகுப்பில் சிங்கள நண்பியொருவருடன் உரையாட, உச்சரிப்பு பிழையால் சிங்களத்தில் அது கெட்டவார்த்தையாக மாறி பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.
(என்ன சொல் என்பதை வெளியிட முடியாத காரணத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது) எனவே வலு கவனம்.

ஆங்கில பல சொற்களுக்கு தமிழில் சரியான எழுத்துக்கள் இல்லாமையால் அவை கெட்டவார்த்தைகளாக உச்சரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.

தமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ் ஆய்வாளர்களே, தமிழ் ஆசான்களே, தமிழ் பெரியார்களே இது உங்களின் கடமையல்லவா?

இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் எனது கழுகு கண்களால் பார்த்துக்கொண்டே இருப்பேன். (news first)
தெரிவிப்பது இலங்()ன் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்.
இயற்கையிற்கு புது வரைவிலக்கணம் நயன்தாரா

(சீரியஸ் பதிவு)
இயற்கைக்கு புது வரைவிலக்கணம் வேண்டும்.
காரணம் ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் வாசகங்கள் இவை.

“ இயற்கையை பாதுகாப்போம்”
“ இயற்கைத்தாயை பாதுகாப்போம்”
“இயற்கை இறைவன் தந்த அருங்கொடைகளில் ஒன்று” எனவே இயற்கையை பாதுகாப்போம். இயற்கை அழிவை தடுப்போம்.

தற்காலத்தில் இவ்வாறான வாசகங்கள் மக்களை சென்றடையுமா? என்பது கேள்வி?

தற்காலத்தில்
இயற்கையை தாயிற்கோ, கோயிலுக்கோ உவமித்தல் தகுமா? ( ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரவழிபாட்டிற்கென ஒரு வேத காலமே இருந்தது)

ஆனால் இப்ப…

அனேக தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் வாழ்வதால், தாய்க்குலங்களையே கவனிக்கமுடியாத நிலையில் எப்படி இயற்கையை பாதுகாப்பது?

“ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” என்றாகிவிட்ட இந்நிலையில் இயற்கையை, இறைவன் தந்த அருங்கொடை, வரப்பிரசாதம், செல்வம் என்றெல்லாம் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படுமா?

இயற்கையை பாதுகாப்பதற்காகவென பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையும் எவ்வகையில் சாத்தியம்? எனவே எனது யோசனைப்படி இயற்கைக்கு புது வரைவிலக்கணமும் உவமையும் தேவை.

எனவே ………….

இயற்கையை நமீதாவுக்கோ, நயன்தாராவுக்கோ ஒப்பிடும் போது நம் இளைஞர்களுக்கு மத்தியில் (எனக்கும்) ஒரு தனிக்கவனம் இயற்கை மீது தோன்றும்.

எனவே கவிஞர்களும் நமீதா, நயன்தாராவை இயற்கை வளங்களை (பூ, மரம், செடி, கொடி, நீர்வீழ்ச்சி, வானம், காற்று, மழை…..) உவமித்து பாடுவதை நிறுத்தி இயற்கை வளங்களை நமீதா, நயன்தாராவுக்கு உவமித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உதாரணத்துக்கு ரம்பாவின் கால்கள் வாழை மரத்தை போல என்று வர்ணிப்பதை தவிர்த்து, வாழை மரம் ரம்பாவின் கால்கள் போன்றது என்று வர்ணித்தால் வாழை மரத்தை வெட்டும் ஒவ்வொரு மனிதனும் ரம்பாவின் கால்களையா நாம் வெட்டுகின்றோம் என்று யோசிப்பான்.

இவ்வாறு உவமித்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
எனவே ஒவ்வொரு இயற்கை வளங்களை அழிக்கும் மனிதனும் சற்றுச் சிந்தித்து விழிப்புடன் இருப்பான்.

இயற்கை வளங்களை பாதுகாக்கவென புதிய அமைப்புக்கள் உருவாக்கப்படத்தேவையில்லை. தானாகவே இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகள் உருவாகும் ரசிகர் மன்றங்களின் வாயிலாக.
எனவே இயற்கையை பாதுகாக்க இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டால் சிறப்பு.

நான் உதாரணத்துக்காக சொன்ன நமீதா, நயன்தாரா எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

ஏனெனில் அண்மையில் “யாழ்தேவி” திரட்டி தொடர்பான சர்ச்சையைப் போன்று அமையாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவர் அவசியம் எனவே என்னால் முடிந்த சில பரிந்துரைகளை தருகிறேன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவரை தெரிவு செய்து இயற்கையை அழியாமல் பாதுகாப்போம்.

உங்களால் முடிந்தால் பின்னூட்டம் வழியாக பரிந்துரை செய்து பொதுவான ஒருவரை தேர்வு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோலிவூட் பரிந்துரைகள் :
த்ரிஸா, தமன்னா, ஸ்ரேயா, மும்தாஜ், சோனா(வடிவேல்), ஸ்னேகா, ப்ரியாமணி, சானாகான் (புது ரம்பா), பழைய ரம்பா……….

பாலிவூட் பரிந்துரைகள் :
மல்லிகா செராவத், ஸில்பா செட்டி, அசின், ஸ்ருதி ஹாஸன், ஜெனிலியா…….

இலங்கன் வழமைக்கு மாறாக அறிவு பூர்வமாக, உலகை நோக்கிய பார்வையில் சமூக சிந்தனையுடன் எழுதிய பதிவு இது.
பி.கு: என் சுய கௌரவத்தை பாதிக்கும் வண்ணம் போலியான கிசு கிசு செய்திகள் வெளிவருகின்றன போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். http://tamilgopi.blogspot.com

பதிவர் சந்திப்பும் பற்றீசும்.

பதிவர் சந்திப்பு சிறு விமர்சனம்.
வடையும், பற்றீசும், ரீயும் நன்றாக இருந்தது. ( கேக்கை சுவைபார்க்கவில்லை). பதிவர் சந்திப்பு பதிவர் ஒன்றுகூடல் என அனைத்து தளங்களினதும் விளம்பரத்தோடு பரபரப்பாக தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் பதிவர்களை ஒன்றாக காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

ஆனால் பலத்த எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு எதிர்பார்த்ததைத் போன்று அதிகம் கிடைக்காதது பலத்த ஏமாற்றம். அண்மையில் எதிர்பார்ப்போடு போன சேரனின் “பொக்கிசம்” போல.

ஆவலுடன் பார்க்கவேண்டும் என்றிருந்த சில பதிவர்களை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எனது அபிமான புல்லட், வந்தியத்தேவன், தமிழ் பூங்கா, சர்வேஸ்வரன், ஆதிரை போன்ற பலரை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
இடையிடையே புல்லட்டின் காமெடி கலகலப்பு.

புல்லட்டின் ஆலோசனைக்கு அமைய இனி என்னுடைய பதிவுக்கு ஹிட்ஸ் மற்றும் வருகை தந்தோரின் எண்ணிக்கை ஆகியன அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை.

இரண்டு தடவை பற்றீஸ் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. மொத்தத்தில் பதிவர் சந்திப்பில் வடை, பற்றீஸ், ரீ, பதிவர் புல்லட், வந்தி இவையெல்லாம் ப்ளஸ். மற்றெல்லாம் ………..

மதிப்பெண் நூற்றுக்கு ஐம்பது போடலாம்.
இது முதல் தடவையென்பதால் இனி வரும் ஒன்றுகூடல்கள் சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்படுத்தியதே பெரிய விடயம்.
பெட்டியில் ஏதாவது போடணும்னு மனதார நினைத்திருந்தாலும் என் கையால் எதுவும் போட முடியாமை சிறு வருத்தம். (உண்மையா சொல்லுறேன்)

யார் யார் பெட்டியில் போடுகிறார்கள் என்பதை வாசலில் இருந்து படம் பிடித்து கொண்டிருந்த “கமராவின்” கண்களுக்குள் அகப்படாமல் வெளியே வர போதும் போதும் என்றாகிவிட்டது.


Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.