ஒளவை யார்!

ஒரு புத்தகத்திலை நல்லதொரு விசயம் படிச்சன். விசயம் என்னண்டா ஒ ள வையார் (ஒ ள வையார் இல்லீங்க அவ்வையார் “ஒள” அதாவது அவ்வன்னாவ விசைப்பலகையில காணவில்லை. அது தான் “ஒ” னாவையும் “ள” வையும் சேர்த்து அடிச்சிருக்கேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்க)

யாரோ ஒரு அரசரை திட்டி இரட்டை அர்த்தத்திலை ஒரு பாடல் பாடியிருக்கிறாங்களாம். அதில ஒரு இடத்திலை அரசரை புகழ்வது மாதிரி அரசரை விழித்து “எட்டே கால் லட்சணமே” என்று பாடியிருக்கிறார். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தமிழில் “அ” என்ற எழுத்து இலக்கம் (8) எட்டைக்குறிக்குமாம். அதோடு “வ” என்ற எழுத்து 1/4 (கால்வாசி) என்பதை குறிக்குமாம். எனவே “எட்டே கால்” 8 ¼ லட்சணம் என்றால் அவ லட்சணம். எப்புடி…..  

இன்னொரு இடத்திலை “எமனேறும் பரியே” “மட்டில் பெரியம்மை வாகனமே” என்று பாடியிருப்பார். இதன் அர்த்தம் “எமனேறும் பரியே” என்றால் எருமையே என்று அர்தமாம்.  

“மட்டில் பெரியம்மை வாகனமே” என்றால் மூதேவியின் வாகனமே என்று அர்த்தமாம்.  

(இம்சையரசன் 23 ம் புலிக்கேசிக்கும் இப்புடி ஒரு பாட்டு இருக்கு இரட்டை அர்த்தத்திலை)  

எந்தப் பெரிய அரசராக இருந்தாலும் இந்தம்மாவிடம் மாட்டித்தான் ஆக வேண்டும். இந்த அரசர் தன்னை புகழ்ந்து இந்தப்பாட்டு பாடியிருக்கு என்று நினைச்சிருப்பார். ஆனா அந்தப்பாட்டு தனக்கு வேட்டு வைக்கிற பாட்டு என்று தெரியேல்ல பாருங்க. இதை மாதிரி பல இடங்களில் இந்தம்மா தமிழோடு விளையாடியிருக்காங்க.  

உண்மையா அம்மாவுக்கும் ஒரு “கோட்டம்” கட்டத்தான் வேணும். சப்பா… மறுபடியுமா… நான் சொன்னது ‘ஒளவையார்” அம்மாவுக்கு… அது சரி குடும்பத்துக்கு ஒண்ணு இருந்தா போதும் தானே… அது தான் “வள்ளுவர் கோட்டம்” இருக்கே இதைச்சொன்னன்.  

இதே முறைய பின்பற்றி இப்ப எத்தனை கவிஞர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் மறைமுகமா இரட்டை அர்த்தத்தில சொற்போர் புரியிறாங்க…… ஆனா இப்ப வாற இரட்டை அர்த்தப்பாடல் என்று சொல்வது வேற விதமான இரட்டை அர்தமாயில்லயிருக்கு… யம்மாடி……

அபூர்வ சக்திகள்

புராண காலத்து மனிதர்களிடம் பல விசேட சக்திகள் இருந்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. தொலைவில் நடப்பதை இங்கிருந்தபடியே கூறுவது, எதிர்காலத்தில் நடக்கப்போவதை இன்றே திட்டவட்டமாக கூறுவது, கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற பல ஞான சக்திகளை பண்டைய புராண காலத்தவர்கள் பெற்றிருந்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும் புராணங்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான சக்திகள் எல்லாம் உண்மையாகவே புராண காலத்தவர்கள் பெற்றிருந்தனரா? அல்லது இலக்கியங்கள், புராணங்கள் போன்ற நூல்கள் கதைகளை மெருகூட்டுவதற்காக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான யுக்திகளை கையாண்டுள்ளனவா? என பல சந்தேகங்களை எம்மிடம் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சக்திகள் எல்லாம் தற்காலத்தவர்களிடம் அதாவது நம்மில் யாரிடமாவது உள்ளதா? அல்லது இறைவனிடம் வரம் பெற்றவர்களிடம்; மட்டும் தான் இந்த சக்திகள் எல்லாம் இருந்ததா என ஆராய்வோம்.

பகவத்கீதை உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சஞ்சயனை பற்றி ஆராய்வோம். வெகு தூரத்தில் நடக்கும் பாரதப்போரை தனது கண் தெரியாத மாமனாரான திருதராஸ்டினருக்கு அவருக்கு அருகில் இருந்தபடியே போர்களச்செய்திகளை உடனுக்குடன் விளக்கி கூறும் இந்த சக்தியை பற்றி ஆராய்வோம்.

நம்மிடம் இரண்டு கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். அருகில் என்ன நடக்கின்றது என்று கூட சற்று திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இந்த சஞ்சயன் தொலைவில் நடக்கும் விடயங்களை சம்பாசனைகளுடன் கூடிய காட்சிகளாக அறிந்து கொள்ளும் சக்தி(அதாவது audio & video உடன் ) நமது தொலைக்காட்சிகளில் தூர இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது போலஸ சுருக்கமாக சொல்லப்போனால் நமது 3G கையடக்கத்தொலைபேசி தொடர்பாடல் போல.ஆனால் நாம் இதைப்பற்றி பண்டைய நூல்களை ஆதாரமாக கொண்டு ஆராய்ந்து பார்த்தால் நாம் பார்ப்பதற்கு உதவும் இந்த இரண்டு கண்கள் மட்டுமே கண்கள் இல்லையென்பதை யோக சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இடம்,காலம் முதலிய எல்லைகளை கடந்து நோக்கும் சக்தி வாய்ந்த கண்களும் மனிதனிடம் உள்ளது என்கிறது.

இதை அறியாத நமது மனம் சஞ்சயன் அவ்வளவு தொலைவில் எப்படி பார்கிறான்? அவர் எல்லாம் வல்லவரா? தூர திருஸ்டி என்பதெல்லாம் உண்மையானதா? இவையனைத்தும் நமது யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமானதா? என்ற பல கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றது. ஆனால் யோக சாஸ்திரம், இந்த தூர திருஸ்டி ஒரு அபுர்வமான சக்தி ஒன்றும் அல்ல. சர்வ வல்லமைக்கும் தூர திருஸ்டிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.அது ஒரு சாதாரண சக்தி தான். எந்த ஒரு மனிதனும் தீவிரமாக முயற்ச்சித்தால் இந்த சக்தியை மலர செய்ய முடியும் என்கிறது.

சில சமயங்களில் இயற்கையின் சில விசித்திர விளையாட்டினால் சில மனிதர்களிடம் இத்தகைய சக்திகள் சகஜமாகவே மலர்ந்து பிரகாசிக்கின்றன. இனி இத்தகைய விசேட சக்திகளை தற்காலத்தில் யாராவது பெற்றுள்ளார்களா? எனப்பார்ப்போம்.

ஆம், அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் டேட் ஸீரியோ. டேட் ஸீரியோ பற்றிய செய்திகளின் உதவியால் நாம் சஞ்சயனின் சக்தியை உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் சஞ்சயனின் காலம் புராதனம் ஆகிவிட்டது.

டேட் ஸீரியோ பல 1000 மைல்களுக்கு அப்பால் எதையும் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவராம். பார்பது மட்டுமல்ல பார்க்கும் நிகழ்ச்சிகளை அவரது கண்கள் சித்திரமாக பிரதிபலிக்கும் சக்தி பெற்றவையாம். நாம் இங்கிருந்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கின்றோம் நியோர்க் நகரில் வசிக்கும் அவரிடம் பாகிஸ்தானில், தற்ப்பொழுது என்ன match நடக்கிறது, யார் யார் துடுப்பெடுத்தாடுகின்றனர், எத்தனை ஓட்டங்கள் என்பதையெல்லாம் தமது அபுர்வ சக்தியால் அறிந்து கொள்ள முடியுமாம். (தொலைக்காட்சியின் உதவி இல்லாமல்)

இலங்கையில்
, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தற்பொழுது என்ன நிகழ்வு நடக்கின்றது என்று யாராவது கேட்டால் 5 நிமிடங்கள் கண்ணை மூடி தியானம் செய்வாராம். அவர் கண்ணை திறக்கும் போது அவரது கண்ணில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் அவரது கண்ணில் படமாக ஓடுமாம். Camera வின் உதவியால் அவரது கண்ணில் தெரியும் காட்சியை படமெடுக்கவும் முடியுமாம். ஆயிரக்கணக்கான அத்தகைய படங்களும் சித்திரங்களும் எடுக்கப்பட்டுள்ளன. டேட் ஸீரியோவின் கண்கள் வெகுதூரம் வரையிலும் எந்த விதமான நிகழ்ச்சிகளையும் பார்ப்பது மட்டுமன்றி சித்திரமாக படம் பிடித்துக்கொள்ளும் வல்லமை பெற்றதாம். (unlimited zooming) தற்கால நவீன கமராக்களை விட பல மடங்கு தொழில்நுட்பம் வாய்ந்தது.

இவ்வளவு சக்தி படைத்த இந்த மனிதரை பற்றி கூறும் போது இவர் கடவுள் பக்தி மிகுந்தவர், ஞானம் பெற்றவர் போல என்று நாம் எண்ணுவோம். ஆனால் வேடிக்கையை பாருங்கள் அவர் ஆத்ம ஞானியோ, ஞானப்பழமோ அல்லவாம். அவரது வாழ்க்கை முறையும் சாதாரண மனிதர்களைப் போல சாதரணமானது தானாம். ஆத்மா, கடவுள், சாதனை என்ற எதை பற்றியும் எதுவும் அறியாதவராம். ஆக அவரிடம் இருந்ததெல்லாம் ஒரு விசேட சக்தி. தூரதிருஸ்டி! அதே போலத்தான் சஞ்சயனும்.

இனி இன்னொரு விசேட சக்தியைப்பற்றி ஆராய்வோம். நாம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ‘விவேக்’ற்கு விபத்து ஏற்பட்டவுடன் பல புதிய சக்திகள் தோன்றுவதாக அதாவது மிருகங்கள் பேசுவது, பெண்கள் மனதில் நினைப்பது போன்றவற்றை அறிந்துகொள்ளும் சக்தி போன்ற பல விசேட சக்திகள் ஒவ்வொரு விபத்து ஏற்படவும் மாறி மாறி தோன்றுவதாக அந்த நகைச்சுவை காட்சி அமைந்திருக்கும்.

ஆனால் நாம் அதை நகைச்சுவைக்காக மட்டும் பார்த்து விட்டு நிறுத்தி விட்டோம். ஏனெனில் இது நகைச்சுவைக்கு பொருந்தும் ஆனால் மனிதனின் அன்றாட யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமாகாது என்று விட்டுவிட்டோம். ஆனால் இதைப்பற்றி நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் இவ்வாறான சில விபத்துக்களில் மாட்டிக்கொண்டு புதிய சக்தியை பெற்றுக்கொண்டவர்களும் நம்மில் சிலர் வெளியுலகுக்கு தெரியாமலே இருக்கிறார்கள்.

ஆம். சில வருடங்களுக்கு முன்பு ஸ்கண்டினேவியாவில் ஒருவர் கார் விபத்தினால் தலையில் பலத்த காயத்துடன் நினைவிழந்தார். மருத்துவமனையில் தன் நினைவை மீண்டும் அடைந்த போது, காயத்துடன் சம்பந்தப்படாத மற்றொரு சங்கடம் ஏற்பட்டது.அவர் காதுகளில் சதா சங்கீத ஒலி கேட்க ஆரம்பித்தது!தனக்கு மூளை கலங்கிவிட்டதோ என்று மிகவும் பயந்து விட்டார்,அந்த மனிதர்!ஆனால், ஓரிரு தினங்களில் இசை ஒலிகளை அடையாளம் கண்டு கொள்ளவும் புரணமாக சுய நினைவுடன் விசாரணை செய்யவும் முடிந்தது. ஆனால் இருபத்து நாலு மணிநேரமும் ‘‘non stop programme’’ செவியில் பல வித பரிசீலனைக்கு பிறகு, ஆராய்ச்சிகளுக்கு பிறகு தெரிய வந்த உண்மையென்னவென்றால் பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு வானொலி நிலையத்தின் ஒலி அலைகள் தான் அவர் கேட்டு வந்திருக்கிறார் என்பதும், அத்தகைய அதிசயமான சக்தியை அவர் காதுகள் பெற்றுள்ளன என்பதுமே.அவர் காதுகளை தீவிரமாக பரிசீலித்தார்கள். அவற்றில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆடிபட்ட காரணத்தினால் காதுகளில் மறைந்திருந்த ஏதோ ஒரு சக்தி வெளிப்பட்டு செயலாற்ற தொடங்கிவிட்டது! பாவம், அவருக்கு‘operation’ செய்ய நேரிட்டது. ஏனெனில் இருபத்து நாலு மணிநேரமும் தொடரும் நிகழ்ச்சிகளை ‘on off” செய்ய எந்த வித உபாயமும் தெரியவில்லை!

இதே போன்று ஜந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்குப் பகல் நேரத்திலேயே வான வெளியில் நட்சத்திரங்கள் தெரிந்தன! அவரும் மாடியிலிருந்து விழுந்த அடிபட்டுகொண்டவர். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. வேறு எங்கும் போவதில்லை சுரியனின் பிரகாசத்தினால் மறைந்திருக்கின்றன. இரவில் சிமிட்டுகின்றன, சுரிய ஒளி மறைந்தவிட்ட காரணத்தினால். ஆனால் சரியனின் பிரகாசத்தையும் மீறி கண்கள் பார்க்க முடிந்ததால் பகலிலும் தாரகைகளை பார்க்க முடியும்.அந்த பெண்மணிக்கும் ‘operation’ செய்ய வேண்டியதாயிற்று!

ஆக பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கும் சக்தியும் கண்களில் ஒளிந்திருக்கிறது. வெகு தூரத்தில் உள்ள வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்கும் சக்தியும் காதுகளில் ஒடுங்கியிருக்கிறது. கால தேச பரிணாமங்களை மீறிக் காணும் சக்திகள் புலனில் மறைந்திருப்பதற்கும் ஆன்மீகத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லை. இதிலிருந்து சந்தேகமின்றி சஞ்சயன் விசேட சக்தியுள்ள மனிதன்தான் என்பது புலனாகிறது.

விண்வெளி ஓடங்களை விண்ணுக்கு செலுத்தும் பல நாடுகள் மத்தியில் தற்போது ஓர் புதுப்பிரச்சனை கிளம்பியுள்ளது. என்னவெனில் இயந்திரத்தையே முழுமையாக நம்பி மனிதனை வானவெளிக்கு அனுப்புவது அபாயகரமானது. எனவே இதற்கு மாற்று வழியாக இந்த அபுர்வ சக்திகளை மனிதன் மத்தியில் எப்படி சுயமாக உருவாக்குவது என ஆராய்ச்சிகள் நடைபெறகின்றன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமிடத்து விண்வெளியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆக பண்டைய புராணங்களும், இலக்கியங்களும்,சாஸ்திரங்களும் பண்டைய காலத்தவர்கள் பலர் பெற்றிருந்ததாக கூறப்படும் இந்த அபுர்வ சக்திகள் உண்மையானவை தான் என பல ஆராய்ச்சிகளின் விளைவாக நாம் அறியக்கூடியதாகவுள்ளது.


ஆதாரம் - ஓசோவின் பகவத்கீதை ஒரு தரிசனம்Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.