தும்மல் காதல் (மீள்பதிவு)


யான் எனது வழமைக்கு மாறான எனது செயற்பாடாக புத்தகம் ஒன்றை வாசித்த போது (நறுந்தமிழ்) நறுந்தமிழ் என்பதை கவனமாக உச்சரிக்கவும். அப்புத்தகத்தில் “தும்மலும் காதலும்” எனஇ திருக்குறளில் இடம்பெற்ற குறள்களுக்கான விளக்கத்தை ஒரு சிறு கதையாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

திருக்குறளில் இவ்வாறான சுவையான அம்சங்கள் இருப்பதை இப்புத்தகத்தை வாசித்ததன் பின்னரே அறியக்கிடைத்தது.

திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம்இ 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன். சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால்இ காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.

தற்போது என் மனதில் நிற்கும் குறள்கள்

“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலில் காணப்படும்”

“ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம் தம்மைநீடு வாழ்க என்பாக்கு அறிந்து”

“வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்யார் உள்ளித் தும்மினீர் என்று”

அதாவது (விளக்கம்) இந்நான்கு குறள்களுக்குமான விளக்கம் ஒரு சிறு கதையாக.

இரண்டு காதலர்கள் (சிறு பிரச்சனையால் ) (ஊடலில்) ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் நீண்ட நேரம் இருக்கிறார்கள். (அருகருகில்) இருவருக்கும் சிறு சங்கடம் நீண்ட கதைக்காமல் இருப்பதால்இ எனவே இதை நீள விடாமடல் யாராவது ஒருவர் முதலில் கதைப்போம்என இருவரும் மனதளவில் நினைத்திருந்தும் இருவருக்கும் இன்னோர் பிரச்சனை. அதாவது

காதலனுக்கு தான் முதலில் கதைப்பதா? ஏன்கிற(“குஷி” பிரச்சனை. அகம்புடிச்ச கழுதை ஈகோ)
காதலியின் பிரச்சனைவீர்ருய்அதாவது காதலி தமிழிலக்கியம் படித்தவள்.
தமிழிலக்கியங்களிலே காதலர்கள் தொடர்பான ஒரு விடயம் இருக்கிறதாம். அதாவது எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர் ஆனால் காதலில் அதுவும் ஊடலில் தோல்லி அடைபவர் தான் வெற்றியாளர். எனவே இதன் படி தான் முதலில் கதைத்து ஊடலில் தோற்று தான் வெற்றிபெற்றால் காதலன் தோற்றுவிடுவான். காதலன் தோல்வியடைவது காதலியால் தாங்க முடியாது. எனவே அவளும் முதலில் கதைக்க தயங்குகிறாள். (இப்படியான நல்லெண்ணம் கொண்ட “காதலிகள்” என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)

எனவே யார் முதலில் கதைப்பது
காதலனுக்கு ஒரு யோசனை பிறந்தது தான் முதலில் தும்மினால் காதலி நூறு நூறு எனச் சொல்லுவாள் எனவே காதலி முதலில் கதைத்தவளாகுவாளென
(அதாவது அக்காலத்தில் ஒருவர் தும்மினால் அருகிலிருப்பவர் நூறு நூறு எனச் சொல்லும் வழக்கம் அப்படிச் சொன்னால் ஆயுள் கூடும் என்கிற மூட நம்பிக்கை.)
இதன் படி காதலன் தும்மியாயிற்று காதலி முதலில் கதைத்தவளாகிறாள். சட்டென காதலி அழத்தொடங்கிவிட்டாள். காரணம் யாதென காதலனுக்கு புரியவில்லை.
நீங்கள் நினைக்கலாம் காதலனை தோற்கடித்து விட்டேனே என்கிற நல்லெண்ணத்தில் அழுகிறாள் என நிச்சயமாக அப்பிடியில்லை
காதலன் தும்மியதுஇ வேறொருத்தி காதலனை நினைத்ததால் தான் என எண்ணி அழுகிறாள்.(எல்லா காதலிகளும் அறிமுகமாவது நல்லாத்தான் பிறகு தான் வில்லியாவது வழமையான தமிழ் சினிமா)
எனவே யார் அவள் என்றெண்ணி எல்லா பெண்களுக்கும் உரிய உயரிய பண்பான “சந்தேக” புத்தியால் அழுகிறாள்.
பார்த்தீர்களா ! சிங்கங்களே உங்களுக்கு தும்முவதால் எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகும் என பார்த்தீர்களா!
ஏதோ அக்காலப் பெண் நீங்கள் தும்மியதால் யாரை நினைத்து தும்மினாய் என கேட்பாள்.
இக்காலப் பெண் நீங்கள் தும்மினால் உங்களக்கு “எயிட்ஸ்” என ஓடிவிடுவாள்.
ஆதற்காக தும்மல் வரும் போது தும்மாமல் மறைத்து விடாதீர் (காதலி அருகில் இருக்கும் போது)அப்படி செய்தாலும் இன்னோர் பிரச்சனை
இதோ குறள்
“தும்மச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்ஏம்மை மறைத்தீரோ என்று”
அதாவதுநீங்கள் தும்மாமல் மறைத்தால் உங்கள் காதலி கேட்பாள் உங்கள் மேலே அன்பு கொண்டவள் உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்று தானே தும்மலை மறைத்தீர் என…..
எப்புடி….
உண்மையாக காதலன்கள் பாவமய்யா…உங்கள் துன்ப துயரங்களை இப்படியான குறள்களை படிக்கும் போது தான் உணரமுடிகிறது.
எனவே தும்மாதீர்… தும்மாதீர்…வலு கவனம் தும்மல் வரும் இடங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தும்மல் வரும் இடங்கள்தெகிவளை மிருக்காட்சிசாலைவெள்ளவத்தை பீச் (புகையிரத புகை)…………………………….…………………………………….(தும்மல் வரும் இடங்கள் தெரிந்தவர்கள் வெற்றிடங்களை நிரப்பவும்.)
எனவே சிங்கங்கள் இடங்களை தெரிவு செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்)
“நீ தும்மினால் உன்காதலி உன்னை கைவிடுவாள்ஆன்றே வேறொருவர் கைபிடிப்பாள்”இது யான் யாத்த குறள்.

தமிழ் வி(ஞ்ஞா)ண்ணான புரோபசர்மார்க்கு

கனம் மதிப்புக்குரிய விண்ணான தமிழ் புரோபசர்மார்க்கு
ஐயா வணக்கம்,
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் அவிஞ்சு போய் 2ம் முறையில் எப்பிடியாவது கரைசேர்வதற்கு முயன்றுகொண்டிருக்கும் அனுபவமிக்க மாணவன் நான் தங்களுக்கு எழுதும் (புலம்பல்) வேண்டுகோள் மடல் இது..

ஐயா கடந்த வருடம் இறுதி பரீட்சைக்கு சரியான ஆயத்தமில்லாமல் choice ஏ துணை என பரீட்சைக்கு சென்றேன்.

வினாத்தாளில் நான் விடையறிந்த இரு வினாக்கள் மட்டுமே காணப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு கேள்விக்கு என்னால் விடையளிக்கமுடியவில்லை. காரணம் விடை தெரியால் அல்ல.. நீங்கள் கேட்ட வினாவுக்கு குறிப்பிட்ட அந்த பாடத்தில் நான் பூரண தெளிவு பெற்றிருந்தும் உங்கள் கேள்வி எனக்கு புரியாததால் விடையளிக்க முடியவில்லை..
(கேள்வி மயக்கம், தங்களின் கடும் தமிழ் பிரயோகிப்பு)

அதாவது "கணிசமான" என்கிற ஒரு பதத்திற்கு கூடவா? குறையவா என்கிற சந்தேகத்தில் 20 புள்ளிகள் பறந்து போய்விட்டது. எனக்கு விடை தெரிந்ததே 2 கேள்விகளுக்கு மட்டும் தான் அதில் ஒரு கேள்வி தங்கள் தமிழ் புரியாததால் பறந்து போனது.

பரீட்சை வினாத்தாளில் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே? ஏன் கடும் தமிழை பிரயோகிக்கிறீர்கள்..? மேலதிகமாக நாம் இலக்கணமும் அல்லவா கற்க வேண்டிய தேவை உண்டாகிறது.

இது போக கடந்த வருட உயிரியல் வினாத்தாளில் 'காற்றிற் சுவாசம்", "காற்றில் சுவாசம்" இரண்டிற்குமான வேறுபாடு, விளக்கம் கேட்டிருந்தீர்கள்.

இங்கே "காற்றிற்", "காற்றில்" என்பதில் பாரிய மயக்கம் பரீட்சை மண்டபத்திலே ஏற்படுகின்றது.
காற்றில் என்பதை காற்றில்லாத போது எனக்கொள்வதா? காற்று + இல்(5 ம் வேற்றுமை) காற்றுள்ளபோது எனக்கொள்வதா? இதைப்போலவே காற்றிற் என்பதற்கும்...

இதே போல பல பதங்கள் இவற்றுக்கெல்லாம் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே..? ஏன் இந்த கடுந்தமிழ்.. பரீட்சை பேப்பரிலும் தமிழ் வாழணுமா? (இங்கே தமிழ் வாழ்கிறது அநியாயமாக இந்த கொடுந் தமிழால் நாங்கள் சாகின்றோம்)

இது போக உங்கள் வினாத்தாளிற்கான விடை மதிப்பீடு செய்யும் scheme ஒரு கேள்விக்கு வருடத்திற்கொரு விடை கொடுக்கிறது. ஒரு கேள்விக்கு பல விடை எதை நாங்கள் எழுதுவது.
எங்களுக்கென்றொரு பொதுவான புத்தகம் இருப்பின் அதன் படி விடையளிக்கலாம் ஆனால் அதுவும் இல்லை.
ஒவ்வொரு வாத்திமாரும் ஒவ்வொரு புத்தகத்தை பரிந்துரைக்கிறார்கள். எதைப் படிக்க?

புத்தகம் எழுதுகிறவர்கள் ஒவ்வொருவரும் தம் புலமையை வெளிக்காட்ட எழுதுகிறார்களே தவிர பரீட்சைக்கு தகுந்தாற்போல் எழுதுவதில்லை....

கடந்த வருடம், வினாத்தாளில் "புவிக்கு நைதரசன் கிடைக்கும் வழிகளை குறிப்பிடுக" என ஒரு கேள்வி இதற்கு பலர் இடி, மின்னல் என விடை கொடுத்திருந்தார்களாம்.

ஆனால் தாங்கள் இடி என எழுதப்பட்டிருப்பின் புள்ளிகள் வழங்கக்கூடாது என தெரிவித்திருந்தீர்களாம். இதற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் இடியும் மின்னலும் கிட்டத்தட்டவானவையாக இருப்பினும் மின்னல் தான் முன்னுக்கு வருவது ஆகவே மின்னல் தான் சரியானது என.

ஆனால் சகோதர மொழியில் இடி என எழுதப்பட்டதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டதாம். அங்கே வழங்குகிறார்கள் என்றால் நீங்களும் புள்ளிகள் வழங்கியிருக்கலாம் தானே...

இங்கேயும் உங்கள் தனித்துவமா? ஏற்கனவே தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு நிலை இதில் தாங்களில் ஞாய, தர்ம கட்டுப்பாடு, தனித்துவங்கள் இன்னும் எம்மை பாதிக்காதா...

இலங்கை கல்வி தரம் வாய்ந்தது நாங்களும் அறிவோம். ஆனால் இப்படியான விடயங்கள் தரத்தை தீர்மானிப்பதாக இராது.

உங்கள் கடுந்தமிழ்கள் நுண்ணங்கிகள், நோய்கள், விஞ்ஞான பெயர்களில் பிரயோகிக்கப்படாத வரை சந்தோசம்.

உங்கள் கடுந் தமிழ் தாங்க முடியாமல் தான் என்னமோ பலர் முதலாவது முறைக்கு பின்னர் லண்டன் ஏலெவலுக்கு ஓடுகிறார்கள். அங்கே நேரடியான கேள்விகள் தானாம்.

ஏற்கனவே சாதாரண பாடம் சித்தியடைந்தவர்களிவ் 80தமானவர்கள் தான் உயர்தரத்திற்கு வருகிறார்களாம். மிகுதி பேர் வெளிநாட்டு கல்வியை நாடுகிறார்கள்.

தங்களின் மேற்சொன்ன பிரச்சனைகள் அதிகரிப்பின் 80 வீதம் 40 வீதம் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐயா இது தங்களுக்கான கண்டன மடல் அல்ல ஓர் விண்ணப்ப மடல்.

தயவு செய்து கருணை காட்டவும்.

தங்கள் மறுமொழியை பரீட்சை வினாத்தாளில் எதிர்பார்த்த வண்ணம்தங்களின் உண்மையுடைய மாணவர்கள்.

தமிழ் வாழ்க எங்கள் பரீட்சை பேப்ரில் தவிர.....

ஓர் நாள் இரவு கள்ளனுடன்.... கற்றுத்தந்தது பாடம்......

காலம்:- 20 - 02 - 2010 .
இடம்:- வவுனியா

நேரம்:- சரியாகத் தெரியவில்லை....

மாடிப்படியில் யாரோ இடறியோடுகிற சப்தம், மர இலைகள் உலுக்கப் படுகிற சப்தம், நாய் குரைக்கும் சப்தம் இவை கணநேர தொடர் நிகழ்வுகள்....

திடுக்கிட்டுப் போனேன்...

உஸ்... அமைதி..

மீண்டும் யாரோ வீட்டை நோக்கி வருவது போல் தோன்றுகிறது...

கனவா ?... பிரம்மையா..... என எண்ணியவாறு உறுதிப்படுத்திக்கொள்ள என் உடம்பில் கிள்ளிப் பாரக்க முயற்சிக்கிறேன்...
பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது...
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்..
ம் ஹீம்.. முடியவில்லை... பின்னர் ஓர் கடுமையான விசையை பிரயோகித்து கிள்ளிப் பாரக்கிறேன்... ஆம் நிஜம் தான்...

இவற்றுக்கிடையில் மீண்டும் காலடிச் சப்தம்... கால், கைகள் உணர்விழந்து காணப்படுகின்நது..
படக்... படக்.. நெஞ்சு..

வழமையாக இரவில் பூட்டும் வெளிக்கதவை பூட்ட மறந்தது ஞாபகம் வருகிறது... ஆ... மீண்டும் பின்னுக்கு ஏதோ தடக்குப் படும் சப்தம்...

இதயம் "ஊறவைத்த அரிசியை கல்லுரலில் இடிப்பதைப் போல்" துடிக்கிறது.. திருடன் தான் என ஊகிக்கிறேன்...

ஒரு வேளை பேய்? ஆகா நேற்று முன்வீட்டு ஆசாரி சொன்ன பாதிரியார் கதையும் ஞாபகத்திற்கு வருகிறதே.... ச்சீ...
என்றாலும்.... ?..
இவற்றை விட வேற்றுக்கிரக வாசிகள் .. மேலதிக ஓர் ஊகிப்பு...

நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை... அருகிலுள்ள தம்பியை எழுப்ப முயல்கிறேன்...
எதற்கும் தூக்கத்திலே புரள்வது போல் (காட்டிக்கொள்ளாமல்) அவனருகிலே செல்கிறேன்...
மீண்டும் கடும்விசையை பிரயோகித்து பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இணைப்புக்கொடுத்து கிள்ளி எழுப்புகிறேன்... மெதுவாக...

" டேய் ஏதோ சப்தம் கேட்குது....." என்கிறேன்...
அவன் " என்னது .. நித்திரை வராட்டி ஏதாவது எடுத்துப்படி சும்மா சின்னப்பிள்ளையள் மாதிரி ..." என சினக்கிறான்...

காரணம் முன்னொருமுறை அந்த ஆங்கிலப் படத்தை பாரத்ததிலிருந்து ஒருவருமே கொஞ்ச நான் இரவில் வெளியில் வெளிக்கிடுவதில்லை... அப்ப நான் கொஞ்சம் துணிவாக எல்லோரையும் வெருட்டிப் பார்த்தேன்..
இப்படி 2, 3 தடவை வெருட்டிய ஞாபகம்.
எனவே இவன் அதைப் போல் தான் எண்ணுகிறான்....
இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சிக்கிறேன்... அவனிடமிருந்து அதிகாரம் பலக்க, இது வேலைக்காவாது என எண்ணியவாறு நான் மீண்டும் எனது பொய்சனுக்கு வருகிறேன்.....

தம்பி மீண்டும் வழமைக்கு திரும்புகிறான்(குறட்டை) .

கைப்பேசியில் நேரத்தை பாரப்போமா?..
நோ....... ஒரு வேளை கைப்பேசி வெளிச்சம் என்னை அடையாளம் காட்டிவிட்டால்...?
கைப்கேசியை தலையணைக்கருகில் வைத்துவிடுகிறேன்...

திடீரென..
டிங்.. டொய்.. டிங்.. ... கைப்பேசி...." attention... your battery is too low" என்கிறது...
" இதய அடிப்பு கணிதத்தில் வருகிற அத்தனை வரைபுகளையும் காட்டியது.."

ஊகிப்பு 2 பேய்.. எனக்கு விடும் "message" "ஆக இருக்குமோ..?
பயத்தின் உச்சத்தில் மாடியில் உறங்கும் சுதன் அண்ணனை உரத்து கூப்பிட முயல்கிறேன்.....

சு.....
இதற்கு மேல் நாவு இசைய மறுக்கிறது... வேறென்ன காத்துத்தான்.
..ஸ்.. ஸ்..

வேறு வழியின்றி வழமைபோல் மேலிடத்திற்கு பிரார்தனையில் இறங்குகின்றேன்.....

"மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக நம்புகின்றேன்.. இச்சக்தியை சிவன் என்றும் , அல்லா என்றும், கிறித்து என்றும் ஒவ்வொருவரும் அழைக்கின்றனர் அந்தச் சக்தியே என்னை காப்பாத்து"....
என புத்திசாலித்தனமான வேண்டிக்கொள்கிறேன்...

சற்று நேரம் மன பாரம் ,பயம் கொஞ்சம் குறைந்த உணர்வு...
இதய துடிப்பு ஓரளவு இழிவுப்புள்ளியை அடைந்து சீராகின்றது...
அப்போது ஆன்மீகத்தின் மகத்துத்தையும் உணர்கின்றேன்.

மனப்பாரத்தை கடவுளிடம் இறக்கிவிட்ட நிம்மதி ..

சட்டென
மீண்டும் யாரோ பின்பக்கம் சருகுகளிற்கிடையே அரையும் சப்தம்.. மனத்திரையில் "டக் டிக் பொய்சனில் .." அரைவதாக தோன்றுகிறது...

சுயமாக எந்த முடிவும் எட்ட முடியவில்லை....
ஈற்றில் தூக்கம் போலவே பாவனை செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறேன்... ( யாரென சரியாக முடிவெடுக்க முடியாதலால்.)

டேய் இலங்கன் உயிரா? பொருளா முக்கியம் என சமன் செய்து சீர்தூக்கின் உயிரே ... உயிரே.. என முடிவெடுத்து போர்வைக்குள் உயிரையும் வெளியே சப்தத்தையும் அவதானித்தவாறு படுத்துக்கொள்கிறேன்..

"மனித கேள்தகவெல்லையிலும் கூடிய குறைந்த ஒலிகள் யாவும் காதில் கேட்கின்றன.."

நீருக்குள் தம் புடித்து இருப்பது போல் ஓர் உணர்வு...
விடியட்டும் பாப்பம்...

கொஞ்சம் நிலம் வெளிக்க எழுப்பி வெளியில் வருகிறேன்....

எனக்கு முன் இருவர் பக்கத்து வீட்டு வேலியோரமாக கதைத்துக்கொள்கின்றனர்.. தீர விசாரிக்கையில் முன் ரோட்டு கடை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாம்......
வீதியில் யாரோ இதை அவதானித்து துரத்திக்கொண்டு வர , நாய்களும் இணைய வழி தெரியாமல் திருடர்கள் திக்கின்யி ஓடியிருக்கிறாரகள்..

அதில் ஓரிருவர் தான் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்திருக்கின்றனர்... என ஊகிக்க முடிந்தது...

ஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்......
இருப்பினும் இவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆன்மீகத்தில் பிரார்தனையின் மகத்துவம், பேயக்காட்டு விளையாட்டு பின்னர் ஆபத்தில் கைகொடுக்காது என்கிற பாலர் வகுப்பு படிப்பினை கதையையும் உறைக்கும் படி உணர்த்திற்று....

மு.கு:- வவுனியா தொழிநுட்ப நகரமாக்க அறிவித்ததிலிருந்து திருட்டுக்கள்,கொள்ளைகள் அதிகரித்துவிட்டன...

முக்கியமாக சைக்கிள் திருட்டுக்கள் தான் அதிகம் எங்கள் வீட்டிலிருந்தும் இரண்டு சைக்கிள்கள் திருடருக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது இலங்கை வங்கிக்கு முன்னால்..........

வள்ளுவர், தும்மல்காதல், எயிட்ஸ்,

(இந்த பதிவு காதலர் தினத்தை முன்னிட்டு காதலன்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஓர் மீள்பதிவு)

யான் எனது வழமைக்கு மாறான எனது செயற்பாடாக புத்தகம் ஒன்றை வாசித்த போது (நறுந்தமிழ்) நறுந்தமிழ் என்பதை கவனமாக உச்சரிக்கவும்.

அப்புத்தகத்தில் “தும்மலும் காதலும்” என, திருக்குறளில் இடம்பெற்ற குறள்களுக்கான விளக்கத்தை ஒரு சிறு கதையாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

திருக்குறளில் இவ்வாறான சுவையான அம்சங்கள் இருப்பதை இப்புத்தகத்தை வாசித்ததன் பின்னரே அறியக்கிடைத்தது.

திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம், 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன்.

சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால், காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.

தற்போது என் மனதில் நிற்கும் குறள்கள்,

“ஊடலில் தோற்றவர் வென்றார்
அதுமன்னும்கூடலில் காணப்படும்”

“ஊடி இருந்தோமாத் தும்மினார்
யாம் தம்மைநீடு வாழ்க என்பாக்கு அறிந்து”

“வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்யார்
உள்ளித் தும்மினீர் என்று”

அதாவது (விளக்கம்) இந்நான்கு குறள்களுக்குமான விளக்கம் ஒரு சிறு கதையாக.

இரண்டு காதலர்கள் (சிறு பிரச்சனையால் ) (ஊடலில்) ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் நீண்ட நேரம் இருக்கிறார்கள். (அருகருகில்)

இருவருக்கும் சிறு சங்கடம் நீண்ட கதைக்காமல் இருப்பதால், எனவே இதை நீள விடாமடல் யாராவது ஒருவர் முதலில் கதைப்போம்என இருவரும் மனதளவில் நினைத்திருந்தும் இருவருக்கும் இன்னோர் பிரச்சனை.
அதாவது
காதலனுக்கு தான் முதலில் கதைப்பதா? ஏன்கிற(“
குஷி” பிரச்சனை. அகம்புடிச்ச கழுதை ஈகோ)
காதலியின் பிரச்சனை வேறு, அதாவது காதலி தமிழிலக்கியம் படித்தவள்.

தமிழிலக்கியங்களிலே காதலர்கள் தொடர்பான ஒரு விடயம் இருக்கிறதாம். அதாவது எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர் ஆனால் காதலில் அதுவும் ஊடலில் தோல்லி அடைபவர் தான் வெற்றியாளர்.

எனவே இதன் படி தான் முதலில் கதைத்து ஊடலில் தோற்று தான் வெற்றிபெற்றால் காதலன் தோற்றுவிடுவான். காதலன் தோல்வியடைவது காதலியால் தாங்க முடியாது. எனவே அவளும் முதலில் கதைக்க தயங்குகிறாள். (இப்படியான நல்லெண்ணம் கொண்ட “காதலிகள்” என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)

எனவே யார் முதலில் கதைப்பதுகாதலனுக்கு ஒரு யோசனை பிறந்தது தான் முதலில் தும்மினால் காதலி நூறு நூறு எனச் சொல்லுவாள் எனவே காதலி முதலில் கதைத்தவளாகுவாளென(அதாவது அக்காலத்தில் ஒருவர் தும்மினால் அருகிலிருப்பவர் நூறு நூறு எனச் சொல்லும் வழக்கம் அப்படிச் சொன்னால் ஆயுள் கூடும் என்கிற மூட நம்பிக்கை.)

இதன் படி காதலன் தும்மியாயிற்று காதலி முதலில் கதைத்தவளாகிறாள். சட்டென காதலி அழத்தொடங்கிவிட்டாள். காரணம் யாதென காதலனுக்கு புரியவில்லை.
நீங்கள் நினைக்கலாம் காதலனை தோற்கடித்து விட்டேனே என்கிற நல்லெண்ணத்தில் அழுகிறாள் என நிச்சயமாக அப்பிடியில்லைகாதலன் தும்மியது,
வேறொருத்தி காதலனை நினைத்ததால் தான் என எண்ணி அழுகிறாள்.(எல்லா காதலிகளும் அறிமுகமாவது நல்லாத்தான் பிறகு தான் வில்லியாவது வழமையான தமிழ் சினிமா)
எனவே யார் அவள் என்றெண்ணி எல்லா பெண்களுக்கும் உரிய உயரிய பண்பான “சந்தேக” புத்தியால் அழுகிறாள்.

பார்த்தீர்களா ! சிங்கங்களே உங்களுக்கு தும்முவதால் எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகும் என பார்த்தீர்களா!

ஏதோ அக்காலப் பெண் நீங்கள் தும்மியதால் யாரை நினைத்து தும்மினாய் என கேட்பாள்.இக்காலப் பெண் நீங்கள் தும்மினால் உங்களக்கு “எயிட்ஸ்” என ஓடிவிடுவாள்.

ஆதற்காக தும்மல் வரும் போது தும்மாமல் மறைத்து விடாதீர் (காதலி அருகில் இருக்கும் போது)அப்படி செய்தாலும் இன்னோர் பிரச்சனைஇதோ
குறள்
தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்
உள்ளல்ஏம்மை மறைத்தீரோ என்று

அதாவதுநீங்கள் தும்மாமல் மறைத்தால் உங்கள் காதலி கேட்பாள் உங்கள் மேலே அன்பு கொண்டவள் உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்று தானே தும்மலை மறைத்தீர் என…..

எப்புடி….உண்மையாக காதலன்கள் பாவமய்யா…உங்கள் துன்ப துயரங்களை இப்படியான குறள்களை படிக்கும் போது தான் உணரமுடிகிறது.

எனவே தும்மாதீர்… தும்மாதீர்…வலு கவனம் தும்மல் வரும் இடங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
தும்மல் வரும் இடங்கள்
மிருக்காட்சிசாலை
வெள்ளவத்தை பீச் (புகையிரத புகை)
…………………………….…. , ………………………………….
(தும்மல் வரும் இடங்கள் தெரிந்தவர்கள் வெற்றிடங்களை நிரப்பவும்.)

எனவே சிங்கங்கள் இடங்களை தெரிவு செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்)
“நீ தும்மினால் உன்காதலி உன்னை கைவிடுவாள்
அன்றே வேறொருவர் கைபிடிப்பாள்”

இது யான் யாத்த குறள்.

2010 பரபரப்பும், கிளிநொச்சி பேயும்

2010 தொடக்கமே பல பரபரப்பு…
சூரிய கிரகணத்தில் தொடங்கி வேற்றுக்கிரக வாசி, மாயமான வெளிச்சங்கள் வரை..

இது வரையும் தோன்றிய கிரகணங்களை விட மிகத்தெளிவாகத் தெரிந்தது இம்முறை கிரகணம்.
இம்முறை சூழலின் மந்தமான நிலையிலேயே கிரகணத்தை உணரமுடிந்தது.

கிரகணம் தோன்றிய அந்நாளில் அதற்கான விளக்கங்களும், சாத்திரம், சம்பிரதாயங்கள் என அன்றைய தினம் ஒரே பரபரப்பு.

சில கோவில்கள் கிரகண நேரத்தில் திறக்கக் கூடாது என பூட்டப் பட்டிருந்ததும், சில கோவில்களில் விசேட பூசைகள் எனவும் ஒவ்வொரு கோவில்களும் தங்களுக்குத் தாங்களே புதிய சாத்திரங்களையும் வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

இன்னொரு சாத்திரி கிரகண நேரத்தில் “ உணவு கூடாது” என சமயச்சாத்திரங்களுக்கும் விஞ்ஞானத்திற்குமான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி எனது அன்றைய மதிய உணவுக்கு தடா போட்டது என பல சமாச்சாரங்கள்.

ஆன்றைய நாள் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே புதிய புதிய சாத்திரங்களை சொல்லிக்கொண்டதும், ராகு காலங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதும் என கிரகண நாள் கடும் கலகலப்பு..

படம்.


இது ஓய்ந்த பின் வேற்றுக்கிரக வாசிகள், மாயமான வெளிச்சற்கள் என பல அமானுஸ்யங்கள்….

ஒரு சாரார் பறக்கும் தட்டு எனவும், இன்னொரு சாரார் சாத்தான்களின் சதி இவையனைத்தும் எனவும் வரையறுத்தனர்.
இது போதாது என பதிவர் சந்ரு அண்ணனும் காலடித் தடங்களை ஆதாரம் காட்ட பதிவுலகும் பரபரப்பு…

புpன்னர் இவற்றுக்கு விளக்கம் கொடுக்க, ஆதாயம் தேட முனைந்த சிலர் கிரகமாற்றங்கள், உலக ருத்ரத்தை எடுத்துக் காட்டி, மேலும் வேற்றுக்கிரக வாசிகள் கிரகங்களின் அழிவை உணர்ந்ததால் தமக்கு பாதுகாப்பு தேடி வேற்றுக்கிரகத்துக்கு இடம்பெயர முனைகின்றனர் என விஞ்ஞானிகளை மெச்சும் அளவுக்க விளக்கம் கொடுத்தனர்.

இன்னும் சிலர் சாத்தான்களின் சதி தான் இவையனைத்தும், சுனாமி போன்ற இயற்கை அழிவுகளை எடுத்துக்காட்டி இவை யாவும் சாத்தான்களின் சதி பூலோகத்திற்கு சாத்தானின் அச்சுறுத்தல் எனவே எமது மதத்திற்கு வந்து பிரார்தனையில் ஈடுபடுங்கள் 5 கிலோ சீனியும், மாவும் தருகிறோம் என பிரசாரம் செய்கின்றனர்.

ம் …..


இது இப்படியிருக்க
மீள்குடியேறிய மக்கள் பல பேய்களை தமது வீடு, வளவுகளை சுத்தப் படுத்தும் போது கண்டார்களாம்….


இனி மீள்குடியேற்றத்தின் பின் இந்த பேய் பிசாசுகளை வைத்து எத்தனை திருடர்களும், காவலர்களும் தமது “திருட்டு”விளையாடல்களை நடாத்தப் போகிறார்களோ…?

பேயை வைத்து பேய்களின் கூ+றையாடல்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும்
பேய் இருக்கா? இல்லையா? அது வாறதுக்கு முன்னால ஏதாவது அறிகுறி தெரியுமா? ஏல்லாப் பேய்க்கும் ஒரே வடிவம் தானா?...

அதே சந்ரமுகி கேள்வி…?

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.