ஒளவை யார்!

ஒரு புத்தகத்திலை நல்லதொரு விசயம் படிச்சன். விசயம் என்னண்டா ஒ ள வையார் (ஒ ள வையார் இல்லீங்க அவ்வையார் “ஒள” அதாவது அவ்வன்னாவ விசைப்பலகையில காணவில்லை. அது தான் “ஒ” னாவையும் “ள” வையும் சேர்த்து அடிச்சிருக்கேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்க)

யாரோ ஒரு அரசரை திட்டி இரட்டை அர்த்தத்திலை ஒரு பாடல் பாடியிருக்கிறாங்களாம். அதில ஒரு இடத்திலை அரசரை புகழ்வது மாதிரி அரசரை விழித்து “எட்டே கால் லட்சணமே” என்று பாடியிருக்கிறார். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தமிழில் “அ” என்ற எழுத்து இலக்கம் (8) எட்டைக்குறிக்குமாம். அதோடு “வ” என்ற எழுத்து 1/4 (கால்வாசி) என்பதை குறிக்குமாம். எனவே “எட்டே கால்” 8 ¼ லட்சணம் என்றால் அவ லட்சணம். எப்புடி…..  

இன்னொரு இடத்திலை “எமனேறும் பரியே” “மட்டில் பெரியம்மை வாகனமே” என்று பாடியிருப்பார். இதன் அர்த்தம் “எமனேறும் பரியே” என்றால் எருமையே என்று அர்தமாம்.  

“மட்டில் பெரியம்மை வாகனமே” என்றால் மூதேவியின் வாகனமே என்று அர்த்தமாம்.  

(இம்சையரசன் 23 ம் புலிக்கேசிக்கும் இப்புடி ஒரு பாட்டு இருக்கு இரட்டை அர்த்தத்திலை)  

எந்தப் பெரிய அரசராக இருந்தாலும் இந்தம்மாவிடம் மாட்டித்தான் ஆக வேண்டும். இந்த அரசர் தன்னை புகழ்ந்து இந்தப்பாட்டு பாடியிருக்கு என்று நினைச்சிருப்பார். ஆனா அந்தப்பாட்டு தனக்கு வேட்டு வைக்கிற பாட்டு என்று தெரியேல்ல பாருங்க. இதை மாதிரி பல இடங்களில் இந்தம்மா தமிழோடு விளையாடியிருக்காங்க.  

உண்மையா அம்மாவுக்கும் ஒரு “கோட்டம்” கட்டத்தான் வேணும். சப்பா… மறுபடியுமா… நான் சொன்னது ‘ஒளவையார்” அம்மாவுக்கு… அது சரி குடும்பத்துக்கு ஒண்ணு இருந்தா போதும் தானே… அது தான் “வள்ளுவர் கோட்டம்” இருக்கே இதைச்சொன்னன்.  

இதே முறைய பின்பற்றி இப்ப எத்தனை கவிஞர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் மறைமுகமா இரட்டை அர்த்தத்தில சொற்போர் புரியிறாங்க…… ஆனா இப்ப வாற இரட்டை அர்த்தப்பாடல் என்று சொல்வது வேற விதமான இரட்டை அர்தமாயில்லயிருக்கு… யம்மாடி……

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.