பதிவர் சந்திப்பு சீசன் 02 / 02

பதிவர் சந்திப்பு சீசன் 02 பற்றிய பதிவு 01 ஐ ஏற்கஉவே வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக அமைகிறது பாகம் 02

பதிவர் மது (தமிழ் புங்கா)
பதிவர் மது அண்ணனை பததிவுலகுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் பதிவர் சந்திப்பு 01 ன் பின்னரே அவரும் ஒரு பதிவர் என அறிந்து கொண்டேன். விளம்பரம் இல்லாமல் பதிவிடும் ஒருவர்.

என்னிடம் ஒரு அன்பான விமர்சனத்தையும் சொன்னார். ஏன் நீங்கள் உங்கள் பதிவில் அடிக்கடி சிங்கம் என்பதை பயன்படுத்துகிறீர்கள்? அதை எடுத்துவிடுங்கள் என.

ஒரு வேளை அரசியல் பக்கம் சிந்திக்கிறாலோ என எண்ணிக்கொண்டேன். மற்ற மாதிரி போட்டா இன்னும் டேஞ்சர் ஆயிடுமே?
இருந்தாலும் தமிழரின் தன்மானத்தை சொல்லி தப்பிக்கொண்டேன்.

இருப்பினும் அவரின் கருத்துக்கு மதிப்பளித்துது இன்றிலிருந்து சிங்கம் தூக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க சந்திப்பில் பரிமாறிய வடையின் தயாரிப்பாளரும்,இயக்குனரும் மது அண்ணா தான் என்கிற பிந்தியசெய்தி ஒன்றும் கிடைத்தது.

சாப்பிடும் போதே நல்லாயிருந்த வடையைஇந்த செய்தி கேட்டவுடன் மீண்டுடும் ஒரு முறை இரைமீட்டிக்கொள்ளமுயற்சித்தேன்.அவர் வடை சுட்ட அனுபவத்தை ஒருரு தனிப்பதிவில் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

பதிவர் சுபாங்கன்.
சந்திப்பின் இறுதியில் ஆறுதலாக பேசிக்கொண்டோம்.


ஐந்தறைப் பெட்டிக்காரன் என்பதால் அடிக்கடி சமயலறைப் பக்கம் சென்றுவந்தார்.
தன்னை முதலாவதாக பின்தொடரந்தவர் நான் எனவும் தற்போது தன்னை பின் தொடர்பவர்கள்100ற்கும் அதிகமானோர் எனவும் சொல்லிக்கொண்டார்.

அதாவது எனது ராசி நல்ல ராசி என்பதே அதன் உள் சித்தாந்தம்.
என்னில் எனக்கே ஒரு சந்தேகத்தை இவ்விடயம் ஏற்படுத்தியிருந்தாலும் கிருத்தியம் முகுந்தன் அண்ணாவிடம் சொல்லி சரிபாரக்க வேண்டும்.

பதிவர் யோ வோய்ஸ்
மொக்கை, சீரியஸ் எந்தப் பதிவாக இருந்தாலும் பின்னூட்டுவதில் இலங்கையிலிருந்து வெளிநாடுகள் வரை பிரபல்யமானவர் . சிறந்த பதிவர்.சந்தித்ததில் மகிழ்ச்சி. அவசரத்தில் வந்து அவசரத்தில் கிளம்ப முயற்சித்தார்.


பதிவர் ஊரோடி
பெயருக்கேற்றாற் போல் ஊரோடி இவர். முதல் சந்திப்புக்கு யாழிலிருந்து வந்தார். இம்முறை நெதர்லாண்டிலிருந்து வந்தார்

சந்திப்பு மேல் அவர் வைத்திருந்த பற்றும் , மரியாதையும் என்னை அவருடன் பேசத் தூண்டினாலும் பண்டிக் காய்ச்சல் பீதியால் சிரிப்புடன் மட்டுறுத்தி விட்டேன்.

பதிவர்சந்ரு.

பல பின்னூட்டங்களள் வாயிலாக சந்தித்துக்கொண்ட சந்ரு அண்ணனை நேரில் சந்தித்த மகிழ்ச்சி. ஒரு சீரியஸ் பதிவரை சந்தித்தது அதை விட மகிழ்ச்சி.


பதிவர் பங்குச் சந்தை.
எனக்கு அடிக்கடி மெயிலில் பங்குச்சந்தை,பங்குச் சந்தை என மெயில் வர நானும் யாரோ மாறிஅனுப்புறாங்கள் எனஎண்ணியிருந்தேன். பின்பு தான் பங்குச் சந்தை பதிவர் என அறிந்து கொண்டேன். பாப்பம் ஏறுதா?இறங்குதா எண்டு? ( பங்குச் சந்தை நிலவரம்)


பெண்கள் பக்கம்

பெண்கள்பக்கமாக ஒரு சிலரே வருகை தந்திருந்தனர்.

பல பெயரறியாதவர்கள் ,முத்தபதிவர்கள், விடுபட்டவர்கள் அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி.
அடுத்த சந்திப்பு எங்கே?எப்போ?அங்கே நேரில் சந்திப்பம்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 02

இலங்கைப் பதிவர் சந்திப்பு -02 இம்முறை வெகு சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. ஒரு உறைப்பு, இரண்டு இனிப்பு எனும் விகித அடிப்படையில் உணவு பரிமாறப்பட்டது.

ஏற்பாட்டுக்குழுவினர் 13ம் திகதி, கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் இடம்பெறும் என அறிவித்திருந்தினர்.

13ம் திகதி என அறிவிக்கப்பட்டதுமே அதற்கு விளக்கம் தேடிய இலங்கன், பலரின் நம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் திகதி தெரிவு செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டேன்.(அண்மையிர் 13 பி பார்த்தின் தாக்கம்)இருந்தாலும் கிருத்தியத்தாரின் கண்களுக்கு இந்த விடயம் அகப்படாதது புதுமையே.

13ம் திகதி வீட்டிலிருந்து சந்திப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போதே நண்பன் கோபி கைப்பேசியில் தொடர்பு கொண்டு, வரும் போது இரண்டு கத்தரிக்கோலை கொண்டுவரும்படி பணித்திருந்தார்.

ஏற்கனவே 13ன் பயத்திலிருந்த எனக்கு கத்தரியையும் தொடர்புபடுத்திய போது கபாளத்திலிருந்து அனைத்தும் கலங்கியது. ஒழுங்கமைப்புக் குழுவில் கெளபாய் அண்ணனும் இருப்பதால் ஒருவேளை அவர் ஏதாவது நறுக்கு விளையாட்டுக்களை ஏற்பாடு செய்தாரோ....? என்கிற மேலுமொரு சந்தேகத்தை உண்டுபண்ணியது.

சீ..சீ. பொது நிகழ்வு அப்படியிருக்காது என்றவாறு எதுக்கும் பாதுகாப்பாக மொட்டைக் கத்தரிக்கோல் இரண்டை எடுத்துக்கொண்டு தேசிய கலை இலக்கிய பேரவை மண்டபத்துள் நுழைந்தேன்.

மண்டப வாயிலிலே பதிவர் கோபி தனது இன்முகத்துடன் வரவேற்றார்.
கனககோபி, சுபாங்கன் ஒழுங்கமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபடியால் செயற்கையாக வரவழைக்கப்பட்ட ஒரு புன்சிரிப்பை முயற்சி செய்து கொண்டு அவர்களுக்்கு மேலும் இடைஞ்சல் கொடாமல் ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன்.

(இனி பதிவர் சந்திப்பு தொடர்பாக பலர் பலவிதமாக எழுதுவார்கள் என்பதால் பதிவர்களுடனான எனது சந்திப்பு, மற்றும் பார்வை)

புல்லட்
புல்லட் அண்ணனை பாரத்தவுடனேயே "கணவன் மனைவி மீது கொள்ளும் கோவத்தையொத்த செல்லக் கோவம்" எனக்கு உண்டாயிற்று.

காரணம் பதிவர் சந்திப்பு -01 ல் புல்லட் வழங்கிய அறிவுரையின் பிரகாரம் உங்கள் பதிவு பிரபல்யமாக காண்போர் எல்லோருக்கும் "ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்" என பின்னூட்ட சொன்னார்.
நானும் வம்புக்கு அவரிலேயே அதை ரெஸ்ற் பண்ணிப் பார்த்ததால் அவர் எனக்கு வைத்த ஆப்பையும், என்னுடைய தமிழில் பிழை பதிவை சரச்சைப் பதிவாக பிரகடனப்படுத்தியதையும், வில்லங்கமான பின்னூட்ட அடிகளையும் எண்ணியே இந்த கோபம்.

கனககோபி
ஏற்கனவே பள்ளியிலிருந்து அறிமுகமானவர் என்பதால், எமது கருத்துக்களும் கலந்துரையாடலும் மிகவும் நெருக்கமாவே இருந்தது.

இருப்பினும் தனது ஒவ்வோர் வேர்வைத்துளியையும் பதிவர் சந்திப்பு - 02 ஒழுங்கமைப்புக்காக சிந்தியிருந்ததை அவரது சேட் சொல்லிக் கொண்டது.
"நனைந்த சேட்டும், சிரித்த முகமும்...." ஆகா என்னுள் கவிதைப் பிரவாகமே ஊற்றெடுத்தாலும் ஒரு ஆணுக்காக எனது கவிதையை செலவிட நான் விரும்பவில்லை.

பதிவர் வந்தியத்தேவன்.
வந்தியண்ணாவைப் பற்றி கோபி மூலம் அறியப்பெற்றிருந்த நான் பதிவர் சந்திப்பு -01 லிலும் சந்தித்தனான்.


இருப்பினும் நேரில் அதிகம் பழகவில்லை. இருப்பினும் சந்திப்பில் "பெண்களும் பதிவுலகமும்" கலந்துரையாடலில் வந்தியண்ணா " பெண்களை அதிகம் கவிதை எழுத வேண்டாம்" என கூறிய போது நான் மனதிற்குள் அடக்கி வைத்திருந்ததை அப்படியே அவர் சொன்ன சந்தோசத்தில் ஒரு பலத்த சிரிபுடன் நானும் ஆதரித்தேன்.

ஏற்கனவே நண்பர் உருவர் கவிதையைப் பாத்து தூங்காமல் இருந்ததாகவும் சொல்லும் போது அதே நண்பர் அதை என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டு என் தூக்கத்தையும் கெடுத்ததை எண்ணிக்கொண்டேன்.

பதிவர் லோசன்.
லோசன் அண்ணாவை பதிவர் சந்திப்பு -01ல் சந்தித்திருக்கிறேன். அவருடன் பேச ஒரு மேலதிக சக்தி தேவைப்பட்டதால், நான் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட கனககோபியின் சிரிப்பையொத்த ஒரு புன்சிரீப்பை அவரை கண்டவுடன் பிரயோகித்துக் கொண்டேன்.

பயனுற பதிவெழுதல் பகுதியில் லோசன் அண்ணா "திவர்களை அவர்கள் இஸ்டப்படி எழுதவிடுங்கள்" என்று கூறியது எம்மை மேலும் பலப்படுத்தியது. காரணம் நான் பம்பல் பதிவை சார்ந்தவன் என்பதால் எங்கே பம்பல் பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் எனக்கு இருந்தது.

சந்திப்பு இறுதியில் லோசன் அண்ணாவும், அசோக்பரனும் உரையாடிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தேன். கவிதைப் பிரவாகம் பெருக்கெடுத்தாலும் கோபி முன்னுரிமையை பெற்றுக்கொண்டதால் அவருக்கு அதை டைவேற் பண்ணுகிறேன்.

மருதமூரான்.
மருதமூரான் அண்ணாவை முதல் சந்திப்பில் பாரத்ததிலிருந்துமுற்றிலலும் வேறுபட்டவராக காணப்பட்டார். போனமுறை கொஞ்சம் சீரியஸாக இருந்த மனுஷன் இந்த முறை வாயே திறக்கவில்லை.
காரணம் போனமுறை பட்ட அனுபவம்.

இருந்தாலும்இம்முறை தப்பிக்கொண்டார். காரணம் இம்முறை சப்ஜெக்டுக்கு வெளியே பேசப்பட்ட விடயம் இருக்கிறம் பத்திரிகை சர்ச்சை என்பதால் யாழ்தேவி தப்பிக்கொண்டது.

கெளபாய் .
கெளபாய் நீட்டலும் வழித்தலும் கூடாது" என்பதற்கு மாறாக போனமுறை சந்திப்பூ01ல் நீண்ட முடியுடன் காணப்பட்ட அண்ணன் இம்முறை பெக்கம் மாக மாறியிருந்தார்.

இவரா அது? இவரின்ர பதிவா அது? என்கிற பல கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.

லைவ் ஸ்றீம் சிங்கம் இம்முறையும் சிறப்பாக செய்தார் என வெளியில் இருந்து சொல்லிக் கொண்டார்கள்.

பதிவு நீண்டுவிட்ட படியால் பதிவர் சந்திப்பு -02 ன் கீழ் இரண்டு அடுத்த பதிவில்.

ஒருவர் லஞ்சம் வாங்க எப்படி கற்றுக்கொள்கிறார்? (நகைச்சுவை)

புதன் காலை லோசன் அண்ணாவின் விடியல் நிகழச்சி கேட்டுக்கொண்டிருந்த போது,
நிகழ்ச்சியில் யருமையான், அவசியமான ஒரு கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்.
அதாவதுஇலங்கையில் அதிகமாக லஞ்சம் வாங்குபவர் எந்தத் துறையினர்? ”; என.
புலர் தொடர்புகளை மேற்கொண்டு பல துறைகளை சுட்டிக்காட்டினர்.
ஆக மொத்தத்தில் எல்லாத்துறையினருமே லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற பொது முடிவுக்கும் வரமுடிந்தது.

நுpகழ்ச்சியை கேட்டாப்பிறகு சிங்கம் இலங்கன் ஒரு சமூக நோக்குடன்எப்படி இவ்வாறான உயர் பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்க கற்றுக்கொண்டார்கள்? ” என எனக்கு நானே கேள்வியை கேட்டபோது ஓர் அருமையான நகைச்சுவையான விடையும் பிறந்தது.
(நகைச்சுவைக்காக மட்டும்)

அதாவது சின்னவயசில பிள்ளையள் குழப்படி செய்தால் தாய் தந்தையர் டொபி வேண்டித்தாறன் குழப்படி செய்யாதே?

நீ நான் சொல்லுகிற படி நடந்தால் பிஸ்கட் வாங்கித் தருவன். ஏண்டு பிள்ளைகளுக்கு சின்னனிலேயே லஞ்சம் குடுத்துப் பழக்கினதால் தான் அதுகள் பெரிசா வளர்ந்து பெரிய பதவிக்கு வந்தாப்பிறகும் லஞ்சம் கேட்குதுகள்.

சுpன்னப்பிள்ளையளுக்கு சின்னனிலேயே அமைதியாக ஒரு விசயத்தை விளங்கப்படுத்தி அப்பிடி செய்யாதே இப்பிடிச் செய்யதால் இது நடக்கும் என்று விளங்கப்படுத்திறதை விட்டுட்டு பெற்றார் பஞ்சி அலுப்பைப் பாத்து அழுகிற பிள்ளையை அழாமல் செய்ய சொக்லேட் குடுத்தால் சிரிப்பான் என லஞ்சம் குடுத்துப் பழக்கறது.

புpன்னர் அந்தப்பிள்ளை வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு முன்னேறினால் பிறகு (லஞ்சம் தொடர்பான போதிய அறிவு இல்லாத அந்தப்பிள்ளை)
அந்தப்பிள்ளை பள்ளிக்கூடம் போகும் போது படிப்பிக்கிற ரீச்சர், பிள்ளை பாத்து நல்லாப்படிச்சால், கூட மாக்ஸ் எடுக்கிற பிள்ளைக்கு பெரிய பரிசு தருவன் என்றுஊக்கப்படுத்துகிறேன்என்கிற பேரில் பிள்ளைக்கு லஞ்சம் கொடுப்பார்.

(பின்னர் அந்தப்பிள்ளை லஞ்சத்தின் அருமை பெருமைகளை புரிந்துகொண்டு லஞ்சம் தொடர்பான போதிய அறிவை பெற்ற பின்னர்)
பிறிபக்ற்மாணவ தலைவன் ஆகிய பின்பு பள்ளியில் தெரிந்தவர்களை மன்னித்து தெரியாதவர்களுக்கு தண்டனை வழங்குதல், தெரிந்தவருக்கு முன்னுரிமை (தன்னுடன் நட்பானவர்களுக்கு) , அதிகாரம், அடிமைப்படுத்தும் தன்மை போன்ற அரசியல் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்கிறான்.

ஆத்தோடு ஏதாவதொன்றை பெற்றுக்கொண்டு (லஞ்சம் சார்ந்த) என்னைப் போன்ற மாணவர்களை பாடசாலை சுவரேறி பாய அனுமதிக்கிறான்.

புpன்னர் அந்த மாணவன் இவ்வாறாக பாடசாலை கல்லியை முடித்து வேலை தேடி உயர்மட்ட அதிகாரிகளுக்கு மேலாலையும் கீழாலையும் கொடுத்து பட்ட பிறகு,
ஓர் அரசாங்க அல்லது உயர் பதவியொன்றுக்கு வந்ததன் பின்னர் தான் குடுத்ததை பெற்றுக்கொள்ளவும், மேலும் பெற்றுக்கொள்ளவும் மிகத்திருத்தமாக தான் கற்றுக்கொண்ட விடயங்களை மக்களிடம் பிரயோகிக்கின்றான்.

இது தான் லஞ்சம் வாங்குபவன் எப்படி லஞ்சம் வாங்க பழகிக்கொண்டார் என்கிற ரகசியம்.

இலங்கையிலும் இந்தியன் தாத்தாவைப் போல் ஒரு இலங்கன் தாத்தா அவசியப்படுகிறது.

(என்னை சுவரேறி பாய அனுமதி தந்த எந்தவொரு மாணவ தலைவனையும் புண்படுத்துவதற்கான பதிவு இல்லை இது)

………………………………………………………………………..
ஞாபகத்திற்கு வரும் 13ம் திகதி பதிவர் சந்திப்பு சீசன்-2 அனைவரும் வருக. நானும் வாறேன்.

வன்னி இடப்பெயர்வுகள் (சொல்லப்படாதவை)

சிங்கம் வவுனியாவிற்கான தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது,
வவுனியாவில் இருக்கிற சில சொந்தங்கள் பந்தங்கள் வீடுகளுக்கும் போகவேண்டியிருந்தது.

அங்கே ஒவ்வொரு வீட்டிலயும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்கள் இருந்தன.(அதாவது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்த சொந்தங்கள் உறவிணைப்பின் மூலமாக தற்போது வவுனியாவில் இருக்கிறார்கள்)
இவர்களையும் சந்திக்க வாயப்புக்கிடைத்தது.


ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட துன்பங்களையும், அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

பெரிதாக சொந்தங்கள் ஒன்றுக்கும் பாரிய இழப்புகள் இல்லாவிட்டாலும் இறுதிநேரம் வரை வன்னியிலிருந்தவர்கள் என்பதால் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு குண்டுகளின் பெயரையும், அவற்றின் தன்மை, விமானங்களின் பெயர்கள், அவற்றிலுள்ள குண்டுகளின் எண்ணிக்கை இவையனைத்தும் விமானம் ஓடுறவனுக்கு தெரியுமோ தெரியாது ஆனால் வன்னியிலிருந்து வந்த சிறுவர்களுக்குக் கூட தெரியும்.


இடம்பெயர்ந்த மக்களிடத்தில் ஒரு வித சலிப்புத் தன்மையும், விரக்கியும் அவர்கள் பேசுகின்ற பேச்சின் மூலமாக தெரிந்து கொள்ளமுடிந்தது.
ஏதோ ஒரு சன்னியாசி,துறவிகள் பேசுகின்ற மாதிரி அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.

மக்கள் இடம்பெர தொடங்க முன்னமே பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை காத்துக்கொள்ள இளவயதினர்க்கு திருமணம் வலுக்கட்டயாமாக செய்து வைத்திருக்கிறார்கள்.(இங்கிருந்து காப்பாற்றிக் கொள்ள)


பின்னர் இறுதிக்கட்ட இடப்பெயர்வின் போது யுத்த சூனியப்பிரதேசமாகன அறிவிக்கப்பட்ட இடங்கள், வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலுமே குண்டுகள் வந்து விழுந்ததாம்.(ஆங்கே இருந்து)
இங்கே ஆங்கே என்பவற்றின் விரிவை அவற்றின் முதல் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்)

காயம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களிள் வைத்தியசாலையில் குண்டு வீழ்ந்து பலர் இறந்ததாகவும் சொன்னார்கள்.(மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மதித்த கதை)

சாப்பாட்டுத் தட்டுப்பாட்டை பற்றி நான் கேட்க ஒருவர் சொன்னதுசெல் குண்டுகளால் பாதிக்கப்பட்டதை விட தான் சாப்பாட்டால் தான் அதிகம் பாதிக்கப்பட்டது என.

அதாவது முள்ளிவாய்க்காலில் தேங்காய் 1500 ருபாவுக்கு விலை போன நேரத்திலை சிலர் தங்கடை கழுத்திலை காதிலை இருந்ததை குடுத்து தேங்காய், சீனி வாங்கினதுகளாம்.(வங்கிகள் செயற்படாமல் இருந்த சமயம்)

வாகனம் வைச்சிருந்த சிலர் தங்களுடைய வாகனங்களை கொடுத்து வான் வைச்சிருந்தவர்கள் தங்களுடைய வானை கொடுத்து 5 தேங்காய் வாங்கியதாகவும், ஆட்டோவைக் கொடுத்து 1ஃ2 கிலோ சீனி வாங்கினதாகவும் சொன்னார்கள்இ

இப்படி பல வியப்பான சம்பவங்கள்.

எந்தப் பக்கத்திலிருந்து சனத்துக்கு அதிகம் பாதிப்பு என நான் ஒரு துணிவான கேள்வி கேட்க,"இங்கிருந்தும் சுட்டார்கள்ஆங்கிருந்தும் சுட்டார்கள்:என்றனர்.இங்கே ஆங்கே என்பவற்றின் விரிவை அவற்றின் முதல் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்

துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும் என்கிற சினிமாப்பட டயலொக்குகளின் உண்மைத்தன்மையை உணரமுடிந்தது.
கடைசி நேரத்திலை மனிதர்கள் மிருகங்களானதையும், மிருகங்கள் மனிதரானதையும் பார்த்தாக சொன்'னார்கள்.

அவர்கள் உருகச் சொல்லிக்கொண்ட விடயம் இனியொரு யுத்தம் வேண்டாம் என்பதை தான்.தாங்கள் அவ்வளவு பாதிக்ப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இனியும் நாங்கள் தன்மானம், வீரம் பேசுறதை நிறுத்தி இடம்பெயர்;த மக்களுக்கு ஆறுதல் சொல்லுவோம்.

அவர்கள் வழமை நிலைக்கு விரைவில் வர பிரார்திப்போமாக. இனிவரும் சந்ததியாவது துப்பாக்கி அறியாத சந்ததியாக உருவாகட்டும்.

பதிவர் சந்திப்பு - சீசன் - 2

ஆகா ஆரம்பிச்சிட்டாங்கய்யா

இரண்டாவது பதிவர் சந்திப்பு..


மீண்டும் தலைநகரில் பதிவர் சந்திப்பாம்.
முதல் சந்திப்பில் நம்ம பதிவர், அறிவிப்பாளர் லோசன் அண்ணா சொன்ன மாதிரி குளு குளு ஏசியில் 2ம் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்தேன்.

முதல் தடவை பிளானிங் கொஞ்சம் பிசகினதால் பலரின் கைகள் கடித்ததாக அறியக்கிடைத்தது.

எனவே இந்த முறை ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கிறம் பேப்பர் நிறுவனத்தினர் என்பதால் பதிவர்களின் கைகள் கடிக்காது என நம்பலாம். ரொம்ப நல்லா பிளான் பண்ணியிருப்பாங்க..

இருப்பினும் இந்தத் தடவை என்னால் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால்.
இருப்பினும் ஓர் ஆர்வக் கோளாறால் கிளியரன்ஸ்க்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

பலரின் கருத்துப் படி குறைந்தது 1 மாதமாவது ஆகும் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு..

இருந்தாலும் ஓர் சப்பாசையில் முன் பதிவு செய்கிறேன்.

முக்கியமாக
இந்தச் சந்திப்பில்
யாழ் தேவிக்கு பெயர் மாற்றம்,
விசைப்பலகை வம்புகள்,
அ கர , உ கர , இ கர வம்புகள் இராது என நம்பலாம்.

நானும் ஓர் வேண்டுகோள் விடுக்கிறேன்
நிறைய பதிவர்கள் பாதுகாப்பில்லாமல் எழுதி வருவதால், அவர்களை பாதுகாக்க ஒரு "பதிவர் நல வாரியம்" அவசியப்படுகிறது.

இந்த பதிவர் சந்திப்பு-2 ஐ ஒழுங்க படுத்தியவர்கள் ஆராய்வார்கள் என நம்பலாம்.
இவ்வாறு ஒரு பதிவர் நல வாரியத்தை ஆரம்பித்தால்
பதிவர்கள் தங்கள்,
திருமணத்திற்கு,
பிரயாணத்திற்கு,
அவசியத் தேவைக்கு,
பிரசவத்திற்கு,
பதிவர் நல வாரியத்தை நாடலாம்.
அங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.

இது என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்து.

அத்தோடு நான் முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மடிக்கணணி வாயிலாக நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது இது எனக்கு அதிகப்படியான விடயமாக தோன்றியது. (இதற்கு செலவு செய்யும் பணத்தில் ஒருவருக்கு தலா 5, 6 வடை, பற்றீசை வழங்கியிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்)

ஆனால் தற்போது தூரத்தில் இருக்கும் போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே சத்தியமாய்ச் சொல்கிறேன். வடை, பற்றீஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளும் படி ஒழுங்கமைப்பாளர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது நடக்க நம்ம கௌ பாய் அண்ணனும் அருள் பாலிக்க வேண்டும்.

போனமுறை இவரின் கை தான் அதிகமாகக் கடித்தது என அறியக்கிடைத்தது.

பதிவர் சந்திப்பு - 1 விட பதிவர் சந்திப்பு - 2 சிறப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்தித்து கொள்கிறேன்.


என்னிடம் வந்த அழகு, காதல், பணம், கடவுள்...

மீண்டும் பதிவர் கோபி என்னை வம்புக்கு அழைத்திருக்கிறார். அதாவது ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்.
அழகு, காதல், பணம், கடவுள்


அழகு
என்னிடம் இல்லாத விடயங்களில் இதுவும் ஒன்று.
தற்போதைக்கு அழகு என்றால் அது பக்கத்து வீட்டு சகானா தான்.
அதாவது பக்கத்து வீட்டில் இருக்கும் வெறும் நான்கு வயது நிரம்பிய சகானா என்கிற குழந்தை.

பொதுவாக எல்லா குழந்தைகளும் அழகு தான். சூது, வாது தெரியாத பொய், களவு அறியாத பருவம் குழந்தை பருவம்.

எல்லா மனிதனும குழந்தையாக இருக்கும் போது ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள்.
அவர்களிடம் எந்த வஞ்சகமும் இருக்காது.
எனவே என்னை பொறுத்தவரை தறந்போதைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சகானா என்கிற குழந்தையின் செல்லச்சிரிப்பிலும், செல்ல குறும்பிலும் மட்டுமே அழகை காணமுடிகிறது.

காதல்
சிங்கத்திற்கு பாடசாலை காலத்திலிருந்து இன்று வரை எந்தவொரு காதல் என்கிற அசம்பாவிதமும் நடந்ததே இல்லை.
காரணம்
பாடசாலை காலத்தில் நானும் எனது சகாக்களும் இணைந்து செய்யும் குறும்பு வேலைகளிலேயே எனது பாடசாலை காலத்தை வீணடித்து விட்டதால்,
அதாவது
எங்கே களவாக இளநீர் குடிக்கலாம், எங்கே பெண்களின் சாப்பாட்டுப் பெட்டியை திருடி தின்னலாம், யாருடைய சைக்கிளில் வால்கட்டை புடுங்கலாம்,
போன்ற சமூக சேவைகளில் நானும் எனது சகாக்களும் ஈடுபட்டு வந்ததால் இந்த காதல் கத்தரிக்காயில் ஈடுபட ரைம் கிடைக்கவில்லை.
அத்தோடு எங்கடை கிளாசில படிச்ச எல்லா பெண்களிடமும் நிறைய காசு கடன் வாங்கியிருக்கிறேன் இற்றை வரை திருப்பி கொடுக்கவில்லை.
எனவே அவளவையின் கண்களுக்குள் நான் மாட்டுப்படவும் சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் நான் அவர்களின் கண்களுக்கு கடன்காரனாக மட்டுமே தான் தெரிவேன்.
ஆக மொத்தத்தில் காதல் என்னோடு சம்பத்தப்படாத விடயம்.பின்னர் ஏலெவலுக்கு வந்தாப்பிறகு கூடப்படிக்கிற பொடியன்கள் தங்களுடைய காதல் கதைகளை சொல்லி உசுப்பேத்த பாப்பினம் அப்பவும் சிங்கம் அசந்ததே இல்லை.
என்னைப் பொறுத்தவரை காதல் என்'பது பல பிரச்சனைகளை கொண்ட சிக்கலான கட்டமைப்பு.
ஒரு ஆண், பெண் ஆகிய மூலக்கூறுகள் இணைந்து காதல் என்கிற சிக்கலான கட்டமைப்பை உருவாக்குவது கடினம்.
ஆக மொத்தத்தில் எனக்கு இயலாத, கடினமான, வேண்டாத வேலலைதான் காதல்.
இந்தத் தொழிலில் ஈடுபட துணிவு மிக அவசியம். அது நம்மிடம் நிச்சயமக இல்லை என்பது உலகறிந்ததே.

பணம்.
பணம் இல்லாதவர் பிணத்திற்கு சமம்.
பணம் பத்தும் செய்யும் என பல பழமொழிகள் உண்டு.
என்னைப் பொறுத்தவரை பணம் அதிக பிரச்சனை தருவது நடுத்தர வர்க்கத்திற்கே.
ஏழை மனிதனொருவர் தனது ஒரு நாள் தேவைக்கே பணம் தேடுகின்றான். அவன் அதற்கு மேல் தேட நினைப்பதுமில்லை தேடவும் முடியாது.
ஆனால் நடுத்தர வர்க்கத்தினரையே பணம் பந்தாடுகிறது.
கிரடிட் காட்
வங்கி லோன்
இன்கூரன்ஸ் போன்ற ஆபத்தை விளைவிக்க வல்ல அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவே உருவாக்கப்பட்டது.
சடுத்தர வர்க்கத்தினரை அலை பாய வைத்து அவர்களை சிப்பிலியாட்டுவது பணம் தான்.
கடவுள்
கடவுள் என்பது எங்கட வீட்டில் இருக்கின்ற ரோல் பிளக்கை போன்றது. அதாவது எங்கள் வீட்டு ரோல் பிளக்கில் கரண்ட் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை அதைப் போல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை என்னால் இற்றை வரை உணர முடிவதில்லை.
அண்மையில் கடவுளிடம் மனமுருக இரண்டு விடயத்துக்'காக வேண்டிக் கொண்டேன்.
அதில் ஒன்று நடந்து விட்டது. மற்றையது நடக்கவில்லை.
ஆக மொத்தத்தில் கடவுள் என்பது பத்தாம் வகுப்பு கணிதப்புத்தகத்தில் உள்ள நிகழ்தகவு பாடம் தான்.
சுருங்கச் சொல்லின் உலகம் என்கிற கணிதப் புத்தகத்தில் கடவுள் என்'பது ஒரு நிகழ்தகவு பாடம்.
இதை தொடர பதிவர் தங்க முகுந்தனை அன்போடு அழைக்கின்றேன். நாள், நட்சத்திரம் பார்த்து அவர் பதிவிடுவார் என நம்புகிறேன்.


நம்மகிட்ட தேவதையா? (தொடர் விளையாட்டு)

பதிவர், நண்பன் கோபி ஒரு தொடர் விளையாட்டில் என்னை அழைத்து வம்பில் மாட்டி விட்டதாலும், இனி அவர் இவ்வாறானதொரு தொடர் விளையாட்டுக்கு அழைக்கக் கூடாதென்பதற்காகவும் இந்தப்பதிவு.

10 வரங்களைத் தரக்கூடிய தேவதை என் முன்னால் தோன்றினால் நான் என்னென்ன வரம் கேட்பேன் என்பது தான் இந்த தொடர் விளையாட்டு.

முதலாவது வரம் நான் கேட்கும் ஒரே ஒரு சீரியஸ் வரம்

1. முகாம்களில் இருக்கும் சொந்தங்கள் வெளியே வரவேண்டும் என எல்லோர் கேட்பதும் எப்போது நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் முகாம்களில் இருக்கும் வரை அவர்கள் இருப்பிடத்திற்குள் மழையே வரக்கூடாது. அதிக வெயில் அடிக்கக்கூடாது. நல்ல சுவாத்தியமான காலநிலை இருக்க வேண்டும். இதுவே என் சீரியஸ் வரம் இனி என் பம்பல் வரங்கள்


2. "வோசிங் மெசின்" கேட்பேன். (இது தொடர்பாக முழு விளக்கம் தர வேண்டிய அலசியம் இல்லை இது பற்றி ஒரு பதிவே இட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் என் இரண்டு இடுகைகளுக்கு முன்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.)

3. கிரிக்கெற் வீரர்கள் முரளி, சச்சின், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை நேரில் பார்க்க வேண்டும். அதிலும் முரளி, சச்சின் ஆகியோரிடம் அன்பால் ஒரு சின்ன செல்லக் கடி கடிக்க வேண்டும். ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரை கேவலமாக, ஆக்ரோசமாக, கோவமாக திட்டி நறுக்கென ஒரு கோவக்கடி கடிக்க வேண்டும்.

4. இனி நான் எடுக்க இருக்கும் எல்லா பரீட்சைகளிலும் சித்தியடைய வேண்டும்.

5. தற்போது நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் இங்கு பல கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதால் நான் விளையாடுகின்ற எல்லா போட்டிகளிலும் சராசரி ஓட்டமாக ஒரு 15 ஆவது பெற வேண்டும். குறைந்தது ஒரு விக்கெட் ஆவது வீழ்த்த வேண்டும்.

6. இதுவும் ஒரு சீரியஸ் வரம் யாழ்ப்பாண தனியார் பஸ் அதுவும் பண்டத்தரிப்பு- யாழ்ப்பாண பஸ்ஸில் நடத்துனர்கள் பிரயாணிகளை அளவாக பஸ்ஸில் ஏற்ற வேண்டும். (பண்டத்தரிப்பு-யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஒருவர் ஏறினால் யாழ்ப்பாணத்தில் இறங்கும் போது நிறம் மாறிய மனிதர்களாக தான் இறங்குவர். மண் வாசனையும் வீசும்)

7. ஒரு முறையாவது ஒரு சீரியஸ் பதிவு போடணும். நாளுக்கு என் பதிவை ஆயிரம் பேர் பாக்கணும். (என்ன தான் சீரஜயஸா எழுதினாலும் அது பம்பல் பதிவ ஆயிடுது)

8. ஒரு முறையாவது யாராவது கடன் கேட்கும் போது கடன் குடுக்கணும். அதே போல் நான் வாங்கிய கடன்கள் இனைத்தும் திருப்பி கொடுக்கணும்.

9. நான் பணத்தை செலவு செய்து பார்க்கும் சினிமா படங்கள் அனைத்தும் நல்ல படங்களாக இருக்க வேண்டும். (சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் நடிக்க வேண்டும் அதற்கு ஆர்.கே, ஜே.கே போன்றவர்கள் சினிமாவை விட்டு ஓடணும்)

10. நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரையாவது கையடக்க தொலைபேசிக்கு நல்ல கவரேஜ் கிடைக்கணும்.

இவையனைத்தும் வரம் என்பதற்கப்பால் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான்.


இதற்கு யாரும் வரம் தர தேவையில்லை. அவரவர் வேலையை அவரவர் செவ்வனே செய்தால் எல்லாம் நடக்கும். இதை நான் யாரும் தொடர விரும்பவில்லை காரணம் யாம் பட்ட துன்பம் வேறொருவரும் பட விரும்பவில்லை.


தும்மல் காதல்

யான் எனது வழமைக்கு மாறான எனது செயற்பாடாக புத்தகம் ஒன்றை வாசித்த போது (நறுந்தமிழ்) நறுந்தமிழ் என்பதை கவனமாக உச்சரிக்கவும். அப்புத்தகத்தில்தும்மலும் காதலும்என, திருக்குறளில் இடம்பெற்ற குறள்களுக்கான விளக்கத்தை ஒரு சிறு கதையாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

திருக்குறளில் இவ்வாறான சுவையான அம்சங்கள் இருப்பதை இப்புத்தகத்தை வாசித்ததன் பின்னரே அறியக்கிடைத்தது.

திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம், 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன். சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால், காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.

தற்போது என் மனதில் நிற்கும் குறள்கள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப்படும்

ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பாக்கு அறிந்து

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

அதாவது (விளக்கம்) இந்நான்கு குறள்களுக்குமான விளக்கம் ஒரு சிறு கதையாக.

இரண்டு காதலர்கள் (சிறு பிரச்சனையால் ) (ஊடலில்) ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் நீண்ட நேரம் இருக்கிறார்கள். (அருகருகில்) இருவருக்கும் சிறு சங்கடம் நீண்ட கதைக்காமல் இருப்பதால், எனவே இதை நீள விடாமடல் யாராவது ஒருவர் முதலில் கதைப்போம்என இருவரும் மனதளவில் நினைத்திருந்தும் இருவருக்கும் இன்னோர் பிரச்சனை. அதாவது

காதலனுக்கு தான் முதலில் கதைப்பதா? ஏன்கிற(“குஷிபிரச்சனை. அகம்புடிச்ச கழுதை ஈகோ)

காதலியின் பிரச்சனை வேறு, அதாவது காதலி தமிழிலக்கியம் படித்தவள்.

தமிழிலக்கியங்களிலே காதலர்கள் தொடர்பான ஒரு விடயம் இருக்கிறதாம். அதாவது எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர் ஆனால் காதலில் அதுவும் ஊடலில் தோல்லி அடைபவர் தான் வெற்றியாளர். எனவே இதன் படி தான் முதலில் கதைத்து ஊடலில் தோற்று தான் வெற்றிபெற்றால் காதலன் தோற்றுவிடுவான். காதலன் தோல்வியடைவது காதலியால் தாங்க முடியாது. எனவே அவளும் முதலில் கதைக்க தயங்குகிறாள். (இப்படியான நல்லெண்ணம் கொண்டகாதலிகள்என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)

எனவே யார் முதலில் கதைப்பது

காதலனுக்கு ஒரு யோசனை பிறந்தது தான் முதலில் தும்மினால் காதலி நூறு நூறு எனச் சொல்லுவாள் எனவே காதலி முதலில் கதைத்தவளாகுவாளென

(அதாவது அக்காலத்தில் ஒருவர் தும்மினால் அருகிலிருப்பவர் நூறு நூறு எனச் சொல்லும் வழக்கம் அப்படிச் சொன்னால் ஆயுள் கூடும் என்கிற மூட நம்பிக்கை.)

இதன் படி காதலன் தும்மியாயிற்று காதலி முதலில் கதைத்தவளாகிறாள். சட்டென காதலி அழத்தொடங்கிவிட்டாள். காரணம் யாதென காதலனுக்கு புரியவில்லை.

நீங்கள் நினைக்கலாம் காதலனை தோற்கடித்து விட்டேனே என்கிற நல்லெண்ணத்தில் அழுகிறாள் என நிச்சயமாக அப்பிடியில்லை

காதலன் தும்மியது, வேறொருத்தி காதலனை நினைத்ததால் தான் என எண்ணி அழுகிறாள்.
(எல்லா காதலிகளும் அறிமுகமாவது நல்லாத்தான் பிறகு தான் வில்லியாவது வழமையான தமிழ் சினிமா)

எனவே யார் அவள் என்றெண்ணி எல்லா பெண்களுக்கும் உரிய உயரிய பண்பானசந்தேகபுத்தியால் அழுகிறாள்.

பார்த்தீர்களா ! சிங்கங்களே உங்களுக்கு தும்முவதால் எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகும் என பார்த்தீர்களா!

ஏதோ அக்காலப் பெண் நீங்கள் தும்மியதால் யாரை நினைத்து தும்மினாய் என கேட்பாள்.

இக்காலப் பெண் நீங்கள் தும்மினால் உங்களக்குஎயிட்ஸ்என ஓடிவிடுவாள்.

ஆதற்காக தும்மல் வரும் போது தும்மாமல் மறைத்து விடாதீர் (காதலி அருகில் இருக்கும் போது)
அப்படி செய்தாலும் இன்னோர் பிரச்சனை

இதோ குறள்

தும்மச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
ஏம்மை மறைத்தீரோ என்று

அதாவது
நீங்கள் தும்மாமல் மறைத்தால் உங்கள் காதலி கேட்பாள் உங்கள் மேலே அன்பு கொண்டவள் உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்று தானே தும்மலை மறைத்தீர் என…..

எப்புடி….

உண்மையாக காதலன்கள் பாவமய்யா
உங்கள் துன்ப துயரங்களை இப்படியான குறள்களை படிக்கும் போது தான் உணரமுடிகிறது.

எனவே தும்மாதீர்தும்மாதீர்
வலு கவனம் தும்மல் வரும் இடங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தும்மல் வரும் இடங்கள்
தெகிவளை மிருக்காட்சிசாலை
வெள்ளவத்தை பீச் (புகையிரத புகை)
…………………………….
…………………………………….(தும்மல் வரும் இடங்கள் தெரிந்தவர்கள் வெற்றிடங்களை நிரப்பவும்.)

எனவே சிங்கங்கள் இடங்களை தெரிவு செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்)

நீ தும்மினால் உன்காதலி உன்னை கைவிடுவாள்
ஆன்றே வேறொருவர் கைபிடிப்பாள்
இது யான் யாத்த குறள்.


Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.